Published:Updated:

ஏர் இந்தியாவில் இன்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கலாமா?

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஏர் இந்தியா பொறியியல் சேவை நிறுவனம், ரயில் சக்கரத் தொழிற்சாலையில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

job
job

தான்பத் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசிரியரல்லாத பணிகள்

ஜார்க்கண்ட் மாநிலம், தான்பத் (Dhanbad) எனுமிடத்தில் அமைந்திருக்கும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (முன்பு இந்தியச் சுரங்கங்களுக்கான பள்ளியில் (Indian school of Mines) என்று அழைக்கப்பட்டு வந்தது) காலியாக இருக்கும் 191 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு

1. துணைப் பதிவாளர் (Deputy Registrar) – 3 (பொது – 2, ஓபிசி – 1)

2. உதவிப் பதிவாளர் (Assistant Registrar) – 8 (பொது – 5, ஓபிசி – 2, ஈடபிள்யூஎஸ் -1)

3. இளநிலை உதவியாளர் (Junior Assistant) – 74

(பொது – 24, ஓபிசி – 22, எஸ்சி – 11, எஸ்டி – 7, ஈடபிள்யூஎஸ் -10)

4. இளநிலை தொழில்நுட்பப் பணியாளர் (Junior Technician) – 106

(பொது – 46, ஓபிசி – 28, எஸ்சி – 15, எஸ்டி – 7, ஈடபிள்யூஎஸ் -10)

job
job

கல்வித் தகுதி

துணைப் பதிவாளர் (Deputy Registrar) - 55% மதிப்பெண்களுக்குக் குறையாமல் ஏதாவதொரு முதுநிலைப் பட்டம் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியில் 9 ஆண்டுகள் அல்லது உதவிப் பதிவாளர் பணியில் 5 ஆண்டுகளுக்குக் குறையாத அனுபவம்.

உதவிப் பதிவாளர் (Assistant Registrar)- 55% மதிப்பெண்களுக்குக் குறையாமல் ஏதாவதொரு முதுநிலைப் பட்டம் மற்றும் மேற்பார்வையாளருக்குக் குறையாத நிலையில் அரசு அலுவலகம் / பல்கலைக்கழகம்/ தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்குக் குறையாத அனுபவம்.

இளநிலை உதவியாளர் (Junior Assistant) -55% மதிப்பெண்களுக்குக் குறையாமல் ஏதாவதொரு இளநிலைப் பட்டம் மற்றும் கணினியில் அலுவலகப் பயன்பாடு, எம்.எஸ்.வேர்டு, எக்செல், பவர்பாயின்ட் போன்றவற்றில் அனுபவம், ஆங்கிலத்தில் 40 w.p.m அல்லது இந்தி மொழியில் 35 w.p.m எனும் வேகத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் திறன்.

இளநிலை தொழில்நுட்பப் பணியாளர் (Junior Technician) மூன்று வருட கால அளவிலான சிவில், கெமிக்கல் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் பாடங்களிலான பொறியியல் பிரிவில் 55% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பட்டயம் அல்லது (Chemistry) பாடத்தில் இளநிலைப் பட்டம் (B.Sc) மற்றும் இரண்டு ஆண்டுக்காலப் பணி அனுபவம் அல்லது மேற்காணும் பொறியியல் பிரிவுகளிலான தொழிற்பயிற்சி நிலையப் பயிற்சியில் தேசியத் தொழிற் சான்றிதழ் மற்றும் 5 வருட பணி அனுபவம்.

வயது வரம்பு

துணைப் பதிவாளர் - 50, உதவிப் பதிவாளர் - 40, இளநிலை உதவியாளர் மற்றும் இளநிலைத் தொழில்நுட்பப் பணியாளர் – 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்சி / எஸ்டி / ஓபிசி / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் படைவீரர்கள் போன்ற பிரிவினருக்கு உரிய வயது தளர்வு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்நிறுவனத்தின் www.iitism.ac.in எனும் இணையதளத்தில் `Recruitment' எனும் பக்கத்துக்குச் சென்று இந்தப் பணிகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

துணைப் பதிவாளர் மற்றும் உதவிப் பதிவாளர் பணிகளுக்கு ரூ.1000, இளநிலை உதவியாளர் மற்றும் இளநிலைத் தொழில்நுட்பப் பணியாளர் பணிகளுக்கு ரூ.500 என்று விண்ணப்பக் கட்டணம் செலுத்திட வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 4-11-2019

தேர்வு முறை

எழுத்துத் தேர்வு, கணினித் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் வழியாகத் தேர்வு செய்யப்படுவர். துணைப்பதிவாளர் பணிக்கு நிலை 12, உதவிப் பணியாளர் பணிக்கு நிலை 10, இளநிலை உதவியாளர் மற்றும் இளநிலைத் தொழில்நுட்பப் பணியாளர் பணிகளுக்கு நிலை 3 பணிகளுக்கான சம்பளம் கொண்ட சம்பளம் ஏற்ற முறையில் (Scale of Pay) சம்பளம் வழங்கப்படும்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.iitism.ac.in எனும் இந்த நிறுவனத்தின் இணையதளத்துக்குச் செல்லலாம்.

ஏர் இந்தியா பொறியியல் சேவை நிறுவனத்தில் உதவி மேற்பார்வையாளர் பணிகள்

இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தின் கீழான ஏர் இந்தியா பொறியியல் சேவை நிறுவனத்தில் (Air India Engineering Services Ltd) காலியாக இருக்கும் பல்வேறு நிலைகளிலான 1,700 உதவி மேற்பார்வையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு

கிழக்கு மண்டலம் – 15, மேற்கு மண்டலம் – 80, வடக்கு மண்டலம் – 50, தெற்கு மண்டலம் – 25 என்று மொத்தம் 170 உதவி மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. தெற்கு மண்டலத்தில் பொது - 8, எஸ்சி - 4, எஸ்டி – 2, ஓபிசி – 8, ஈடபிள்யூஎஸ் – 3 என்று மொத்தம் 25 பணியிடங்கள் இருக்கின்றன.

கல்வித் தகுதி

1. ஏதாவதொரு இளநிலைப் பட்டம் அல்லது கணினிப் பயன்பாட்டுப் பணியில் ஓர் ஆண்டுக்குக் குறையாமல் அனுபவம்

(அல்லது)

2. மூன்று வருட கால Aircraft Maintenance Engineering அல்லது கணினி அறிவியல் பட்டயம்

வயது வரம்பு (1-8-2019 அன்று)

பொது – 33, ஓபிசி – 36, எஸ்சி, எஸ்டி - 38 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.

job
job

எப்படி விண்ணப்பிப்பது?

ஏர் இந்தியா நிறுவனத்தின் www.airindia.in எனும் இணையப் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் இப்பணிகளுக்கு இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். பொது, ஈடபிள்யூஎஸ் மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000/-, எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் படைவீரர்கள் ரூ.500/- என்று விண்ணப்பக் கட்டணம் செலுத்திட வேண்டும். இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 5-11-2019

தேர்வு முறை

இணைய வழியிலான திறன் தேர்வு (Online Skill Test) மூலம் இந்தப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதத்துக்கு ரூ. 19,570/- சம்பளம் வழங்கப்படும்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.airindia.in எனும் இந்நிறுவனத்தின் இணையதளத்துக்குச் செல்லலாம் அல்லது இந்த நிறுவன அலுவலகத்தின் பணியாளர் துறை (Personnel Department) தொலைபேசி 011-25667895, 25652442 எனும் எண்களில் தொடர்புகொண்டு பெறலாம்.

ரயில் சக்கரத் தொழிற்சாலையில் வேலைபழகுநர் பணிகள்

பெங்களூரிலுள்ள ரயில் சக்கரத் தொழிற்சாலையில் (Rail Wheel Factory) ஏழு வகையான தொழிற்பிரிவுகளின் கீழ் 192 வேலை பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தொழிற்பிரிவுகள் மற்றும் இட ஒதுக்கீடு

1. Fitter- 75

2. Machinist - 31

3. Machinist Motor Vehicle – 8

4. Turner - 5

5. சிஎன்சி புரோகிராமிங் மற்றும் ஆபரேட்டர் – 23

6. Electrician – 18

7. Electronic Mechanic - 22

என்று 192 வேலைபழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

இவற்றில் பொது – 98, ஓபிசி – 51, எஸ்சி – 29, எஸ்டி – 14 என்று இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.

job
job

கல்வித் தகுதி

பத்தாம் வகுப்பு 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொடர்புடைய தொழிற்பிரிவில் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (15-11-2019)

15 வயதுக்குக் குறைவில்லாமலும், 24 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். எஸ்சி எஸ்டி – 5, ஓபிசி – 3 ஆண்டுகள் என்று வயது தளர்வு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த நிறுவனத்தின் https://rwf.indianrailways.gov.in/ இணையதளத்துக்குச் சென்று இந்தப் பணிகளுக்கான தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து, முழுமையாகப் படித்துப் பின்னர், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் (Annexure A முதல் Annexure D வரையிலான படிவங்களை நிரப்பி, அதனுடன் “Principal Financial Adviser, Rail Wheel Factory” எனும் பெயரில் Bangalore எனுமிடத்தில் மாற்றிக்கொள்ளக்கூடியதாக ரூ.100/-க்கான அஞ்சலாணையினைப் பெற்று இணைத்து, The Senior Personnel Officer, Personnel Department, Rail Wheel Factory, Yelahanka, Banglore - 560064; எனும் முகவரிக்குப் பதிவு அஞ்சலில் அனுப்பி வைத்திட வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் (PWD) மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: 15-11-2019.

ஏர் இந்தியாவில் இன்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கலாமா?

தேர்வு முறை

பத்தாம் வகுப்பு மற்றும் தொழிற்பயிற்சித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வேலைபழகுநர் தேர்வு செய்யப்படுவர். தேர்வுப் பட்டியல் 16-12-2019 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும். இப்பழகுநர் பணிகளில் சிஎன்சி புரோகிராமிங் மற்றும் ஆபரேட்டர் பிரிவுக்கு ரூ.12,261, மற்ற பிரிவுகளுக்கு ரூ.10,899 மாத உதவித்தொகையாக வழங்கப்படும்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு

https://rwf.indianrailways.gov.in/ எனும் இந்த நிறுவனத்தின் இணையதளத்துக்குச் செல்லலாம்.