Published:Updated:

உச்சநீதிமன்றத்தில் காத்திருக்கும் உதவியாளர் பணிகள்! விண்ணிப்பிக்க ரெடியா?

பல்வேறு துறைகளில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் பகுதி இது!

  jobs
jobs

உச்ச நீதிமன்றத்தில் தனி உதவியாளர் பணிகள்

புதுடெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் 58 தனி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிட விவரங்கள்

Senior Personal Assistant – 35

Personal Assistant – 23

கல்வித்தகுதி

* ஏதாவதொரு பல்கலைக்கழகப் பட்டம், ஆங்கிலச் சுருக்கெழுத்தில் (100 W.P.M) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவதில் தட்டச்சு வேகம் (40 W.P.M) பெற்றிருக்க வேண்டும். Senior Personal Assistant பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மேற்காணும் மூன்று தகுதிகளுடன் Steno Grade – D அல்லது Steno Typist நிலையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

Job
Job

வயது வரம்பு

முதுநிலைத் தனி உதவியாளர் பணிக்கு 32 வயதுக்கு அதிகமாகாமலும், தனி உதவியாளர் பணிக்கு 27 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். எஸ்சி / எஸ்டி / ஓபிசி / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் படைவீரகள் போன்ற பிரிவினருக்கு உரிய வயதுத் தளர்வு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?

www.sci.gov.in எனும் இணையதளத்திற்குச் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300/-, எஸ்சி, எஸ்டி, முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150/- விண்ணப்பக் கட்டணம். இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 24-10-2019.

கூடுதல் தகவல்களுக்கு: இங்கே க்ளிக் செய்யவும்.

இந்திய உணவுக் கழகத்தில் மேலாளர் பணிகள்

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவுக் கழகத்தில் (Food Corporation of India) காலியாக இருக்கும் 330 மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிட விவரங்கள்

பொது, கிடங்கு, நகர்வு, கணக்குப்பதிவு, தொழில்நுட்பம், கட்டுமானப் பொறியியல், மின்னியல் மற்றும் இயந்திரப் பொறியியல், இந்தி என 8 நிலைகளிலான மேலாளர் பணியிடங்களில் வடக்கு மண்டலம் – 187, தெற்கு மண்டலம் – 65, மேற்கு மண்டலம் – 15, கிழக்கு மண்டலம் – 37, வடகிழக்கு மண்டலம் – 26 என்று மொத்தம் 330 பணியிடங்கள்.

ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, மாநிலங்களுடன், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய இந்திய அரசின் ஒன்றியப் பகுதிகளையும் உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் மட்டும் எஸ்சி - 12, எஸ்டி – 5, ஓபிசி – 15, ஈடபிள்யூஎஸ் – 4, பொது - 29 என்று மொத்தம் 65 மேலாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

கல்வித்தகுதி

மேற்காணும் 8 நிலைகளிலான பணியிடங்கள் ஒவ்வொன்றுக்கும் தேவையான கல்வித்தகுதி மற்றும் அனுபவங்கள் குறித்த தகவல்கள் தனித்தனியாகத் தகவல் குறிப்பேட்டில் தரப்பட்டிருக்கின்றன.

job
job

வயது வரம்பு (1-8-2019 அன்று)

இந்தி பிரிவு தவிர்த்து பிற மேலாளர் பணிகளுக்கு 28 வயதுக்கு அதிகமாகாமலும், இந்தி பிரிவு மேலாளர் பணியிடத்திற்கு 35 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிப் பிரிவினருக்குக் கூடுதலாக 10 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த இணையப் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து, விண்ணப்பதாரர் இருப்பிடமிருக்கும் மண்டலப் பகுதியைத் தேர்வுசெய்து, அதன் வழியாக இப்பணிகளுக்கான தேர்வுகளை நடத்தும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தின் (Institute of Banking Personnel Selection) எனும் இணையப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் இருப்பிடமிருக்கும் மண்டலப்பகுதியில் இருக்கும் பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.800. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 27-10-2019.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் துணை மேலாளர் பணிகள்

இந்திய அரசின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் தன்னாட்சி நிறுவனமான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (National Highways Authority of India) காலியாக இருக்கும் 30 துணை மேலாளர் (தொழில்நுட்பம்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இட ஒதுக்கீடு

பொது – 3, எஸ்சி - 4, எஸ்டி – 2, ஓபிசி – 8, ஈடபிள்யூஎஸ் – 13

கல்வித்தகுதி

Civil Engineering பிரிவில் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், GATE’ 2019 தேர்வில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

job
job

வயது வரம்பு (31-10-2019 அன்று)

30 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்களுக்கு இந்திய அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?

www.nhai.gov.in எனும் இணையதளத்தில் இடம் பெற்றிருக்கும் Recruitment → Vacancies → current எனும் பக்கத்திற்குச் சென்று, Deputy Manager (Technical) → Online Application வழியாக விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31-10-2019.

கூடுதல் தகவல்களுக்கு இந்த இணையத்தளத்தில் பார்க்கவும்.

மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான குழுவில் ஆராய்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகள்

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட்டுவரும், மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான குழுவில் (The Central Council for Research in Ayurvedic Sciences) காலியாக இருக்கும் ஆராய்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணி விவரங்கள்

Group A நிலையிலான Research Officer

Chemistry – 5

Pharmacology – 2

Bio-Chemistry – 10

Medicine - 6

Animal/Experimental Pathology – 2

Pathology – 14

Ayurveda – 12

Microbiology – 4

Library and Information Officer - 1

பொது – 33, எஸ்சி - 6, எஸ்டி – 3, ஓபிசி – 9, ஈடபிள்யூஎஸ் – 5

Group B நிலையிலான Assistant Research Officer

Botany – 4

Chemistry – 4

Clinical Psychology – 2

Farm Manager – 1

Bio-Technology – 3

Pharmacognosy – 3

Physiotherapy – 1

Pharmacology – 12

Staff Nurse – 49

பொது – 48, எஸ்சி - 8, எஸ்டி – 4, ஓபிசி – 13, ஈடபிள்யூஎஸ் – 6

Group C நிலையிலான Research Assistant

Bio-Chemistry – 2

Botany – 19

Chemistry – 11

Pharmacology – 3

Organic-Chemistry – 1

Garden Supervisor – 1

Curator – 2

Garden – 3

Pharmacy – 4

Sanskrit – 1

Library and Information – 2

Statistical – 1

Translator - Hindi – 1

பொது – 36, எஸ்சி - 3, எஸ்டி – 1, ஓபிசி – 8, ஈடபிள்யூஎஸ் – 2

மேற்காணும் மூன்று வகையான பணிகளிலும் ஒவ்வொரு பிரிவினருக்குமான காலியிடங்கள், கல்வித்தகுதி மாற்றுத்திறனாளிகளுக்கான காலியிடங்கள் போன்றவற்றை தகவல் குறிப்பேட்டில் அறிந்துகொள்ளலாம்.

வயது வரம்பு (1-1-2019 அன்று)

Group A பணிகளுக்கு 40 வயதுக்கு அதிகமாகாமலும், Group B மற்றும் Group C பணிகளுக்கு 30 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்களுக்கு இந்திய அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த இணையதளம் வழியாக இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓபிசி பிரிவினர் Group A பணிகளுக்கு ரூ.1500, Group B பணிகளுக்கு ரூ.500, Group C பணிகளுக்கு ரூ.200 என்று விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் (PWD), ஈடபிள்யூஎஸ், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31-10-2019.

கூடுதல் தகவல்களுக்கு இந்த இணையத்தளத்தில் பார்க்கவும்.

ஹமீர்பூர் தேசியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் தொழில்நுட்பம் மற்றும் அமைச்சுப் பணிகள்

இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், இமாசலப்பிரதேசம், ஹமீர்பூரில் நிறுவப்பட்டிருக்கும் தேசியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institute of Technology Hamirpur) காலியாக இருக்கும் பல்வேறு நிலையிலான தொழில்நுட்பம் மற்றும் அமைச்சுப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிட விவரங்கள்

Technician - 23

Senior Technician - 11

Technical Assistant - 18

Junior Engineer - 2

Students Activity & Sports Assistant - 2

Library and Information Assistant - 2

Pharmacist - 1

Junior Assistant - 7

Superintendent - 5

மொத்தம் 71 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இப்பணியிடங்களில் பொது – 40, எஸ்சி - 7, எஸ்டி – 3, ஓபிசி – 17, ஈடபிள்யூஎஸ் – 4 என்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.

job
job

கல்வித்தகுதி

ஒவ்வொரு பணிக்கும் தேவையான கல்வி மற்றும் அனுபவம், வயது வரம்பு குறித்த விவரங்கள் தகவல் குறிப்பேட்டில் தனித்தனியாகத் தரப்பட்டிருக்கின்றன.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000/- விண்ணப்பக் கட்டணம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் (PWD) மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31-10-2019.

கூடுதல் தகவல்களை இந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்.

வடகிழக்கு எல்லை ரயில்வேயில் வேலைபழகுநர் பணிகள்

வடகிழக்கு எல்லை ரயில்வேயில் (North East Frontier Railway) பல்வேறு தொழிற்பிரிவுகளின் கீழான 2590 வேலை பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள் விவரம்

Alipurduar - 437

Rangia - 328

Lumding – 1004

Tinsukia - 331

New Bongaigaon Workshop – 341

Dibrugarh Workshop - 149

என்று மொத்தம் 6 மண்டல அலுவலக / பணிமனைகளில் பிட்டர், வெல்டர், எலெக்ட்ரீஷியன், ரெப்ரிஜிரேட்டர் & ஏசி மெக்கானிக், கார்பென்டர், கொத்தனார், பெயின்டர், டீசல் மெக்கானிக் மெஷினிஸ்ட் (கிரைண்டர்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், பொது – 1353, ஓபிசி – 654, எஸ்சி - 404, எஸ்டி – 179 என்று மொத்தம் 2590 இடங்கள் இருக்கின்றன. இவற்றில், ஈடபிள்யூஎஸ் – 329, மாற்றுத்திறனாளிகள் - 78 இடங்கள் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.

job
job

கல்வித்தகுதி

பத்தாம் வகுப்பு 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொடர்புடைய தொழிற்பிரிவில் படித்து தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (18-9-2019)

15 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். 24 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். எஸ்சி எஸ்டி – 5, ஓபிசி – 3, மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள் என்று வயதுத் தளர்வு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினைத் தயாரித்து, Principal Adviser N.F. Railway, Maligaon எனும் பெயரில் GPO/Guwahati எனுமிடத்தில் மாற்றிக்கொள்ளக்கூடியதாக ரூ.100/-க்கான அஞ்சலாணையினைப் பெற்று இணைத்து, உறையின் மேற்பகுதியில் “Application for engagement as Act- Apprentices & Designated Trades applied for…………………………….and………………….Division/Workshop” என்று குறிப்பிட்டுத் தொடர்புடைய மண்டல அலுவலகம் அல்லது பணிமனைக்கு அஞ்சலில் அனுப்பி வைத்திட வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் (PWD) மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டியதில்லை. விண்ணப்பம் சென்றடையக் கடைசி நாள்: 31-10-2019.

கூடுதல் தகவல்களை இந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தில் 500 வேலை பழகுநர் பணிகள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக நிறுவனத்தில் (Tamilnadu Generation and Distribution Corporation Limited) 500 வேலை பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள் விவரம்

வகை I -பட்டதாரி வேலை பழகுநர்

வகை II - பட்டய வேலை பழகுநர்

Electrical & Electronics Engineering - 182

Electronics Communication Engineering – 10

Electronics & Instrumentation Engineering – 4

Civil Engineering - 13

Mechanical Engineering – 37

Computer Science and Engineering/ Information Technology - 4

மேற்காணும் பாடப் பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 250, பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு 250 என்று மொத்தம் 500 வேலைபழகுநர் பணியிடங்கள் இருக்கின்றன. .

job
job

கல்வித்தகுதி

வகை I பட்டதாரி வேலை பழகுநர் பணிகளுக்குத் தொடர்புடைய பாடத்தில் இளநிலைப் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வகை II பட்டய வேலை பழகுநர் பணிகளுக்குத் தொடர்புடைய பாடத்தில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். 2017, 2018 மற்றும் 2019 -ம் ஆண்டுகளில் படிப்பை நிறைவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு (18-9-2019)

வேலை பழகுநர் விதிமுறைகளின்படி, வேலை பழகுநருக்கான வயது வரம்புக்குள் இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த இணையதளத்தில் 25-10-2019-ம் நாளுக்குள் பதிவுசெய்து கொண்டு, அங்கு “TANGEDGO” நிறுவனத்தைத் தேர்வுசெய்து 5-11-2019-ம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் தகவல்களை இந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்.