Published:Updated:

வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று! - 7 - அலுவலக வேலை மட்டுமல்ல, ஆரோக்கியமும் முக்கியம்!

சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி
பிரீமியம் ஸ்டோரி
சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி

சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி

வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று! - 7 - அலுவலக வேலை மட்டுமல்ல, ஆரோக்கியமும் முக்கியம்!

சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி

Published:Updated:
சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி
பிரீமியம் ஸ்டோரி
சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி

குடும்பம், வேலை என இரட்டைப் பொறுப்புகளைச் சுமக்கும் பெண்கள் பலரும், சுய ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதில்லை. விளைவு...? ரத்தச்சோகை, ரத்த அழுத்தம், முடி உதிர்வு, அதீத உடல் சோர்வு என பல சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். வாழ்க்கைமுறையில் சின்னச் சின்ன மாற்றங்களை மேற்கொண்டாலே ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம். அதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் அப்ரஜாடா.

 அப்ரஜாடா
அப்ரஜாடா

செய்ய வேண்டியவை: அலுவலகம் முடிந்து வந்தவுடன் இரவு உறங்கச் செல்வதற்கான நேரத்தை ஃபிக்ஸ் செய்துவிட்டு, வீட்டு வேலைகளைச் செய்யுங்கள். தினமும் எட்டு மணி நேர தூக்கத்தை உறுதிபடுத்துங்கள்

வேலைக்குச் செல்வதால் ஜிம்முக்கு செல்ல நேரமில்லை என்று சொல்பவர்கள் பலர். ஜிம்முக்கு சென்றுதான் உடலை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டும் என்பதில்லை. தினமும் 15 நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்வதே போதுமானது. குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது நடைப் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்க லாம். வேலைக்குச் செல்லும் பெண்கள், சரிவிகிதமான சத்துகள் நிறைந்த காலை உணவைச் சாப்பிட வேண்டும். பச்சைக் காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள் என அதை ஆரோக்கியமாகத் திட்டமிடுங்கள்.

அலுவலகத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யாமல், 20 நிமி டங்களுக்கு ஒரு முறை சின்ன நடைப்பயிற்சி செய்யுங்கள்.

தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். அலுவலக வேலைகளில் மறந்து விடுபவர்கள், போனில் அலாரம் வைத்துக் கொள்ளலாம். சரியான இடைவேளையில் சிறுநீர் கழிப்பதையும் வழக்கமாக்குங்கள்.வேலையில் ஒவ்வொரு மாதமும் டார்கெட்டு களும், பணிகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அவற்றுக்காக ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகளைத் தள்ளிப் போடாதீர்கள்.

சம்பளத்திலிருந்து உங்கள் ஆரோக்கியத்துக் கென ஒரு தொகையை ஒதுக்குங்கள். வருடம் ஒரு முறை மருத்துவரை அணுகி கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனை, மார்பக பரிசோதனை, தைராய்டு, ஹீமோகுளோபின் அளவுகளுக்கான பரிசோதனை, கண் பரிசோதனை போன்ற வற்றைச் செய்வதை வழக்கமாக்குங்கள்.

வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று! - 7 - அலுவலக வேலை மட்டுமல்ல,  ஆரோக்கியமும் முக்கியம்!

செய்யக்கூடாதவை: காலை உணவைத் தவிர்த்தால், மூளையின் செயல்திறன் பாதிக்கப் பட்டு, அலுவலக பணிகளைச் செய்வதில் சிக்கல் ஏற்படும். எனவே எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

பொது கழிவறை பயன்படுத்துவது, சீறுநீரை அடக்குவது போன்றவற்றால் சிறுநீரகத் தொற்று ஏற்படலாம். பிறப்புறுப்பில் எரிச்சல், வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

உடல்நலமில்லாதபோது விடுப்பு எடுக்கவோ, பர்மிஷன் போடவோ தயங்காதீர்கள். நீங்கள் இல்லையென்றாலும் உங்கள் வேலைகளை சக பணியாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் மட்டும்தான் பார்க்க முடியும்.

ஆல் தி பெஸ்ட்!

****

வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று! - 7 - அலுவலக வேலை மட்டுமல்ல,  ஆரோக்கியமும் முக்கியம்!

கஞ்சி, சூப், ஜூஸ்...

* வார இறுதியில், அடுத்த வாரத்துக்கான உணவு அட்ட வணையைத் தயார் செய்து கிச்சனில் ஒட்டிவிடுங்கள். அந்த அட்டவணையில் தினமும் இரண்டு காய்கறிகள் இருக்கட்டும்.

* வாரம் இருமுறை சிறுதானிய உணவுகளை எடுத்துச் செல்லுங்கள். சக பணியாளர்களுக்கும் அது விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

* அடிக்கடி டீ, காபி பருகுவதைத் தவிர்த்து லெமன் ஜூஸ், மோர் குடிக்கலாம். நேரம் இருப்பின் வெள்ளைப் பூசணி ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ், சத்துமாவுக் கஞ்சி, முருங்கைக்கீரை சூப் போன்ற வற்றில் ஏதேனும் ஒன்றை தயார் செய்து எடுத்துச் செல்லலாம்.

* அலுவலக பிரேக் நேரத்தில், எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து நட்ஸ், பழங்கள், பேரீச்சை, காய்கறி சாலட் போன்றவற்றைச் சாப் பிடுவதை வழக்கமாக்குங்கள்.

ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism