Published:Updated:

`323 பேருக்கு கிடைத்த புது வாழ்க்கை!' - விகடன் மற்றும் ஈக்விடாஸ் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம்

"சவாலான இந்த கொரோனா சூழலில் பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை ஒரு சேவையாகவே கருதுகிறேன்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா அனைவரது வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றியிருக்கிறது. உடல்நிலை, மனநிலை, பொருளாதாரநிலை என மக்களின் அனைத்துமே சற்று நலிவடைந்து இருக்கிறது. இந்நிலையில், ஒருவருக்கான வேலை வாய்ப்பு என்பது உண்மையில் ஒரு குடும்பத்திற்கான வாழ்வாதாரம் என்ற சூழல் இருக்கிறது.
வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பு முகாம்

இதை மனதில் கொண்டு ஆனந்த விகடன் மற்றும் ஈக்விடாஸ் டெவலப்மென்ட் இனிஷியேடிவ்ஸ் டிரஸ்ட் இணைந்து மெகா ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த முகாமில் எச்டிஎஃப்சி வங்கி, டிவிஎஸ் ட்ரைனிங் சர்விசஸ், ஐடிபிஐ ஃபெடரல் லைப், யுரேகா போர்ப்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்கெடுத்து கொண்டனர். கடந்த இரண்டு வாரங்களாக இணையவழியில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு சுமார் 1700 பேர் விண்ணப்பித்து பங்குகொண்டனர். இதில் 323 பேர் தேர்வாகி வேலைவாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள்.

இந்த முகாமில் பங்கெடுத்து, வேலைக்குத் தேர்வாகி, புதிய வாழ்க்கையை துவக்க இருப்போருக்கான வேலை உறுதி செய்யப்பட கடிதத்தை (job offer letter) வழங்கும் இணைய நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது (04.12.2020). இந்நிகழ்வில் விகடன் மற்றும் ஈக்விடாஸ் நிறுவனங்களின் முக்கிய அலுவலர்கள் பங்கெடுத்தனர். மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் ஹெச்ஆர் துரையின் அதிகாரி சுர்ஜித் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு உத்வேகமளிக்கும் தலைமையுரை அளித்து சிறப்பித்தார்.

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

அவரது உரையில், "சவாலான இந்த கொரோனா சூழலில் பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை ஒரு சேவையாகவே கருதுகிறேன்" எனப் பாராட்டியவர், அதனை தொடர்ந்து ஒருவர் பணி சூழலில் எவ்வாறெல்லாம் நடந்து கொள்ளவேண்டும். தொடர் கற்றலின் வழி தன்னுடைய திறமையை ஒருவர் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதன் அவசியம் ஆகியவை குறித்தும் பேசினார்.

வேலைவாய்ப்பினை பெற்ற அனைவருக்கும் ஆனந்த விகடன் சார்பாக வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு