Published:Updated:

`எஸ்பிஐ வேலைவாய்ப்பு; 8,000 காலியிடங்கள்!' -விண்ணப்பிக்க கடைசித் தேதி ஜன.26 #JobReminder

எஸ்.பி.ஐ
எஸ்.பி.ஐ

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் மாநிலம் வாரியாக, நகரங்கள் வாரியாக காலியிடங்களை அறிவித்துள்ளது.

வங்கி வேலையில் சேர வேண்டும் என்பது பலருடைய கனவாக இருந்துவருகிறது. அவர்களுக்கான ஓர் அறிவிப்பை, நாடு முழுவதும் அதிகக் கிளைகளுடன் செயல்படும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, 8,000-க்கும் மேற்பட்ட கிளர்க் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பை எஸ்பிஐ வழங்க இருக்கிறது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும், தமிழகத்தில் எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பது பற்றிய முழு விவரங்களைப் பார்ப்போம்.

8,000 காலியிடங்கள்
8,000 காலியிடங்கள்

தமிழகத்தில் 393 காலியிடங்களும் புதுச்சேரியில் 7 காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 8,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தமிழகத்திலோ, அண்டை மாநிலங்கள், நகரங்களிலோ உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, குறிப்பிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் OBC – 13, SC/ST – 15, பொது – 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படுகிறது. ஆதரவற்ற விதவைகளுக்கு 7 ஆண்டுகளும் முன்னாள் ராணுவத்தினருக்கு 3 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

`எஸ்பிஐ வாடிக்கையாளர்களே’- ஏடிஎம்-ல் பணம் எடுக்க வரவிருக்கும் புதிய நடைமுறையைத் தெரிந்து கொள்ளுங்கள்

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள், ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இரண்டு டிகிரி படித்தவராக இருப்பின், 1.1.2020 அன்றைய தேதிக்குள் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு இறுதியாண்டு செமஸ்டர் படித்துவிட்டு முடிவுக்காகக் காத்திருப்பவர்களும் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், குறிப்பிட்ட நாளில் தேர்ச்சிபெற்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

பாரத ஸ்டேட் வங்கியில் 8,000 எழுத்தர் நிலைப் பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், www.sbi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதைப் பூர்த்தி செய்து, ஜனவரி 26-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். முதல் நிலை தேர்வு பிப்ரவரி / மார்ச் 2020ல் நடைபெறும். மெயின் தேர்வு நடைபெறும் நாள், ஏப்ரல் 19, 2020.

அடுத்த கட்டுரைக்கு