வீட்டு வேலை, அலுவலக வேலை என பம்பரமாய் சுழலும் பெண்களில் எத்தனை பேர், தங்களை `செல்ஃப் க்ரூமிங்' செய்து கொள்வதில் அக்கறை காட்டுகிறார்கள்? அதை அழகு சார்ந்த விஷயமென நினைத்துத் தவிர்ப்பவர்களுக்கு, செல்ஃப் க்ரூமிங் என்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் சக்தி என்பது தெரிவதில்லை.
``செல்ஃப் க்ரூமிங்கிற்காக வெறும் பத்து நிமிடங்கள் செலவு செய்தாலே போதும்... தன்னம்பிக்கை துளிர்விடும்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா. செல்ஃப் க்ரூமிங் டிப்ஸையும் வழங்குகிறார்.

செய்ய வேண்டியவை:
* உங்கள் வேலைக்குப் பொருத்தமான ஆடைகளைத் தேர்வு செய்து அணியுங்கள். கூடியவரையில் ஆடையில் எம்ப்ராய்டரி, ஸ்டோன் வேலைப்பாடுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பேஸ்டல் நிற ஆடைகள் அலுவலகத்தில் உங்களை நீட் லுக்கில் காட்டிக்கொள்ள உதவும்.
* பொருத்தமான உள்ளாடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். டி- ஷர்ட் அல்லது துப்பட்டா இல்லாத குர்தா அணியும்போது பேடடு உள்ளாடைகளை அணியலாம்.
* ஒரு நாள் அதிக மேக்கப், மறுநாள் மேக்கப் இல்லாமல் செல்வது என்று செல்லாதீர்கள். மேக்கப் போட்டுக்கொள்ளாத நாளில் நீங்கள் டல்லாக இருப்பதாக கமென்ட்ஸ் வரலாம். அந்த கமென்ட்ஸால் அன்றைய மனநிலை பாதிக்கப்படலாம். எனவே எப்போதும் குறைந்தபட்ச மேக்கப்புடன் அலுவலகம் செல்வது நல்லது.
* பேபி பிங்க், பீச் (Beige) போன்ற லைட் ஷேடுகளில் லிப்ஸ்டிக் பயன்படுத்தவும்.
* கிராண்டான நகைகளைத் தவிர்த்து ஆடைக்கேற்ற சிம்பிளான நகைகளை அணியுங்கள். கண்ணாடி வளையல் அணிந்திருந்தால், அந்தச் சத்தம் அருகில் இருப்பவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும். எனவே சிங்கிள் வளையல் அணிவது பெஸ்ட். ஷூவும் பெல்ட்டும் அணிபவர்கள் இரண்டையும் ஒரே நிறத்தில் தேர்வு செய்யலாம்.

* அதிக வாசனையுள்ள பெர்ஃபியூம்கள் ஏசி காற்றில் கலந்து, மற்றவர்களுக்கு ஒவ்வாமை, தலைவலியை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதால் மைல்டான பெர்ஃபியூம்களை தேர்வு செய்யுங்கள். வியர்வை பிரச்னை உள்ளவர்கள் மைல்டான டியோடிரன்ட் பயன்படுத்தலாம். அக்குள் பகுதி வியர்த்து, அது ஆடையின் மேல் தெரிவதைத் தவிர்க்க `Under arms pads' பயன்படுத்தலாம்.
* ஹேர் கலர், ஹேர் டை பயன்படுத்துபவர் களும், முகம், கை, கால் பகுதிகளில் உள்ள தேவையில்லாத முடிகளை நீக்க நினைப் பவர்களும் குறிப்பிட்ட இடைவெளியில் அவற்றைச் செய்துகொள்ள வேண்டும்.
* காலணிகளைப் பொருத்தவரை ஹீல்ஸ் பயன்பாட்டைத் தவிர்க்கலாம். ஹீல்ஸ் அணிய வேண்டும் என்பவர்கள், பாதத்துக்கு மட்டும் ஹீல் இல்லாமல், முழு கால்களுக்கும் உயரம் தரும் வெட்ஜஸ் (Wedges) வகை களைப் பயன்படுத்தலாம். ஷூ அணி பவர்கள் தினமும் சுத்தம் செய்து அணிய வேண்டும்.
* உங்களது அலுவலக பையில் கூடுதலாக ஒரு துப்பட்டா அல்லது ஓவர் லே வைத்திருப்பது நல்லது. நாப்கின், டிஷ்யூ பேப்பர், சீப்பு, ஃபேஸ் வாஷ் போன்றவை கைப்பையில் இருக்கட்டும்.
* சாப்பாட்டுக்குப் பிறகு வாய்க் கொப்பளிப்பது நல்லது. வாய் துர்நாற்ற பிரச்னை உள்ளவர்கள் மவுத் ஃப்ரெஷ்னர் பயன் படுத்தலாம்.

செய்யக்கூடாதவை:
* அதிக இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்கவும்.
* தொப்பையை மறைக்க முழு நேரமும் வயிற்றை இறுக்கும் டம்மி டக் பயன்படுத்து வதைத் தவிர்க்கவும். மற்றவர்களின் டிரஸ் ஸிங் ஸ்டைல்களை காப்பி செய்யாதீர்கள்.
* இருக்கையில் அமர்ந்தபடியே தலை வாராதீர்கள். அலுவலகத்தில் நகம் கடிப்பது, லிப் பாம் போடுவது, மூக்கை சுத்தம் செய்வது, பல்லை நோண்டுவது, தலையை சொரிவது, பருக்களைக் கிள்ளி விடுவது போன்ற அருவருக்கத்தக்க செயல்களையும் தவிர்க்கவும்.
ஆல் தி பெஸ்ட்!