Published:Updated:

திடீர் போராட்டத்தில் ஸ்விக்கி ஊழியர்கள்; காரணம் என்ன?

ஸ்விக்கி நிறுவனத்தின் புதிய விதிமுறைகளே ஊழியர்களின் போராட்டத்திற்குக் காரணம். நாங்கள் சம்பள உயர்வு கேட்கவில்லை, ஸ்விக்கி நிறுவனத்தின் பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும் எனக் கேட்கிறோம்’’ என ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீர் போராட்டத்தில் ஸ்விக்கி ஊழியர்கள்; காரணம் என்ன?

ஸ்விக்கி நிறுவனத்தின் புதிய விதிமுறைகளே ஊழியர்களின் போராட்டத்திற்குக் காரணம். நாங்கள் சம்பள உயர்வு கேட்கவில்லை, ஸ்விக்கி நிறுவனத்தின் பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும் எனக் கேட்கிறோம்’’ என ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Published:Updated:

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் கூட்டமாகக் கூடிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு நிறுவனத்தின் செயலுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்விக்கி நிறுவனத்தின் புதிய விதிமுறைகளே ஊழியர்களின் போராட்டத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swiggy
Swiggy

இது குறித்து ஸ்விக்கியில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கையில்,``ஊழியர்களுக்கான வேலை நேரத்தை மாற்றியமைத்து ஸ்லாட் வரிசையில் ஆர்டர்களை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதேபோல வாரத்திற்கு, நாள் ஒன்றுக்கு என கொடுக்கப்படும் ஊக்கத்தொகையையும் நிறுத்தி உள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்படிக் கணக்கிட்டுப் பார்த்தால் எங்களின் வேலை நேரம் 16லிருந்து 18 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதோடு எவ்வளவு நேரம் வேலை செய்தாலும், எவ்வளவு ஆர்டர் எடுத்தாலும் ஒரே அளவு ஊதியம் தான் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

Online Food Delivery
Online Food Delivery
Representational Image

நாங்கள் சம்பள உயர்வு கேட்கவில்லை, ஸ்விக்கி நிறுவனத்தின் பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும் எனக் கேட்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளனர்.

ஸ்விக்கி நிறுவனத்தின் புதிய நடைமுறைகளை எதிர்த்து ஊழியர்கள் போரடிக் கொண்டிருக்க, ஸ்விக்கி நிறுவனம் இதைக் குறித்து எந்த அறிவிப்பையும் இதுவரையில் வெளியிடவில்லை.