Published:Updated:

டி.சி.எஸ் நிறுவனத்தில் 2023-24-ல் 1.25 லட்சம் வேலைவாய்ப்பு... 40,000 புதியவர்களுக்கு வாய்ப்பு!

டி.சி.எஸ் 1.25 லட்சம் வேலைவாய்ப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 2023 - 24 நிதியாண்டில் சுமார் 1.25 லட்சம் முதல் 1.5 லட்சம் பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாகவும், அதில் சுமார் 40,000 புதியவர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மென்பொருள் நிறுவனங் களில் ஒன்றாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) விளங்குகிறது. இதை சுருக்கமாக டி.சி.எஸ் (TCS) என்று சொல்வார்கள். டி.சி.எஸ் கிளைகள் சென்னை உட்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளன.

கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 2,197 பேர் ஆட்குறைப்பு!
கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 2,197 பேர் ஆட்குறைப்பு!
Moneycontrol

கொரோனா பொது முடக்க காலத்தில் அனைத்து துறைகளை போல், ஐடி நிறுவனங்களிலும் வருமானம் குறைந்தது. இதனால் இந்நிறுவனங்களில் செலவுகளைக் குறைக்க ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நடந்தது. மேலும் புதியதாக ஆட்களை பணியில் அமர்த்துவதும் குறைந்தது. இதற்கு இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டி.சி.எஸ் நிறுவனமும் விதிவிலக்கல்ல.

டிசம்பர் 2022 காலாண்டில் ஊழியர்களின் எண்ணிக்கையில் சிறிதளவு சரிவை சந்தித்துள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், புதிய பணியமர்த்தல்களை மேற்கொள்வதன் மூலம் பணியாளர்களின் இந்த இழப்பை ஈடுசெய்யும் நோக்கில் டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது.

இருப்பினும், கடந்த 18 மாதங்களில் நிறுவனம் அதிக விகிதத்தில் பணியமர்த்தப்பட்டதே தொழிலாளர் எண்ணிக்கையில் இந்த சரிவுக்கு காரணம் என்று டிசிஎஸ் தெளிவுபடுத்தியது.

40,000 புதியவர்களுக்கு வாய்ப்பு!
40,000 புதியவர்களுக்கு வாய்ப்பு!

கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதால் வேலை வழங்குவதில் எந்த சிக்கல் இல்லாமல் இருந்தது. கல்லுாரி வளாகங்களிலிருந்து 40,000 புதிய பட்டதாரிகளைக் கடந்த ஆண்டு பணியில் சேர்த்துள்ளது.

இந்நிலையில் டி.சி.எஸ் நிறுவனம் 2023 - 24 நிதியாண்டில் சுமார் 1.25 லட்சம் முதல் 1.5 லட்சம் பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாகவும், அதில் சுமார் 40,000 புதியவர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் 6.13 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புதியவர்கள் பணிக்காக விண்ணப்பித்துள்ளனர்.