Published:Updated:

இஸ்ரோவில் 327 பணியிடங்கள்... பி.இ, பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்த எழுத்துத் தேர்வானது போட்டியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கானது மட்டுமே. எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண், இப்பணிக்கான பிற தேர்வுகளில் கணக்கில் கொள்ளப்படாது

இஸ்ரோ
இஸ்ரோ ( vikatan )

இந்திய அரசின் விண்வெளித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (Indian Space Research Organisation) பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 'இஸ்ரோ' என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்பு, 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் 327 அறிவியலாளர்/பொறியாளர் (Scientist/Engineer) பணிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

இஸ்ரோ
இஸ்ரோ
vikatan

பணியிடங்கள்

இந்தியா முழுவதும் 23 இடங்களில் பணி மையங்களையும், சில தன்னாட்சி அமைப்புகளையும் கொண்டு செயல்பட்டு வரும் இஸ்ரோவின் பணி மையங்களில் `அரசிதழ் பதிவு பெற்ற குரூப் ஏ பணிகள் (Group ‘A’ Gazetted posts)

1. Scientist/Engineer Electronics - 131 பணியிடங்கள்

2. Scientist/Engineer Mechanical - 135 பணியிடங்கள்

3. Scientist/Engineer Computer Science - 58 பணியிடங்கள்

என மொத்தம் 324 பணியிடங்கள்

தன்னாட்சி அமைப்புகளில் அரசிதழ் பதிவு பெறாத குரூப் ஏ பணிகள் (Group ‘A’ Non-Gazetted posts)

4. Scientist/Engineer Electronics - 3 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

இப்பணியிடங்களில், எலும்பியல் குறையுடையோர் (Orthopedically Handicapped) - 13, பார்வைக் குறைபாடுடையோர் (Visually Handicapped) - 8, செவித்திறன் குறைபாடுடையோர் (Hearing Impairment) - 10 என்று மொத்தம் 31 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இஸ்ரோ சிவன்
இஸ்ரோ சிவன்

கல்வித்தகுதி

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இளநிலைப் பொறியியல் / இளநிலைத் தொழில்நுட்பம் (B.E/B.Tech) பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியினை முதல் வகுப்புத் தேர்ச்சியாகவும், மொத்தக் குறைந்தபட்ச (aggregate minimum) மதிப்பெண் 65% அல்லது CGPA 6.84/10 பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 4-11-2019 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகளில் PWBD பிரிவினருக்கும் இந்திய அரசு விதிமுறைகளுக்குட்பட்டு வயதுத் தளர்வு உண்டு.

இஸ்ரோ
இஸ்ரோ
vikatan

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இஸ்ரோவின் www.isro.gov.in எனும் இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக இணைய வழியில் அல்லது தகவல் குறிப்பேட்டில் குறிப்பிட்ட வேறு சில வழிகளைப் பின்பற்றிச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் 4-11-2019.

மத்திய, மாநில அரசுப்பணிகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்கள் உரியவர்களிடம் தடையில்லாச் சான்றிதழ் (No Objection Certificate) பெற்று, விண்ணப்பம் சமர்ப்பித்த நாளிலிருந்து இரு வாரங்களுக்குள் அல்லது 18-11-2019–ம் தேதிக்குள் கிடைக்கும்படியாக, பெயர் மற்றும் பதிவு எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, `Sr. Administrative Officer (ICRB), ISRO Headquarters, Antariksh Bhavan, New BEL Road, Bengaluru – 560 094’ எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

PSLV
PSLV
vikatan

தேர்வு முறை

விண்ணப்பித்தவர்கள் அனைவரும் மொத்தக் குறைந்தபட்ச (aggregate minimum) மதிப்பெண் 65% அல்லது CGPA 6.84/10 பெற்றிருக்கிறார்களா என்று சரிபார்க்கப்பட்டு, தகுதியுடையவர்கள் அனைவரும் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். 12-1-2020 அன்று அகமதாபாத், பெங்களூரு, போபால், சண்டிகர், சென்னை, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புதுடெல்லி மற்றும் திருவனந்தபுரம் என்று மொத்தம் 12 தேர்வு மையங்களில் நடைபெறும் இத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சலுக்கு டிசம்பர் மாதக் கடைசிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

இந்த எழுத்துத் தேர்வானது போட்டியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கானது மட்டுமே. எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண், இப்பணிக்கான பிற தேர்வுகளில் கணக்கில் கொள்ளப்படாது. இறுதிக்கட்டத் தேர்வு என்பது நேர்காணலில் விண்ணப்பதாரர்களின் செயல் திறன்களைக் கொண்டு முடிவு செய்யப்படும். இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நிலை 10 (Level 10) - க்கான பணிகளுக்குரிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக மாதத்திற்கு ரூ.56,100 எனும் சம்பளம் ஏற்ற முறையில் (Scale of Pay) சம்பளம் வழங்கப்படும்.

இஸ்ரோ
இஸ்ரோ
vikatan

கூடுதல் தகவல்கள்

இத்தேர்வு குறித்த மேலும் கூடுதல் தகவல்களுக்கு இஸ்ரோவின் www.isro.gov.in எனும் இணையதளத்தினைப் பார்வையிடலாம்.