Published:Updated:

அரசுப்பணிக்கு ஆயத்தமாகலாம்!

`டி.என்.பி.எஸ்.சி
பிரீமியம் ஸ்டோரி
`டி.என்.பி.எஸ்.சி

இரண்டாவது நாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு, சில முக்கியமான பாடங்களுக்கான ஆன்லைன் வகுப்பு நடந்தது கூடுதல் சர்ப்ரைஸ் எனச் சொல்லலாம்.

அரசுப்பணிக்கு ஆயத்தமாகலாம்!

இரண்டாவது நாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு, சில முக்கியமான பாடங்களுக்கான ஆன்லைன் வகுப்பு நடந்தது கூடுதல் சர்ப்ரைஸ் எனச் சொல்லலாம்.

Published:Updated:
`டி.என்.பி.எஸ்.சி
பிரீமியம் ஸ்டோரி
`டி.என்.பி.எஸ்.சி

அரசுப்பணி குறித்த கனவில் இருக்கிறவர்களுக்கு, கடந்த ஜூலை 24, 25 ஆகிய இரு நாள்களைப் பயனுள்ள வார இறுதி நாள்களாக்கியது, ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து நடத்திய `டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் – விரிவான வழிகாட்டுதல்’ நிகழ்ச்சி.

ஆன்லைனில் நடந்த இந்த நிகழ்வில் இரண்டு நாள்களிலும் காலை மாலை என இருவேளையும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு எந்த வயதிலிருந்து விண்ணப்பிக்கத் தொடங்கலாம், என்னென்ன தேர்வுகள் நடத்தப்படுகின்றன, தேவையான கல்வித்தகுதி, பயிற்சி செய்வது எப்படி, வீட்டிலிருந்தே முயற்சி செய்யலாமா அல்லது பயிற்சி நிறுவனங்கள் செல்ல வேண்டுமா என்பன போன்ற ஏராளமான கேள்விகளுக்குப் பதிலளித்தனர், நிகழ்வில் கலந்துகொண்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள்.

ஆந்திராவின் கர்நூல் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்துவரும் வீரபாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் செயலாளர் சங்கர சரவணன், தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் செயலாளர் விஜய்கார்த்திகேயன், அர்ச்சனா, சுரேஷ் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் கல்வியாளர் ரமேஷ் பிரபா ஆகிய ஆளுமைகள் தாங்கள் சந்தித்த போட்டித் தேர்வுகள், அவற்றை எதிர்கொண்ட அனுபவங்களைப் பேசி அதன் மூலம், தேர்வுகளை எதிர்கொள்கிறவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்தனர்.

ஆனந்த விகடனுடன் இணைந்து நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் இயக்குநர் எஸ்.சிவராஜவேல், பயிற்சி நிறுவனப் பிரதிநிதியாகத் தேர்வுக்கு உதவக்கூடிய விஷயங்களைப் பட்டியலிட்டார்.

அரசுப்பணிக்கு ஆயத்தமாகலாம்!

இரண்டாவது நாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு, சில முக்கியமான பாடங்களுக்கான ஆன்லைன் வகுப்பு நடந்தது கூடுதல் சர்ப்ரைஸ் எனச் சொல்லலாம். கணக்குப் புதிர்களை விரைவாகக் கையாள்வதற்கான சூட்சுமங்களையெல்லாம் சொல்லிக் கொடுத்தனர், சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் ஆசிரியர்கள்.

மொத்தத்தில் போட்டித் தேர்வுகள், குறிப்பாக டி.என்.பி.எஸ்.சி-யை எதிர்நோக்கிக் காத்திருக்கிறவர்களைத் தயார் மனநிலையில் நிறுத்தியிருக்கிறது இந்த நிகழ்வு என்று சொன்னால், மிகையில்லை.