Published:Updated:

வேலையிழக்கும் அமெரிக்கர்கள்... இந்தியர்களின் நிலை என்ன?

மோடி -ட்ரம்ப்
பிரீமியம் ஸ்டோரி
மோடி -ட்ரம்ப்

தற்போது அமெரிக்காவில் நிறைய நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

வேலையிழக்கும் அமெரிக்கர்கள்... இந்தியர்களின் நிலை என்ன?

தற்போது அமெரிக்காவில் நிறைய நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Published:Updated:
மோடி -ட்ரம்ப்
பிரீமியம் ஸ்டோரி
மோடி -ட்ரம்ப்
பல வளர்ந்த நாடுகளை, கொரோனா தன் காலடியில் போட்டு மிதித்துக்கொண்டிருக்கிறது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டிருக்கும் இந்த வைரஸ், இப்போது ஒரு புதிய பிரச்னையை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் உருவெடுத்திருக்கும் ஹெச்1பி (H1B) விசா பிரச்னைதான் அது!
வேலையிழக்கும் அமெரிக்கர்கள்... இந்தியர்களின் நிலை என்ன?

அமெரிக்காவில் வேலை செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் தற்காலிகக் குடியுரிமைதான் ஹெச்1 பி விசா. அமெரிக்காவின் பெரும்பாலான நிறுவனங்கள், தங்களது தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற வெளிநாட்டினரையே அதிகம் நம்பியிருக்கின்றன. அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் பணியாற்றிவருபவர்களில் இந்தியாவின் ஐ.டி துறையைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். இந்த விசா முறைப்படி 60 நாள்கள் வேலை இல்லை என்றால், தங்கள் சொந்த ஊருக்கு அவர்கள் திரும்பிவிட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா பெரும் பொருளாதார சரிவைக் கண்டுள்ளது. இது 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடிக்கு நிகரான பாதிப்பைவிட அதிகம் என்கிறார்கள். இதுவரை 1.6 கோடி பேர் வேலை இழந்தவர்களுக்கான நிதியுதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். 5.7 கோடி பேரின் வேலை அபாயத்தில் இருக்கிறது. உலக பொருளாதார நெருக்கடியின்போது அமெரிக்காவில் வேலையின்மை 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்தது. இப்போது 15 சதவிகிதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இது இரண்டாம் உலகப்போரின் போதான வேலையின்மை அளவாகும்.

வேலையிழக்கும் அமெரிக்கர்கள்... இந்தியர்களின் நிலை என்ன?

தற்போது அமெரிக்காவில் நிறைய நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் அங்கு H1B விசாவில் பணியாற்றுபவர்களின் வேலைக்குத்தான் முதல் ஆபத்து என கணிக்கப்படுகிறது.

இதை மேலும் உறுதிப்படுத்தும்விதமாக யு.எஸ் டெக் வொர்க்கர்ஸ் (US tech workers) அமைப்பினர்ர், ‘அமெரிக்காவில் வேலையிழப்பு அதிகரித்து வருவதால், உள்நாட்டுப் பணியாளர்களுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஹெச்1பி மற்றும் ஹெச்2பி (தொழில்நுட்பம் அல்லாத பணியாளர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக விசா) விசாவை தற்காலிகமாகத் தடைசெய்ய வேண்டும். இந்த ஆண்டு கொடுக்கப்படுவதாக இருந்த 85,000 ஹெச்1பி விசாக்களையும், 35,000 ஹெச்2பி விசாக்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும்’ என, அதிபர் ட்ரம்புக்கு கடிதம் எழுதியிருக் கிறார்கள். அமெரிக்காவில் தற்போது ஹெச்1பி விசாவில் பணியாற்றிவருபவர்களின் எண்ணிக்கை மட்டும் மூன்று லட்சம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘ஹெச்1பி விசாப் பணியாளர்களை ஒரு நிறுவனம் வேலையிலிருந்து நீக்குகிறது என்றால், அவர்கள் 60 நாளில் இன்னொரு வேலைக்குச் செல்ல வேண்டும். இல்லையென்றால், நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்’ என்பது சட்டம். ‘தற்போது இருக்கும் சூழலில் 60 நாளில் இன்னொரு வேலையைத் தேடுவது கடினம். எங்களுக்கு 180 நாள் வரை அவகாசம் நீட்டிக்க வேண்டும்’ என்று ஒயிட்ஹவுஸ் இணையதளத்தில் சிலர் விண்ணப்பம் பதிவிட்டுள்ளனர். இதில் தற்போது வரை 48,000 பேர் கையெழுத் திட்டுள்ளனர்.

வேலையிழக்கும் அமெரிக்கர்கள்... இந்தியர்களின் நிலை என்ன?

இன்டெலக்ட் டிசைன் அரினா நிறுவனத்தின் மேலாளர் விஜயகுமாரிடம், “அமெரிக்காவில் நடைபெறும் வேலையிழப்பு இந்தியாவை எப்படிப் பாதிக்கும்?” என்று விசாரித்தோம். ‘‘ஒருமுறை ஹெச்1பி விசா ஐந்து ஆண்டுகளுக்குக் கொடுத்துவிட்டால், அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு யாரையும் அனுப்ப முடியாது. ஆனால், ஓர் ஆண்டுக்கு இவ்வளவு விசா கொடுக்கலாம் என்ற ஒதுக்கீடு உள்ளது. அதைக் குறைக்கலாம் அல்லது மொத்தமாக நிறுத்திவிடலாம். அமெரிக்காவில் இப்போது வேலையிழப்புகள் அதிகமாக இருப்பதால், புதிய விசாவை நிறுத்துவார்கள் என்றே நம்புகிறோம். இந்தியப் பணியாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் இந்திய நிறுவனங்களுக்காக அமெரிக்காவில் வேலை செய்பவர்களாகவே இருப்பார்கள். அதனால், இவர்களுக்கு பெரிய பாதிப்பு கிடையாது.

அதே சமயம் ஐ.டி துறையின் சர்வீஸ் நிறுவனங்கள் இந்தியாவில் அதிகம். இதனால், அமெரிக்காவில் ஏற்படும் வேலையிழப்பு இந்தியாவின் ஐ.டி துறையை பாதிக்கும். ஆனால், அமெரிக்கா அளவுக்கு இந்தியாவில் வேலையிழப்பு ஏற்படாது. செலவுகளைக் குறைக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட விஷயங்களில் கை வைப்பார்கள். வேலைவாய்ப்புகள் என்பது ஏற்கெனவே

ஐ.டி-களின் சர்வீஸ் பக்கமிருந்து உற்பத்தித் துறைகள் பக்கம் மாறிக்கொண்டுள்ளன. அதை இந்த நெருக்கடிநிலை வேகப்படுத்தியிருக்கிறது. சரியான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டால், சுலபமாக பெரிய பாதிப்பில் இருந்து தப்பித்துவிடலாம்” என்கிறார்.

கொரோனாவில் இருந்து மக்களை மீட்டெடுப்பது மட்டுமல்ல... இதுபோன்ற சிக்கல்களையும் திறம்பட கையாள வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism