வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (12/01/2018)

கடைசி தொடர்பு:12:18 (12/01/2018)

எந்தெந்த அட்டவணை என்னென்ன சொல்கிறது? - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 18. அட்டவணைகள்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியமான அங்கங்களில் ஒன்று - அட்டவணைகள்! (Schedeules)

Constitution of india 

அட்டவணை - 1. 

இரண்டு பாகங்கள் உள்ளன.

பாகம் - I. 

இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. 

பாகம் - II.

யூனியன் பிரதேசங்களின் பட்டியல். இதில் இடம் பெற்றுள்ளவை - டெல்லி, அந்தமான், லட்சத் தீவு, தாதர், நகர்வேலி, டாமன் & டையு, புதுச்சேரி மற்றும் சண்டிகர். இந்தப் பெயர்களை நினைவில் கொள்ளவும். இவற்றுள் எது யூனியன் பிரதேசம் இல்லை...? என்று கேட்கலாம். 

அட்டவணை - 2. 

குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்ட உயர் பொறுப்புகளில் உள்ளோரின் சம்பளம் உள்ளிட்டவை, இந்த அட்டவணையில் சொல்லப்படுகின்றன. 

அட்டவணை - 3.

மத்திய நிதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு ஏற்பவர் உள்ளிட்டோர் ஏற்றுக்கொள்ள வேண்டிய உறுதி மொழி அடங்கியது.

அட்டவணை - 4. 

மாநிலங்களவையில் (Rajya Sabha) ஒவ்வொரு மாநிலத்துக்கும் உள்ள பிரதிநிதித்துவம் பற்றிய விவரம் இதில் தரப்பட்டுள்ளது. 

அட்டவணை - 5. 

பட்டியலிடப்பட்ட பகுதிகள், இனங்கள் பற்றிய விவரங்கள் - அடங்கி உள்ளது.

அட்டவணை - 6. 

அசாம், மேகலயா, திரிபுரா, மிஸோரம் மாநிலங்களில் உள்ள பட்டியல் பகுதிகளின் நிர்வாகம் பற்றியது.

அட்டவணை - 7. 

மிக மிக முக்கியமான அட்டவணை. எந்தெந்தத் துறைகள் மத்திய. மாநில அரசின் கீழ் வருகின்றன என்பது இந்தப் பட்டியலில் இருக்கிறது. ஏழாவது அட்டவணையின் கீழ், 3 தனிப் பட்டியல்கள் உள்ளன. 

I. மத்திய அரசுப் பட்டியல்: 

பாதுகாப்புத் துறை (தரைப் படை, கடற்படை, விமானப் படை உள்ளிட்டவை) 

மத்திய புலனாய்வுத் துறை. (C.B.I.) 

வெளியுறவுத் துறை. அயல் நாடுகளுடன் உறவு கொள்ளுதல், மத்திய அரசின் பணி. 

குடியுரிமை. 

இந்தியாவுக்கு வெளியிலான புனித யாத்திரை.

ரெயில்வே துறை.

தேசிய நெடுஞ்சாலை.

கடல் வழி, வான் வழிப் போக்குவரத்து.

கலங்கரை விளக்கம். 

துறைமுகங்கள். 

அந்நியக் கடன். (அரசு ரீதியிலான, வெளி நாட்டுக் கடன்.)

அஞ்சல் துறை, தொலைத் தொடர்புத் துறை. ('டெலிபோன்')

ரிசர்வ் வங்கி.  காப்பீடு ( 'இன்ஷூரன்ஸ்') 

மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகம். 

பங்குச் சந்தை. 

சுரங்கங்கள். 

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. ('சென்சஸ்') 

தொல்லியல் துறை.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன். (UPSC)

மத்திய தணிக்கைத் துறை.

வருமான வரி.

ஜி..எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி)

நீதிமன்றங்கள். 

இப்பட்டியலில் உள்ள சில துறைகளை மட்டும் தந்துள்ளோம். இயன்ற வரை, மனதில் வைத்துக்கொள்ளவும். 

அடுத்து வருவது - பட்டியல் -  II. மாநில அரசின் அதிகாரங்கள்! 

அதுபற்றி நாளை பார்க்கலாம். இதற்கு முந்தைய பாடங்களை படிக்க விரும்பினால் இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க

நீந்திப் பழகுவோம்: மாதிரித் தேர்வு 18

loading...

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்