Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகம் தொடர்பாக 10 கேள்விகள்.. எந்தெந்த செய்திகளிலிருந்து கேள்விகள் வரும்? - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 28: நம்ம ஊரு சேதி…!

TNPSC Gr4 தேர்வு. பொதுப் பாடப் பிரிவில் 100 கேள்விகள். இதில் ஏறத்தாழ 10 வினாக்கள் வரை, தமிழ்நாட்டு நடப்பு நிகழ்வுகள் தொடர்பாக இருப்பதுதான் சாதாரண நிகழ்வு. உலக, தேசியச் செய்திகள் போன்றே, இந்தப் பிரிவுக்கும் ஆண்டுப் புத்தகம் ‘Year Book’ பார்த்து படித்து வைத்துக்கொள்ளுதல் நன்மை பயக்கும்.

இப்போதைக்கு சில:

2017 சனவரி இறுதியில், சென்னை எண்ணூர் காமராசர் துறைமுகத்தின் அருகே, இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதிக் கொண்டதில், எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.

மோதிக் கொண்ட கப்பல்கள்: ‘டான் காஞ்சிபுரம்’; ‘மேப்பிள்’. கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ‘மேப்பிள்’ கப்பலின் நடுப் பகுதி சேதமானது; அதிலிருந்து சுமார் 200 டன் கச்சா எண்ணெய் கசிந்து, கடலில் கலந்தது. கச்சா எண்ணெயில் உள்ள ‘ஹைட்ரோ கார்பன்’ உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும், குமட்டல், வாந்தி, மயக்கம் முதலியன உண்டாகலாம்.

2017 பிப்ரவரி 16 அன்று, எடப்பாடி கே பழனிச்சாமி, தமிழ்நாட்டின் 22ஆவது முதல்வராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

கல்விக் கொள்கையில் சில மாற்றங்கள் செய்தது தமிழக அரசு. அதன்படி, 2017-18 கல்வி ஆண்டில் இருந்து, 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெற இருக்கிறது. ஆந்திரா, கேரளாவில் ஏற்கெனவே, 11அம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைமுறையில் உள்ளது.

மேலும், தமிழகத்தில் பள்ளிப் பாடத் திட்டங்களை மாற்றியமைக்க, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில், 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. படிப்படியாக, மூன்று நிலைகளில் புதிய பாடத் திட்டம் அமலுக்கு வரும்.

கல்வி ஆண்டு 2018-19: 1,6,9,11ஆம் வகுப்புகளுக்கு;

கல்வி ஆண்டு 2019-20: 2,7,10,12ஆம் வகுப்புகளுக்கு;

கல்வி ஆண்டு 2020-21: 3,4,5, 8 ஆம் வகுப்புகளுக்கு.

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, சந்திரசேகரன், இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமம் ‘டாடா’வின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். 

எல்லா வீடுகளில் இருந்தும், மக்கும், மக்காக் குப்பைகளைப் பிரித்து சேகரிக்கும் பணியில், திருநெல்வேலி மாவட்டம், 100% வெற்றி பெற்று, நாட்டின் முதல் மாவட்டமாக தேசிய சாதனை படைத்தது. இதே போன்று, சுத்தமான இடமாக நன்கு பராமரிக்கப்படும் தேசிய கலாசார மையங்களில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், முதல் இடத்தைப் பிடித்தது.

பத்திரிகையாளர் அமரர் சோ. ராமசாமிக்கு, அவரது மறைவுக்குப் பின், மத்திய அரசின், ‘பத்மபூஷண்’ விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, இந்திரா காந்தி விருது கிடைத்தது.

கல்பனா சாவ்லா விருது பெற்றார் - திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரீத்தி.

தடகள வீரர் மாரியப்பன் – அர்ஜுனா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

கோவை அருகே வெள்ளியங்கிரி அடிவாரத்தில், ‘ஈஷா யோக மையம்’ சார்பில் நிறுவப்பட்ட ‘ஆதியோகி’ சிலை திறந்து வைக்கப் பட்டது.

தமிழக வருவாய்த் துறை பெயர் மாற்றம் செய்யப் பட்டது. புதிய பெயர்: ‘வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை’.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ‘கீழடி’ என்னும் ஊரில், அகழ்வாராய்ச்சிப் பணியை தமிழக அரசே மேற்கொள்ளும் என்று அறிவிக்கப் பட்டது. 

முன்னாள் குடியரசுத் தலைவர், அமரர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு மண்டபம், இராமேஸ்வரம், பேய்க் கரும்பில் திறந்து வைக்கப் பட்டது.

கலாம் வீணை வாசிக்கும், மரதால ஆன சிற்பம், அக்னி-2 ஏவுகணையின் மாதிரி வடிவம் ஆகியன உள்ளன. தில்லியில் உள்ள ‘இந்தியா கேட்’ மாதிரி வடிவம் முன் பக்கத்திலும், குடியரசுத் தலைவர் மாளிகை (’ராஷ்டிரபதி பவன்’) மாதிரி வடிவம், பின் புறத்திலும் அமைக்கப் பட்டுள்ளன.

தமிழ்நாட்டை (சென்னையை) சேர்ந்த ‘வாஷிங்டன் சுந்தர்’ என்னும், வேகப் பந்து வீச்சாளர், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார். ஏற்கெனவே, தமிழ் நாட்டைச் சேர்ந்த ‘அஷ்வின் ரவிச்சந்திரன்’, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக, தொடர்ந்து விளையாடி வருகிறார்.

கடந்த சில மாதங்களில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக தமிழ்நாட்டில் மிகப் பெரிய சம்பவங்கள் ஏதும் நடைபெறாததால், இம்முறை TNPSC Gr4 தேர்வில், தமிழகம் சார்ந்த நடப்புச் செய்திகள் அதிகம் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே தென்படுகின்றன.

மேற்சொன்னவை அல்லாமல், பொருளாதாரம், சுற்றுச் சூழல், வர்த்தகம், விளையாட்டுத் துறையில், இந்திய அளவில் குறிப்பிடத்தக்க அளவில் நிகழ்ந்த சம்பவங்கள், சாதனை புரிந்த தன் நபர்கள் குறித்து, ஆண்டுப் புத்தகம் அல்லது நாளிதழ்கள் மூலம் தெரிந்துகொள்வது அவசியம்.

இத்துடன், நடப்பு நிகழ்வுகள் பகுதியை நிறைவு செய்வோம்.

இனி….? மீண்டும் – அரசமைப்பு சட்டம்! அதை நாளை பார்க்கலாம்.

இதற்கு முன் வந்த பகுதிகளை படிக்க விரும்பினால் இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க..

மாதிரித் தேர்வு 28

loading...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement