வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (01/02/2018)

கடைசி தொடர்பு:16:11 (09/03/2018)

ராஜபுத்திரர்கள்.. டெல்லி சுல்தான்கள்.. முகலாயர்கள்.. இடைக்கால இந்திய வரலாறு - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை!

முதன்மைத் தேர்வுக்கான பொது பாடங்கள்:  இந்திய வரலாறு 

பகுதி - இடைக்கால வரலாறு

கடந்த பகுதியில் பார்த்ததைப்போல வரலாற்றுப் பகுதியில் இருந்து சுமார் 20 சதவிகித கேள்விகள் UPSC தேர்வுகளில் இடம் பெறுகின்றன. இதில், இப்போது நாம் பார்க்கப்போகும் இடைக்கால வரலாற்றிலிருந்து சுமார் 1-3 சதவிகித கேள்விகளைச் சராசரியாக எதிர்பார்க்கலாம். TNPSC தேர்வுகளைப் பொறுத்தவரையில், மற்ற இடங்களுக்கான இடைக்கால வரலாற்றையும்விடவும் தமிழகத்தைச் சார்ந்த இப்பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

இந்த காலகட்டத்தில்தான் பகுதி சார்ந்த (ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா, மஹாராஷ்டிரா என) கலாசார அடையாளங்கள் துளிர் விடத் துவங்கியதாக கருதப்படுகிறது. 750 முதல் 1000 வரை ராஷ்ட்ரகுடாஸ், பாலாஸ் மற்றும் ப்ராத்திகராஸ் ஆகிய மூன்று சாம்ராஜ்ஜியங்கள்தான் வட இந்தியாவின் மிகப்பெரிய சக்தியாக விளங்கின - அவைகளின் சிறப்பம்சங்கள், முக்கிய மன்னர்கள், புனைப்பெயர்கள், எழுதப்பட்ட புத்தகங்கள் ஆகியவற்றை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. ராஜ்புத்திரர்களின் மிகப்பெரிய வளர்ச்சி தொடங்கியதும் இந்த இடைக்காலத்தில் (medieval)தான். அவர்களின் ஆட்சி முறை, பதவிகளின் பெயர்கள் உள்ளிட்டவற்றை மேலே குறிப்பிட்ட தலைப்புகளோடு சேர்த்து குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது. 

உதாரணக் கேள்விகள்:

1. ராஷ்ட்ரகுடாஸ் -  ராஜஸ்தான் 

2. பாலாஸ்  - பெங்கால் 

3. ப்ரத்திஹராஸ் - அவந்தி

இவற்றில் 

1 and 3 correct 

1 and 2 correct 

2 and 3 correct ( பதில்) 

All are correct

பதில்: 2 and 3 correct

 

1.ஜெயச்சந்திரா கடைசி ராஜபுத்திர மன்னராக கருதப்படுகிறார் 

2. ஜெயச்சந்திரா 1194-ம் ஆண்டு சந்தாவார் போரில் முகமது கோரியால் வீழ்த்தப்பட்டார்

1 is correct 

2 is correct 

Both are correct ( பதில்) 

Both are wrong 

பதில் - Both are correct 

 

இடைக்கால வரலாற்றில் மற்றொரு முக்கிய அங்கம் 'டில்லி சுல்தான்கள் காலம்', ' அடிமை வம்சம்' (1206-90), 'கில்ஜி வம்சம்' (1290-1320), 'துக்ளக் வம்சம் காலம்' (1320-1414), 'சையது வம்சம்' (1414-1451) மற்றும் லோடி வம்சம்(1451- 1526) என்று 5 வம்சங்களாகப் பிரிக்கலாம். இதிலும் மேலே குறிப்பிட்ட விஷயங்களோடு சேர்த்து, யார் ஆட்சி முன், யாருடைய ஆட்சி பின் என்று தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அலாவுதின் கில்ஜி, இப்ராஹிம் லோடி, பஹராம் ஷா உள்ளிட்ட முக்கிய மன்னர்களைப் பற்றிக் குறிப்புகளை 4-5 வரிகளில் எடுத்து வைத்துக்கொண்டால் UPSC மற்றும் TNPSC Main தேர்வுகளில் நிச்சயம் கை கொடுக்கும். 

உதாரணக் கேள்வி 

இவற்றில் காலவரிசை படி எது சரி 

இப்ராஹிம் லோடி

அலாவுதீன் கில்ஜி

கிசிர் கான்

சிக்கந்தர் லோடி 

1,2,3,4 

4,3,1,2 

4,3,2,1 

2,3,4,1 ( பதில் ) 

முகலாய சாம்ராஜ்யமும் மராத்திய சாம்ராஜ்யமும் முதன்மைத் தேர்வுகளுக்கு மட்டுமல்ல (UPSC மற்றும் TNPSC), இதுபோன்ற மிகப் பிரபலமான தலைப்புகளை நன்றாக படித்து வைத்துக்கொண்டால் Main தேர்வுகளிலும், UPSC கட்டுரை தாளிலும் நல்ல மதிப்பெண்களை எடுத்துவிடலாம். (அதைப்பற்றியோ, ஒட்டியோ கேள்விகள் வந்தால் மட்டும் !!) பாபர், அக்பர், ஜஹாங்கீர், ஹுமாயுன் போன்ற அரசர்களைப் பற்றி மேலே கூறியது போல் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பானிபட் போர் உள்ளிட்ட முக்கிய போர்கள் நிறைந்த பகுதி இந்த இடைக்கால வரலாறு. ஆக, போர்களுக்கு என்று தனி அட்டவணை ஒன்றைப் போட்டு வைத்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும். 

உதாரணக் கேள்வி 

பஹதூர் ஷா சாஃபர் தான் கடைசி முகலாய மன்னர் 

நிக்கோலி மனுச்சி அக்பர் காலத்தில் வருகை புரிந்த இத்தாலிய தூதர் 

1 only correct ( பதில்) 

2 only correct 

Both are wrong 

Both are correct 

நிக்கோலி மனுச்சி என்பவர் அக்பர் காலத்தில் அல்ல ஷாஜகான் காலத்தில் வருகை புரிந்த இத்தாலியத் தூதர். கேள்வியைச் சரியாக படிக்காமல். கேள்வியின் முதல் பகுதியான நிக்கோலி மனுச்சியையும், இறுதிப் பகுதியான இத்தாலிய தூதரையும் மட்டும் அவசரத்தில் படித்து தவறாக 'டிக்' அடிக்கும் வேலையை நானும் பலமுறை செய்திருக்கிறேன். இதில் என்னைப்போல் இல்லாமல் தொடக்கத்திலேயே சரி செய்து விடுங்கள். 

இடைக்கால வரலாற்றின் இறுதி அங்கம் மராத்திய சாம்ராஜ்ஜியம். சிவாஜி, பாஜி ராவ், பாலாஜி விஷ்வநாத் என ஏராளமான மன்னர்கள் உள்ளனர். அவர்களைப் பற்றியும் போர்களின் பெயர்கள், முக்கிய நிகழ்வுகளையும் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். இது தவிர ஆங்காங்கே வரக்கூடிய அஹோம், போய் வம்சங்கள், காஷ்மீரை ஆண்ட சைனுல் அபிதீன், விஜயநகர சாம்ராஜ்ஜியம் போன்றவற்றையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். 

UPSC யில் 1-3 சதவிகித கேள்விகள் மட்டுமே வருகின்றன என்று நினைத்து அதிகப்படியானவர்கள் உதாசீனப்படுத்தும் பகுதி இந்த இடைக்கால இந்திய வரலாறு. ஆனால், TNPSC-யை- பொருத்தவரை சற்று  அதிகக் கேள்விகள் இந்தப் பகுதியில் இருந்து இடம்பெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் முகலாய, மராத்திய போன்ற முக்கிய தலைப்புகளை நன்றாகப் படித்தால் மெயின் தேர்வில் ஆங்காங்கே நமக்கு நிச்சயம் கைகோடுக்கும். அதனால் பள்ளி, கல்லூரி தேர்வுகளை எதிர்கொள்வதுபோல, இந்தப் பகுதியை சாய்ஸில் விட்டுவிடாதீர்கள்! 

TNPSC UPSC Preparation Tips

அடுத்த பகுதியில் சந்திக்கலாம் ! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்