வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (01/02/2018)

கடைசி தொடர்பு:13:35 (01/02/2018)

மத்திய மாநில உறவுகளைச் சொல்லும் அரசியலமைச்சட்ட பிரிவுகள் - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 31 : உறவுகள் செழிக்கட்டும்.

இந்திய அரசமைப்பு சட்டம் பாகம் XI – மத்திய - மாநில உறவுகள். அத்தியாயம் – I சட்டமியற்றலில் உறவுகள். (Legislative Relations) 

இந்தியா முழுமைக்கு அல்லது இந்தியாவின் ஏதேனும் ஒரு பகுதிக்கு செல்லுபடியாகிற சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு என்கிறது இப்பாகத்தின் முதல் பிரிவு. (பி. 245)  இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி – இந்திய நாடு முழுமைக்கும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம் என்பது நாம் அறிந்ததுதான்.  ஆனால், இந்திய எல்லைக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு பாகத்துக்கும் (“for the whole or any part of the territory of India”) சட்டம் இயற்றுகிற அதிகாரம், நாடாளுமன்றத்துக்குத் தரப்பட்டுள்ளது. இதன் பொருள்…? அவ்வந்த மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரம், மத்திய அரசுக்கும் உள்ளது. ஆனால், ஏழாவது அட்டவணை (Seventh Schedule) படி, அந்தத் துறை, மத்திய பட்டியல் அல்லது பொதுப் பட்டியலில் இருக்க வேண்டும். 

மாநிலப் பட்டியலில் இருக்கிற ஒன்றின் மீது மத்திய அரசு இயற்றுகிற சட்டம், ஓராண்டுக்கு செல்லும். இவ்வாறு சட்டம் இயற்ற வேண்டும் எனில், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டசபையில், அவையில் உள்ள உறுப்பினர்களில் 3இல்2 பங்கு ஆதரவுடன், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். (பி. 249)ஒருவேளை மாநிலப் பட்டியலுக்கு உட்பட்ட துறையில் நாடாளுமன்றம், தீர்மானம் இயற்றினால், அதில் இருந்து 6 மாதங்களுக்கு உள்ளாக, மாநில சட்டமன்றம் அதனை அங்கீகரித்தாக வேண்டும். பி. 249(3) ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுகிற சட்டமாக இருந்தால், அவ்வந்த மாநில சட்டசபைகளில் ஆதரவுத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பி.252.

பாகம் XI அத்தியாயம் - II நிர்வாக உறவுகள். (Administrative Relations)

மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிற நிர்வாகக் கடப்பாடு (Obligation) குறித்துச் சொல்கிறது பிரிவு 256. நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு உடன்பட்டு மாநிலங்களும், மாநிலங்கள் இயற்றும் சட்டங்களுக்குத் தேவையான வழிகாட்டு உத்தரவுகள் (Directions) வழங்கி மத்திய அரசும் இணைந்து செயல்படும். இந்த வழிமுறையை, சலுகையாக அல்லாமல், ‘கடப்பாடு’ என்று விளிக்கிறது பிரிவு 256. அதாவது இத்தகைய பரஸ்பர ஆதரவு நிலை எடுப்பதைக் கட்டாயம் ஆக்குகிறது. சில விஷயங்களில் மாநிலங்களுக்கு உத்தரவு இடுகிற அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது பிரிவு 257. இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தவை, தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய நீர்வழிகள், ரெயில் சேவை, தொலைத்தொடர்புகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.இது தொடர்பாக ஏற்படும் செலவுகளை மத்திய அரசே ஏற்கும்.

மத்திய அரசுப் பணிகளை மாநில அரசுக்கும், மாநில அரசுப் பணிகளை மத்திய அரசுக்கும், முறைப்படி மாற்றி விடவும் பிரிவு 258 மூலம் சசனம் வழி செய்கிறது. நினைவிருக்கட்டும் – குறிப்பிட்ட சில பணிகளை செய்து முடிக்க மட்டும், இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர ஏற்பாடாக அல்ல. மாநிலங்களுக்கு இடையிலான, நதி நீர்ப் பங்கீட்டுப் பிரசினைகளில், சமரசம் செய்ய, நீதி கிடைக்க, மத்திய்அ அரசு சட்டம் இயற்ற வழி கோலுகிறது பிரிவு 262(1). இவ்வகை சட்டங்களில் உச்சநீதிமன்றம் உட்பட எந்த நீதிமன்றமும் இதில் தலையிடாது இருக்கவும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். 262(2). அவசியம் இருந்தால், அதன் மூலம் நன்மை ஏற்படும் என்று கருதினால், மாநிலங்களுக்கு இடையிலான குழு (inter-state council) சட்டப்படி அத்தகைய குழு ஒன்றை அமைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. (“it shall be lawful for the President to establish such a Council”) – பிரிவு 263.

அடுத்து வருகிறது – பாகம் XII. Finance, Property, Contracts and Suits. நிதி, சொத்து, ஒப்பந்தங்கள் மற்றும் வழக்குகள். 

37 பிரிவுகள் கொண்ட சற்றே நீண்ட பாகம் இது. TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எல்லாவற்றுக்கும் முக்கியமான பகுதி இது. 

இந்த பாகத்தின் முதல் பிரிவு, ‘நிதிக் குழு’ ‘Finance Commission’ என்பது, பிரிவு 280இன் கீழ் அமைக்கப்படுகிற குழு. பிரிவு 264 இப்படிச் சொல்கிறது. அப்படி, என்ன சொல்கிறது பிரிவு 280..?  நிதிக் குழு, குடியரசுத் தலைவரால் அமைக்கப் படுகிறது. தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் (மொத்தம் 5) குழுவில் இருப்பார்கள். இதன் அதிகபட்ச பதவிக் காலம் 5 ஆண்டுகள். இதற்கு முன்னதாகவே கூட, இக்குழு கலைக்கப்பட்டு, புதிதாக வேறு ஒரு குழு நியமிக்கப் படலாம். 

நிதிக் குழுவின் பணிகள்:

வரித் தொகையை மத்திய, மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்தல்; விநியோகித்தல்.

இந்தியத் தொகுப்பு நிதியம் (Consolidated Fund of India) மூலம் மாநிலங்களுக்கு மானியம் வழங்குவதில் கொள்கை வகுத்தல்.

மாநில நிதிக் குழுக்களின் பரிந்துரையின் படி, பஞ்சாயத்துகளின் வளங்களை ஆதரித்தல்.

ஆரோக்கியமான நிதி நிலைமைக்காக, குடியரசுத் தலைவர் கூறும் / தரும் பணிகள்.

சட்டத்தின் படி அன்று, வேறு வகையில் வரி வசூலிக்கப்படுவதைத் தடை செய்கிறது பி. 265. மத்திய அரசுக்கு, வரி, தீர்வை வழியே கிட்டும் வருவாய் அனைத்தும், அரசுக்கு நேரும், கடன்கள், கருவூல வழிச் செலவுகள் முழுமையும், ஒரே நிதியத்தையே சேரும், அதன் பெயர் – ‘இந்தியத் தொகுப்பு நிதியம்’. ‘the Consolidated Fund of India.’ இதே போல, மாநிலங்களின் வரவு, செலவு - ‘மாநில தொகுப்பு ஊதியம்’ (the Consolidated Fund of the State) மூலம் செய்யப் படும். (பி.266) 

மேற்கூறியவை அல்லாத பிற வரவு/ செலவுகள் – இந்திய / மாநில பொதுக் கணக்கு (public account of India / the State) மூலம் நடைபெறும். ‘அவசர கால நிதியம்’ – நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் பொறுப்பில் இருக்கும். அவசர காலத் தேவைகளுக்காக, இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. (பி. 267) மாநிலத்தின் அவசரகால நிதியம், ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும். நிதிக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அவற்றின் மீதான நடவடிக்கைகள் பற்றிய குறிப்பு, நாடாளுமன்ற இரு அவைகளிலும் முன் வைக்கப்படும். (பி.281)ரெயில்வே, விமான நிலையம் போன்ற மத்திய அரசுத் துறைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம், தண்ணீர் போனறவை மீது, மாநில அரசுகள் வரி விதிக்காது. (பி.287, 288)

பாகம் XII அத்தியாயம் II (அரசு) கடன்கள் (Borrowings)

 

வளரும். 

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்