ஃபான்ட்... லே அவுட்... ஸ்பேசிங்... ஒரு நல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி? #CareerTips

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஒருவரைச் சந்திக்கும்போது அவரிடம் பேசுவதற்கு முன்பே அவரின் உடைகளை வைத்து அவரைப் பற்றிய ஒரு பிம்பத்தை முதலில் நாம் உருவாக்கிவிடுவோம். அதன்பின் அதை மாற்றுவது என்பது சிரமம். அதனால்தான் ஆடை பாதி என்றார்கள். ஒரு வேலைக்காக அப்ளை செய்யும்போது, நேரில் செல்லும் முன்பே நமது ரெஸ்யூமை அனுப்பிவிடுகிறோம். அப்படியென்றால், உடைக்கும் முன்பே நம்மைப் பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்குவது ரெஸ்யூம்கள்தாம். அப்படியென்றால் அதை நாம் எப்படித் தயார் செய்ய வேண்டும்? ஒரு நல்ல ரெஸ்யூமில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்?

ரெஸ்யூம்

 

1) எத்தனை பக்கங்கள்?

உங்களுக்கு எத்தனை வருட அனுபவம் இருக்கிறதோ அவ்வளவு நீளத்துக்கு ரெஸ்யூம் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவனான எலான் மஸ்க்கின் ரெஸ்யூமே ஒரு பக்கம்தான். எதை சொல்ல வேண்டும் என்பதை விட எதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். 15 வருட அனுபவம் கொண்ட CEO ஒருவரின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணைச் சொல்ல வேண்டுமா என்ன? ஒரு நல்ல ரெஸ்யூம் அதிகப்பட்சம் 2 பக்கங்கள் இருந்தால் போதும். ஒரு வேளை உங்கள் புராஜெக்டுகள் பற்றிய விரிவான தகவல்கள் கேட்கப்பட்டிருந்தால் அதை Annexure ஆக கொடுக்கலாம்.

2) Font:

டிஜிட்டலாகத்தான் இப்போது ரெஸ்யூம் அனுப்புகிறோம். டிஜிட்டலில் எத்தனையோ fonts கிடைக்கின்றன. ரெஸ்யூமுக்கு நாம் எந்த ஃபான்ட்டைப் பயன்படுத்துகிறோம் என்பது மிக மிக முக்கியமானது. Arial, times new roman ஆகியவை பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஃபான்ட்கள். இவற்றைப் பயன்படுத்துவது மினிமம் கியாரன்டி. ஒருவேளை நீங்கள் புதிய ஃபான்ட்டைப் பயன்படுத்த நினைத்தால், அது புரஃபஷனலாக இருக்கிறதா என்பதைக் கவனமாகப் பாருங்கள். உங்கள் ரெஸ்யூமில் என்ன இருந்தாலும் அதை இந்த ஃபான்ட் ஒன்றால் மட்டுமே பலவீனமாகும் வாய்ப்புகள் உண்டு.

ரெஸ்யூம்

 

3) Page set up:

ஒரு பக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக மார்ஜினை குறைத்து விடாதீர்கள். படிக்க சிரமம் தரும் அளவுக்கு இரண்டு வரிகளுக்கிடையே இருக்கும் இடைவெளியைக் குறைத்துவிடாதீர்கள். 1.5 அல்லது 2 பாயின்ட் இடைவெளி இருப்பது அவசியம். ரெஸ்யூமை Left align தான் செய்ய வேண்டும். கல்யாணப் பத்திரிகை போல centre align செய்யாதீர்கள்.

4) லே அவுட்:

ரெஸ்யூம் டெம்ப்ளேட்கள் நிறைய இணையத்தில் கிடைக்கின்றன. உங்களுக்கு என்ன மாதிரியான ரெஸ்யூம் தேவை என்பதைப் பொறுத்து அவற்றை தேர்ந்தெடுங்கள். ஒரு சிலர், பல ஆண்டுகளாக ஒரே துறையில் இருப்பார்கள். அவர்களுக்கு வரிசையான வேலை அனுபவத்தைச் சொல்லும் Chronological resumes தேவைப்படும். சிலர், பல துறைகள் மாறி மாறி வேலை செய்திருப்பார்கள். அவர்களுக்கு Functional resumes தேவைப்படலாம். 

நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை, துறை, நிறுவனம் பொறுத்தும் கூட ரெஸ்யூம் வகை மாறலாம். அதனால், ஒரே ஒரு ரெஸ்யூமை தயார் செய்துவிட்டு அதையே அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்ப வேண்டாம்.

5) இதர விஷயங்கள்:

சில நிறுவனங்கள் புகைப்படம், பள்ளி முதல் கல்லூரி வரை அத்தனை தகவல்களையும் ரெஸ்யூமில் குறிப்பிட சொல்வார்கள். அந்த மாதிரியான நிபந்தனைகள் ஏதுமிருந்தால் அவற்றையும் ரெஸ்யூமில் சேர்க்க மறக்காதீர்கள்.

ஒவ்வொரு வேலைக்காகவும் அனுப்பப்படும் நூற்றுக்கணக்கான ரெஸ்யூம்களில் ஐந்தோ பத்தோதான் நேர்முகத்தேர்வுக்குத் தேர்வாகின்றன. 90% பேரின் வாய்ப்பை ஒரு ரெஸ்யூம்தான் கெடுக்கிறது. அந்தத் தவறை நீங்கள் செய்துவிடாதீர்கள்.

ஆல் தி பெஸ்ட் பாஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!