வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (06/03/2018)

கடைசி தொடர்பு:16:16 (09/03/2018)

ஏழு கண்டங்கள்.. எக்கச்சக்க மதிப்பெண் - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

#14 முதன்மைத் தேர்வுக்கான பொதுப் பாடங்கள் - பொது மற்றும் உலக புவியியல்

உலகின் முக்கிய இனங்கள், 1. கௌகாசாய்ட்ஸ்( caucasoids)- ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் 2. மங்கோலாய்ட்ஸ் ( Mongoloids) - கிழக்கு ஆசியர்கள் 3. நீக்ராய்ட் ( negroids) - ஆப்ரிக்கர்கள். இவ்வினங்களால் உருவாகும் உலக மக்களின் ‘மக்கட்தொகை அமைப்பு’ ( population Distribution), மக்கள் தொகையின் வளர்ச்சி சதவிகிதம், மொத்தக் கருவுறுதல் விகிதம் ( Total Fertility Rate), மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்கள் ( demographic transition), மனித வளர்ச்சிக் குறியீடு ( Human Development Index), மனித வறுமைக் குறியீடு ( Human Poverty Index ), பாலின சமத்துவமின்மைக் குறியீடு ( Gender Inequality Index ) போன்ற மக்கள்தொகை சார்ந்த குறிப்புகளையும் குறியீடுகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

உலகில் உள்ள கண்டங்களையும் அதன் முக்கிய அம்சங்களையும் இப்போது பார்க்கலாம். ஆசியாவைப் பொருத்தவரை உலகின் 30 சதவிகித நிலப்பரப்பினைக் கொண்டது. மிக உயரமான பகுதியாக எவரெஸ்ட் சிகரத்தையும் மிகத் தாழ்வான பகுதியாக ‘ டெட் சீ’யையும் ( Dead Sea) கொண்டது ஆசியா. உலகின் மிக அதிகமான மக்கள்தொகை, கரையோர எல்லை ( coastline ), மிக ஆழமான ஏரியான பைக்கால்( ரஷ்யா) ஆகியவற்றைக் கொண்டது. இந்தியாவில் பார்த்ததைப்போல ஆசியாவில் உள்ள முக்கிய நதிகள், மலைகள், கடல்கள் ஆகியவற்றைப் பற்றியும் முக்கிய நாடுகள், அதாவது தேர்வு நடக்கும் சமயத்தில் செய்திகளுக்கு உள்ளாகும் நாடுகளைப் பற்றியும் நன்றாகக் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 

உதாரண கேள்வி:  

Statement I : ரெட் நதி ( Red river ) வியட்நாம் நாட்டில் உள்ள டோன்கின் ( Tonkin) சமவெளி வழியாகச் செல்கிறது 

Statement II : ஹவாங்ஹோ ( hwang ho ) நதி குன்லுன் ( kunlun) மலைப் பகுதிகளில் உருவெடுக்கிறது

Statement III : உலகின் மிகப்பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடு சீனா

I correct 

II மற்றும் III correct

III correct

All are correct ( பதில்) 

அடுத்து நாம் பார்க்கவிருக்கும் கண்டம், இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் ஆப்ரிக்கா. ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஜிப்ரால்ட்டர் ( strait of Gibraltar), சுயெஸ் கால்வாய் ( Suez Canal ), ஸ்ட்ரெய்ட் ஆஃப் பாப்- எல்- மண்டப் ( Strait of Bab-el- mandeb ) ஆகியவை ஐரோப்பா மற்றும் ஆசியாவிலிருந்து ஆப்பிரிக்காவை பிரிக்கும் முக்கியப் பகுதிகளாகும். ஆப்ரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள கிரேட் ரிஃப்ட் வேலியைப் ( Great Rift Valley ) பற்றியும் முக்கிய நதிகளான நைல் ( Nile ), ஜாம்பஸி ( Zambezi), ஆரஞ்சு ( orange) , விக்டோரியா ( Victoria ) போன்ற முக்கிய ஏரிகள், சஹாரா ( Sahara ), கலஹாரி ( kalahari) உள்ளிட்ட பாலைவனங்கள் ஆகியவற்றைப் பற்றியும் நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். 

அடுத்ததாக, வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க கண்டங்களில் முக்கியமானவற்றைப் பார்க்கலாம். தெற்கு அமெரிக்காவின் மிக உயரமான பகுதி ஆகான்காகுவா ( Aconcagua) சிகரம், மிக தாழ்வான பகுதி வால்டேஸ் பெனின்சுலா (valdes peninsula). ஆன்டெஸ் ( Andes ) மலைப்பகுதி, அமேஸான் ( amazon )பகுதி  உள்ளிட்ட புவியியல் அம்சங்கள் மிக முக்கியம். 

உதாரண கேள்வி:  

Statement 1: அமேசான் பகுதியைச் சுற்றியுள்ள மிக அடர்ந்த காடுகளின் பெயர் செல்வாஸ் (Selvas) 

Statement 2: பிரேசிலியன் ( Brazilian ) மலைப்பகுதிகளில் காணப்படும் புல்வெளிகளுக்கு காம்போஸ் ( campos) என்று பெயர்; அதே போல் அர்ஜென்டினாவில் உள்ள புல்வெளிகளுக்கு பாம்பாஸ் ( pampas) என்று பெயர்

1 correct 

2 correct 

Both are correct ( பதில்)

Both are wrong 

continents

வட அமெரிக்காவை பொருத்தவரையில், மிக உயர்ந்த பகுதி மெக்கின்லி ( McKinley) சிகரம், மிக தாழ்வான பகுதி காலிஃபோர்னியா அருகில் உள்ள டெத் வேலி ( Death Valley). கிரேட் லேக்ஸ் ( Great Lakes ) என்று சொல்லக்கூடிய ஹூரான் ( Huron), மிச்சிகன் ( Michigan), சுப்பீரியர்( superior ), ஈரீ ( Erie), ஆன்டாரியோ ( Ontario ) ஆகியவை, கார்டிலெரா ( cordillera), ராக்கி ( rocky ) மலைப்பகுதிகள், மிசிசிப்பி ( Mississippi), மிசோரி (Missouri) போன்ற நதிகள் மற்றும் முக்கிய புவியியல் அம்சங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.  

‘பெனின்சுலாக்களின் பெனின்சுலா ‘ ( peninsula of peninsulas ) என்று அழைக்கப்படும் ஐரோப்பா கண்டத்தின் முக்கியக் கடல்களான மெடிட்டெரேனியன் கடல், பிளாக் சீ ( Black Sea ), காஸ்பியன் ( caspian ) கடல், உரல் ( ural ), கௌகாகாஸ் (caucacus), ஆல்ப்ஸ் ( Alps), பைரனீஸ் ( Pyrenees) போன்ற மலைகள், நகரங்கள் மற்றும் நதிகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வது மிக முக்கியம்.

ஆஸ்திரேலிய கண்டத்தின் மிக உயரமான பகுதி கொஸிஸ்கோ ( Kosciusko) சிகரம் மற்றும் மிக தாழ்வான பகுதி ஏர் ( Eyre) ஏரி. ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பினை 1. கிரேட் வெஸ்டர்ன்  ( great western) பீடபூமி ( plateau ) 2. சென்ட்ரல் லோலேண்ட ( central low lands ) 3. ஈஸ்டர்ன் ஹைலாண்ட்ஸ் ( Eastern Highlands ) என்று பிரிக்கலாம். கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef ), கிரேட் டிவைடிங் ரேஞ்ச் ( Great Dividing Range ) ஆகியவை முக்கிய புவியியல்சார்ந்த அம்சங்கள். 

இவ்வனைத்து கண்டங்களிலும் மலைகள், கடல்கள், நதிகள் போன்று மேலே பார்த்தவற்றைத் தவிர முக்கிய நகரங்கள், அவற்றின் சிறப்புகள், மக்களின் முக்கிய தொழில்கள், வேளாண்மை, தொழில் துறைகள், முக்கிய வளங்கள் (கனிமவளம் உட்பட ) ஆகியவற்றைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். இப்போது புவியியல் பயணத்தின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டோம். நம் நாடு, நம் உலகம் என சுவாரஸ்யமான விஷயங்களே பெரும்பாலும் உள்ளதால், பாடங்களில் உள்ள சுவாரஸ்யத்தை ஆழமாக படிக்கப் பயன்படுத்தி போட்டித்தேர்வுகளில் சொல்லி அடிப்போம். 

TNPSC UPSC Preparation Tips

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்