வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (20/03/2018)

கடைசி தொடர்பு:13:22 (20/03/2018)

ஷரத்துகளை ஒரு வரியில் விளங்கிக்கொள்வது எப்படி? டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

#18 முதன்மைத் தேர்வுக்கான பொதுப் பாடங்கள் : இந்தியன் அரசியலமைப்பு (Indian Polity).

இந்திய அரசியல் சாசனம் ( Indian constitution) பகுதி-3

கடந்த பகுதியில் நாம் பார்த்த அடிப்படை உரிமைகளின் தொடர்ச்சியை இப்போது பார்க்கலாம். ஷரத்துகள்(article) 14 முதல் 24 வரையில் கடந்த பகுதியில் பார்த்தோம். இப்போது 25 முதல் 35 வரையிலான ஷரத்துகளுக்களுக்கு ஒரு வரி விளக்கங்களை பார்க்கலாம்.

Article ஒரு வரி விளக்கம்
25 எந்த மதத்தையும் தடையின்றி பின்பற்றலாம்
26 மதரீதியாகவும்தொண்டு சிந்தனைகளை உடைய நிலையங்களை நிறுவலாம்
27 மதரீதியான எந்த ஒரு வரியையும் செலுத்த எந்த நபரும் கட்டாயப்படுத்தப்படக் கூடாது
28 முழுமையாக அரசு நிதியில் செயல்படும் கல்வி நிறுவனத்திலும் மத ரீதியான போதனைகள் நடத்தப்படக்கூடாது
29 இந்தியாவில் எந்தப் பகுதியிலும் வசிக்கும் எந்தவொரு பிரிவைச் சார்ந்த குடிமகனுக்கும் தன் மொழி,எழுத்து மற்றும் கலாசாரத்தைப் பாதுகாக்கும் உரிமை
30 சிறுபான்மையினரின் பாதுகாப்பு
31 இதனுடன் 300A பிரிவும் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எந்தவொரு தனி மனிதரின் சொத்தும் பறிக்கப்படக்கூடாது ( சட்டரீதியான அதிகாரத்தைத் தவிர )
32 அடிப்படை உரிமைகளை பாதுகாக்க சட்ட ரீதியான தீர்வுகள் - ஹேபியஸ் கார்பஸ் ( habeas corpus ) , மாண்டமஸ் ( mandamus), ப்ரொஹிபிஷன் ( prohibition) , செரிட்டியோரரி ( certiorari) மற்றும் குவோ வாரண்டோ ( Quo warranto )
33 ராணுவம், உளவுத்துறையில் உள்ளோருக்கு அடிப்படை உரிமைகளை பயன்படுத்த உள்ள கட்டுப்பாடுகள்
34 படைத்துறை சட்டம் அமலில் உள்ளபோது அடிப்படை உரிமைகளுக்கான கட்டுப்பாடுகள்
35 அடிப்படை உரிமைகளில் திருத்தம் செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது

அடுத்ததாக, அரசு நெறிமுறைக் கட்டளைகளின்(Directive principles of state policy) கோட்பாடுகளைப் பார்க்கலாம். 

ஷரத்துகள் 36 முதல் 51 வரை சாசனத்தின் நான்காம் பகுதியில் இடம்பெறுகின்றன. இதன் முக்கிய அம்சங்களை நாம் அயர்லாந்து நாட்டு சாசனத்தில் இருந்து பின்பற்றுகிறோம். இப்போது இவைகளின் ஒரு வரி விளக்கங்களை பார்க்கலாம்.

Article ஒரு வரி விளக்கம்
38 பொது நலத்தினை பாதுகாத்தல் ( social order )
39 குடிமக்களுக்கான வாழ்வாதாரம்
39A சம நீதி மற்றும் இலவச சட்ட உதவி
40 கிராம பஞ்சாயத்துக்களை ஒருங்கிணைத்து தன்னாட்சி புரிய வழிவகுத்தல்
41 முதுமை, நோய் போன்ற சூழலில் வேலை, கல்வி, பொது உதவிக்கான உரிமைகள்
42 வேலை செய்ய உகந்த மற்றும் சரியான சூழலை அமைத்தல் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சலுகைகள்
43 விவசாயம், தொழிற்சாலை உட்பட அனைத்துப் பணியாளர்களும் நியாமான சம்பளம்,,நல்ல வாழ்க்கை தரம் மற்றும் சிறு / கைத்தொழில்களை ஊக்குவித்தல்
43A தொழிலாளர்கள் தொழிற்சாலையின் நிர்வாகத்தில் பங்கெடுத்தல்
43B கூட்டுறவு சங்கங்களை ஊக்குவித்தல்
44 குடிமக்களுக்கு பொதுவான விதிமுறைகளை அமைத்தல்
45 குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி
46 அட்டவணை சமூகங்களுக்குக்கான கல்வி மற்றும் பொருளாதார உதவிகள்
47 ஊட்டச்சத்து மற்றும் பொது சுகாதார அளவுகளை உயர்த்துதல்
48 வேளாண்மை மற்றும் கால்நடைகளை ஒருங்கினைத்துப் பராமரித்தல்
49 பழங்காலத்து வரலாற்றுச்சிறப்பு மிக்க கட்டிடங்கள், நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்தல்
50 நீதித்துறையை செயல் மற்றும் நிர்வாகத்தில் இருந்து பிரித்தல்
51 சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் ஊக்குவித்தல்

உதாரண கேள்வி (UPSC 2015) 

# Directive Principles of state policy ஐ பொருத்தவரை எது சரி ?

1. அதன் கோட்பாடுகள் சமூக-பொருளாதார ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கின்றன

2. அவைகளின் செயல்பாடுகளை நீதிமன்றத்தில் வலியுறுத்த முடியாது

  • 1 only 
  • 2 only 
  • Both 1 and 2 ( பதில்) 
  • Neither 1 and 2

அடுத்து, நாம் பார்க்க இருப்பது 1976-ம் ஆண்டு ஸ்வரன் சிங் கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டு 42வது திருத்தத்தில் பகுதி IV Aவில் ஷரத்து(Article) 51 A வில் உள்ள 11 அடிப்படை கடமைகளைப் பற்றி (முதலில் 10ஆக இருந்தது 86 ஆவது திருத்தத்தில் 11ஆக உயர்ந்தது). 

 

1. தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்துக்கும் மரியாதை செலுத்துவது

2. நம் சுதந்திர போராட்டத்தை ஊக்குவித்த கொள்கைகளைப் பின்பற்றுதல்

3. இந்திய இறையாண்மையைப் பாதுகாத்தல்

4. தேசத்துக்காகச் சேவை செய்தல் மற்றும் தேசத்தைப் பாதுகாத்தல்

5. எந்த ஒரு பிரிவின்மையுமின்றி சகோதரத்துவத்தை ஊக்குவித்தல் 

6. நாட்டின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பாதுகாத்தல்

7. சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்

8. மனித நேயம், சமூக சீர்திருத்த சிந்தனைகள் மற்றும் அறிவியல் கோட்பாடுகளை வளர்த்தல்

9. பொது உடைமைகளை பாதுகாத்தல்

10. வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கி நாட்டினை உயர்த்துவது 

11. பெற்றோர் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு 6 வயது முதல் 14 வயது வரை கல்வி கிடைத்திடச் செய்தல்
 

இந்தப் பகுதியிலும் கடந்த பகுதியிலும் நாம் பார்த்த தலைப்புகள் பாலிட்டியில் ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொள்ள இன்றியமையாதவை. ஒரு வரி விளக்கம் என்பது உங்களுக்கு எளிமையாக புரிய வைக்கத்தான். ஆக, அதைப் புரிந்து கொண்டபின் அந்தந்த ஷரத்துகளுக்கான முழு விளக்கங்களை உதாரணங்களாகவும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 
 

UPSC preparation tips  in tamil

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க