ஸ்பெஷல் -1
Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு, இயக்குநர் சமுத்திரக்கனியின் அன்பும் வணக்கமும்.

சினிமாவில் இயக்குநராகப் பயணத்தை ஆரம்பிச்சு, நடிக்கவும் ஆரம்பிச்சுட்டேன். எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி எழுதிய 'கீதாரி’ நாவலை 'கிட்ணா’ங்கிற பேர்ல சினிவாமா நடிச்சு இயக்குறேன். நடிக்கிறது சின்னச் சின்ன ரோலா இருந்தாலும், தேடித் தேடி வித்தியாசமான படங்களில் மட்டும் நடிச்சுட்டு இருக்கேன். 'மாஸ்’, 'ரஜினி முருகன்’ படங்களில் எனக்கு வித்தியாசமான வில்லன் வேடம். ஒரே நேரத்தில் ஆறேழு வேலைகள் செஞ்சு பழக்கப்பட்டவன் நான். ஆரம்பத்துல நடிப்புதான் என் ஆசை; கனவு. ஆனா, இயக்கத்துல கவனம் செலுத்தவும் நடிப்பு ஆசையை மறந்துட்டேன். திடீர்னு இயக்குநர் சசிகுமார் கூப்பிட்டு நடிக்கவெச்ச பிறகுதான், 'நல்லா நடிக்கிறேன்’னு நாலு பேர் பாராட்டின பிறகுதான் நடிப்பு ஆசை திரும்பவும் துளிர்த்தது. இனி ஒரு படத்தை இயக்க எவ்வளவு கவனம் செலுத்தி மெனக்கெட்டு வேலை செய்வேனோ, அதே அளவு முக்கியத்துவத்தை நடிப்புக்கும் கொடுக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். ஏன்னா, இயக்குநரின் ஒட்டுமொத்தக் கற்பனையையும் ஒரு சின்ன கண் பார்வையில், அதட்டலில் கொண்டுவர்றது ரொம்பப் பெரிய விஷயம். அந்த வித்தியாசத்தை நானும் சிரமப்பட்டுத்தான் புரிஞ்சுக்கிட்டேன்.

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

வேகாத வெயிலில்... கொட்டித் தீர்க்கும் மழையில்... ராத்திரி-பகல் பார்க்காமல் வேலைசெய்யும் ஒரு விவசாயி, அறுவடையின் முடிவில் வீட்டுக்கு வெறுங்கையோடு திரும்புற மாதிரி இருக்கு இப்போ சினிமா வாழ்க்கை. அதுவும் சினிமா தொழில், பெரிய மாய விளையாட்டா ஆகிருச்சு. யாரோ ஒருத்தர் எடுக்கிற படத்தை இன்னொருத்தர் விலைக்கு வாங்கி, மேலும் சிலர் ஏரியா வாங்கி வெளியிட்டு காசு பார்க்கிறாங்க. சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்கிறதே குதிரைக் கொம்பா இருக்கு. ஒரு காலத்தில் கூரைக் கொட்டாய்களா இருந்த திரையரங்கங்கள் இப்போ டிஜிட்டல் தியேட்டரா ஆகிருச்சு. அந்த டிஜிட்டல் தியேட்டர்களும் இன்னைக்கு ஷாப்பிங் மால் ஆகிருச்சு. சென்னையில் எங்கு திரும்பினாலும் பிரமாண்டமாக இருக்கும் ஷாப்பிங் மால்களில் உள்ள தியேட்டர்களில் ஆங்கில, இந்திப் படங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழ்ப் படங்களுக்குக் கொடுப்பது இல்லை. இந்தப் பிரச்னைக்கு, தயாரிப்பாளர் சங்கம் உடனே ஒரு தீர்வு சொல்லணும். வருஷா வருஷம் நூற்றுக்கணக்கான படங்கள் உற்பத்தியாகிட்டு இருக்கு. ஆனா, எல்லாம் பெட்டியில முடங்கிக்கிடக்கு. சினிமாவைக் காப்பாத்த, தியேட்டர்களை முறையா பங்கீடுசெய்து எல்லா படங்களுக்கும் சம வாய்ப்பு கொடுக்கணும். இது பத்தி இன்னும் பல விஷயங்களைப் பேசலாம்... பேசுறேன்.

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

'நிமிர்ந்து நில்’... நான் ரொம்ப ஆசைப்பட்டு ரெண்டு வருஷ உழைப்பைப் போட்டு எடுத்த படம். ஆனா, சொன்ன தேதியில் அதை ரிலீஸ் பண்ண முடியலை. ரொம்பத் தாமதமாகத்தான் வெளியாச்சு. அந்த 36 மணி நேரத் தாமதத்தில் நான்பட்ட வேதனை, சத்தியமா என் எதிரிக்குக்கூட வரக் கூடாது. இதுல 'யார் மேல தப்பு?’னு ஆராய்ச்சிக்குள் நான் போகலை. ஏன்னா, ஒரு படம் எடுக்கிறோம். அதுல சில பிரச்னைகள் வருது... முக்கியமா பணப் பிரச்னை. அதுக்குத் தயாரிப்பாளர்கள் தயார் நிலையில் இருந்திருக்கணும். குறிப்பிட்ட தேதிக்குள் எல்லா விஷயங்களையும் சரிபண்ணி வெச்சிருக்கணும். ஆனா, அது நடக்கலை. பிரச்னை முடிஞ்சு படம் வெளியாகி ஆறேழு மாசம் ஆச்சுன்னாலும், அந்த வலியையும் வேதனையையும் இப்போ வரை என்னால மறக்க முடியலை. அடுத்த படத்துக்குக் கதை எழுதுற வேலைகூடக் கெட்டுப்போச்சு. இன்னமும் அந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷன் வெளியாகலை. உயிரைக் கொடுத்து ஒரு படம் எடுக்கிறோம். நேரத்துக்குச் சாப்பிடாம, தொடர்ச்சியா 72 மணி நேரம்கூடத் தூங்காமல் பேய் மாதிரி வேலைபார்க்கிறோம். அவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்தும் ரிலீஸ் சிக்கல் வரும்போது, மனசு விட்ரும். இன்னொரு முறை அப்படி நடக்கக் கூடாதுனு வேண்டிக்கிறேன்.

இப்போ அழகான கதைகளோடு வரும் புதிய இயக்குநர்களின் எண்ணிக்கை பிரமிக்க வைக்குது. போகிறபோக்கில் அவர்கள் பேசும் விஷயங்களும், திரையில் காட்டும் அழகுணர்ச்சியும்... அட்டகாசம். அப்படி நிறைய இயக்குநர்கள் வருவார்கள். வந்த வேகத்தில் செல்வார்கள். ஆனா, நாம எடுக்கிற சில படங்களில் என்ன பதிவுபண்றோம்கிறதுதான் முக்கியம். அதுதான் நாமும் சினிமாவில் இருந்தோம் என்பதற்கான ஆதாரமா இருக்கும். அந்த வகையில் என் மனம்கவர்ந்த இயக்குநர்கள் பற்றி பேசுறேன்.

என் உதவி இயக்குநர்களை, நான் 'உதவிய இயக்குநர்கள்’னுதான் கூப்பிடுவேன். அவர்கள்தான் ஒரு படத்தின் ஆன்மாவா இருப்பாங்க. இத்தனைக்கும் அவங்களுக்கு அதனால் பண பலனோ, மத்த நல்லதோ நடக்காது. ஆனாலும், அதைப் பற்றி கவலைப்படாம, ஓடியாடிட்டு இருப்பாங்க. அவங்களைப் பத்தி சில நல்ல எண்ணங்களை உங்களோடு பகிர்கிறேன்.

எனக்குப் பிடித்த சில சினிமாக்கள் பற்றி, என் குருநாதர் பற்றி நிறைய நல்ல விஷயங்களைப் பேசுறேன்.

நேர்மை ஐ.ஏ.எஸ்-னு நாம கொண்டாடுற சகாயம் சார், என் படம் ஒண்ணைப் பார்த்துட்டுப் பாராட்டினார். ஏன் தெரியுமா?

மேலும் பல அனுபவங்களை, ஆச்சர்யங்களை மனசுவிட்டுப் பேசுறேன்.

27-11-14 முதல் 3-12-14 வரை

என்ற எண்ணில் அழையுங்கள்.

அன்புடன்,

சமுத்திரக்கனி.

* அழைப்பு சாதாரண கட்டணம்