'52 டிகிரி வெப்ப வெயிலில், பொக்ரான் பாலைவனத்தில், அணுசக்தித் துறை நண்பர்களுடன் இருந்தேன். 1998-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி அன்று 40,35,30,25, 15,10,9,8...1 என கவுன்ட் டவுன் முடிந்ததும் இந்தியாவின் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தியா அணுசக்தி நாடாக மாறிய அந்தக் கணம் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்த தருணம்தான், நான் இந்தியனாகப் பிறந்ததற்குப் பெருமைப்பட்ட தருணம்’ - 'விகடன் மேடை’யில் வாசகரின் கேள்விக்கு இப்படி இந்தியனாகப் பூரித்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்... மறைந்துவிட்டார்!

'கனவு காணுங்கள்’ என்ற கலாமின் உற்சாக வார்த்தைகள் இன்றும் கோடிக்கணக்கான இளைஞர்களை, தங்கள் இலக்கை நோக்கிக் கொண்டுசெலுத்துகின்றன. 2020-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாக மாற ஒரு வரைத்திட்டத்தை முன்வைத்த கலாமை, காலம் நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டது. ஜுலை மாதம் 27-ம் தேதி ஷில்லாங்கில் மாணவர்கள் இடையே உரையாற்றிக்கொண்டிருந்தவர் திடீர் மாரடைப்பால் நிலைக்குலைய, மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல், தனது 84-வது வயதில் மறைந்துவிட்டார்.

தமிழகக் கடலோரக் கிராமத்தின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவனால், இந்தியாவின் பாதுகாப்பு அரணைத் தீர்மானிக்கும் அளவுக்கு உயர முடியும் என்பதால் மட்டுமே, இந்தியர்கள் கலாமை நேசிக்கவில்லை. எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், அதை தன் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும் கடைசிவரை எளிமையாக இருந்தார் என்பதாலும்தான், இந்த அளவுக்கு இந்தியர்களின் அபிமானத்தை வென்றவர் ஆனார்.

ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம், பள்ளிக்காலத்தில் அறிவியலைவிட கணிதத்திலேயே சிறந்து விளங்கினார். பள்ளிக் கல்வி முடிந்ததும், திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியல் படித்தார். எம்.ஐ.டி-யில் ஏரோனாட்டிக்கல் துறையில் இடம் கிடைத்தபோது, கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் தவித்திருக்கிறார். அப்போது அவருடைய சகோதரி தன் நகைகளைக் கொடுத்து உதவினார். கல்லூரியில் உணவுச் செலவைக் குறைக்க சைவத்துக்கு மாறிய கலாம், இறுதிவரை சைவ உணவுகளையே உட்கொண்டார். புத்தகங்கள் வாசிப்பதில் கலாமுக்கு அலாதி ஆர்வம். திருக்குறள், குர்-ஆன் எப்போதும் அவருடனே இருக்கும். மேடைப்பேச்சுகளிலும் எழுத்தாக்கங்களிலும் திருக்குறளில் இருந்து அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.

கலாம் தலைமையிலான அணி செலுத்திய ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பின்னர், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கலாமைச் சந்திக்க நினைத்தார். கலாமுக்கு ஆர்வம் என்றாலும், அந்தச் சந்திப்புக்கு தன்னிடம் நல்ல ஆடைகளே இல்லையே எனக் கவலைகொண்டார். அப்போது உடன் இருந்த மூத்த விஞ்ஞானி சதீஷ் தவான், 'வெற்றி என்கிற விலைமதிப்பு இல்லாத, அழகான ஆடை உங்களிடம் இருக்கிறதே...’ என்றார். அன்று முதல் ஆடை கலாசாரம் பற்றி கவலைப்பட்டது இல்லை கலாம்.

1992-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் நடந்த பொக்ரான் மிமி அணு ஆயுதச் சோதனையில் அப்துல் கலாம் பங்களிப்பு முக்கியமானது. இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பொறுப்பு ஏற்றுக்கொண்டபோது, ஒட்டுமொத்த இந்தியர்களின் நன்மதிப்பைப் பெற்ற தமிழராக ஜொலித்தார். ஒருமுறை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு கலாமின் உறவினர்கள் வந்திருந்தார்கள். மொத்தம் 59 பேர். அவர்களின் உணவு, தங்கும் இடம் தொடங்கி, தேநீர் வரை ஆனச் செலவை கலாமே கொடுத்துவிட்டார்.

அப்துல் கலாம் எழுதிய 'அக்னிச் சிறகுகள்’ புத்தகம், இன்றைக்கும் எண்ணிலடங்கா இந்திய இளைஞர்களின் பொக்கிஷம். அந்த நூலில், 'என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரைச் சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை; எதையும் கட்டிவைக்கவில்லை. என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அப்துல் கலாமின் பிறந்த நாள், உலக மாணவர் தினமாக ஐக்கிய நாடுகள் அவையில் அறிவிக்கப்பட்டது. இதுவரை 40 பல்கலைக்கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார் கலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக 'பத்ம பூஷண்’ மற்றும் 'பத்ம விபூஷண்’ விருது அங்கீகாரங்கள் பெற்றிருக்கிறார். அந்த அங்கீகாரங்களுக்கு எல்லாம் மணி மகுடமாக,

விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் மகத்தான பங்களிப்புக்காக இந்திய அரசின் உயரிய விருதான 'பாரத ரத்னா’ கௌரவமும் பெற்றார்.

தன் மீது மாணவர்கள் காட்டும் அன்பைப் புரிந்துகொண்ட அப்துல் கலாம், குடியரசுத் தலைவராக இருந்தபோதும் சரி... பின்னரும் சரி முடிந்த அளவு மாணவர்களைச் சந்திப்பதில் தீர்மானமாக இருந்தார். அதற்கு ஏற்ப வாழ்க்கையில் அவரது கடைசி நிமிடங்களும், ஒரு கல்விக் கூடத்தில் மாணவர்கள் மத்தியிலேயே கழிந்திருக்கிறது.

'எங்கள் எல்லோரையும் கனவுகாணச் சொன்ன உங்களின் நிறைவேறாத கனவு என்ன?’ என்ற கேள்விக்கு, 'நிறைவேறக்கூடிய என் கனவு, 125 கோடி மக்களின் முகத்தில் மலர்ந்த சந்தோஷப் புன்னகையைப் பார்க்க வேண்டும் என்பதுதான். அது நிறைவேறக்கூடிய ஆசைதான். என் ஆசை, லட்சியம், இந்தியாவை வளமான நாடாகப் பரிணமிக்கச் செய்யும்’ எனச் சொல்வார் கலாம்.

அந்தக் கனவு நிச்சயம் பலிக்கும்!