அனிருத் என்ட்ரி மாணவர்களிடம் வைரல் உற்சாகத்தைப் பரப்பியது.

''எனக்கு '3’ படத்துக்கு மியூசிக் பண்ண வாய்ப்பு கிடைச்சப்ப, நான் காலேஜ்ல செகண்ட் இயர் ஸ்டூடன்ட். சின்ன வயசுல இருந்தே இசை ஆர்வம் இருந்ததால, கண்டிப்பா ஒருநாள் ஜெயிப்பேன்னு தெரியும். ஆனா, '3’ படத்திலேயே இவ்வளவு பெரிசா ஜெயிப்பேன்னு எதிர்பார்க்கலை. அதுக்குக் காரணம் யூ-டியூப். 'கொலவெறி’ உலகம் முழுக்க ஹிட் அடிக்கும்னு எங்களுக்கே தெரியாது. அதுக்குப் பின்னாடி ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கு.

படத்துக்காக ஒரே ஒரு பாட்டு மட்டும் ரஃப் வெர்ஷன் பதிவு பண்ணியிருந்தோம். நல்லா ஞாபகம் இருக்கு. அன்றைக்கு அக்டோபர் மாதம் 16-ம் தேதி. என் பிறந்த நாள். என் ஃப்ரெண்ட் ஒருத்தர் போன் பண்ணி, 'உங்க பாட்டு இன்டர்நெட்ல வந்துடுச்சு’னு சொன்னார். எங்களுக்கு செம ஷாக். 'பாட்டே இன்னும் ரெடி ஆகலை. அதுக்குள்ள எப்படி?’னு யோசிச்சுட்டே யூ-டியூப்ல தேடிக் கேட்டா, ரொம்ப மொக்கையான வெர்ஷன் அது. யாரோ லீக் பண்ணிட்டாங்கனு புரிஞ்சுது. அந்தப் பாட்டைக் கேட்கும்போது எனக்கே கேவலமாக இருந்தது. இது இப்படியே ஆன்லைன்ல இருந்தா, நம்ம பேரு கெடும்... அதிர்ஷ்டம் இல்லைனு நினைச்சுடுவாங்கனு தோணுச்சு. அதனாலதான் அந்தக் 'கொலவெறி’ பாடலை 'மேக்கிங் வீடியோ’ மாதிரி நாங்களே யூ-டியூப்ல வெளியிட்டோம். ஆனா, இந்த ரீச் எதிர்பார்க்கலை!''

'அந்தப் பாடலைத் திருட்டுத்தனமாக ரீலிஸ் பண்ணினவரைக் கண்டுபிடிச்சீங்களா?''

''இல்லை. விசாரிச்சதுல பாட்டு அப்லோடு ஆன இடம் ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு நெட் சென்டர்னு தெரிஞ்சது. ஆனா, அதுக்குள்ள ஒரிஜினல் பாட்டு வெளியாகி மெர்சல் பண்ணிடுச்சு. அதனால அவரைக் கண்டுபிடிக்கலை!''

''ஒருவேளை இனிமே இன்னார்தான் அவர்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க?''

''என் சொத்துல பாதியை அவருக்கு எழுதி வெச்சுடுவேன்!''

'இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்... ரெண்டு பேர்ல உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்?''

''நான் 90’ஸ் பையன். ரஹ்மான் சார் பாடல்களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். சின்ன வயசுல ஒரு ரியாலிட்டி ஷோவில் அவர்

கையால் விருது வாங்கியிருக்கேன். பொழுதுபோக்கா சைடுல இருந்த இசை ஆர்வம், லட்சியமா மாறினது அன்றைக்குத்தான். ஆமா... ரஹ்மான் எப்பவும் எனக்கு ஸ்பெஷல். ஆனா, சினிமா மியூசிக் பண்ண ஆரம்பிச்சப் பிறகுதான் இளையராஜா சாரின் விஸ்வரூபம் புரிஞ்சது!''

'உங்க பாசிட்டிவ், நெகட்டிவ் விஷயங்கள் என்னென்ன?''

''என் வயசுதான் என் பாசிட்டிவ். இன்னைக்கு பசங்களுக்கு என்ன பிடிக்கும்னு தெரியுது. ஆனா, நாலு வருஷத்தில் எட்டு படங்கள்தான் பண்ணியிருக்கேன். இந்தச் சோம்பேறித்தனம்தான் என் நெகட்டிவ்!''

'நீங்க ஹீரோவா நடிச்சா... யார் ஹீரோயின்?''

''கடவுள் கருணையால் எனக்கு மியூசிக் நல்லா வருது. இப்ப இருக்கிறதைவிட இன்னும் நல்ல இசையமைப்பாளரா ஆகணும். அதான் என் ஆசை. நடிக்கணும்னு எனக்கு ஆசை இல்லை. ஆனா, எனக்கு இலியானா ரொம்பப் பிடிக்கும். ஒருவேளை நான் ஹீரோன்னா... அவங்கதான் ஹீரோயின்!''

'சின்ன வயசுல பெரிய வெற்றி. மனசு கொஞ்சம் தடுமாறினாலும் சிக்கல் ஆகிடுமே... எப்படி நிதானமா இருக்கீங்க?''

''என் குடும்பம்தான் காரணம். சூப்பர் ஸ்டார் ரஜினி எனக்கு அங்கிள் முறை. அவரை மாதிரி ஓர் அடக்கமான மனிதரை, இந்த உலகத்தில் நான் பார்த்ததே கிடையாது. அப்படியொரு குடும்பப் பின்னணியில் இருந்து வந்துட்டு, நான் அடக்கமா, அமைதியா இல்லைனாதான் தப்பு!''

'உங்க லைஃப் பார்ட்னர் எப்படி இருக்கணும்?'

''ரொம்ப சிம்பிளாக இருந்தா போதும். என்ன என் டைமிங்தான் சிக்கலான விஷயம். அவங்களுக்கு என் டைமிங் செட் ஆகணும். அதான் முக்கியம். நான் மாத்திக்கணுமா... இல்ல அவங்க மாத்திக்கணுமானு தெரியலை. பார்ப்போம். ஆனா, எனக்கும் கண்டிப்பா ஒருநாள் கல்யாணம் ஆகும்னு நம்பிக்கை இருக்கு!''

'உங்களைச் சுத்தி அவ்வளவு கிசுகிசுக்கள். எப்படிச் சமாளிக்கிறீங்க?''

''முதல் முறை கிசுகிசு வந்தப்ப பயந்துட்டேன். போன்ல இருந்து சிம்கார்டைத் தூக்கிப் போட்டுட்டு மும்பை போயிட்டேன். வேற நியூஸ் வந்து கிசுகிசு ஃபீவர் குறைஞ்ச பிறகுதான் சென்னைக்கு வந்தேன். அப்பவும் வெளியே எங்கேயும் போகலை. யாராவது, ஏதாவது கேட்பாங்களோனு பயம். அதுக்கு நடுவுல நான் படிச்ச லயோலா கல்லூரியில் நடந்த விழாவுக்கு, என்னை விருந்தினரா கூப்பிட்டிருந்தாங்க. நம்ம சொந்த மண்ணுல என்ன சொல்றாங்கனு பார்க்கலாம்னு போனேன். அங்கே கிசுகிசு பத்தி யாருமே கண்டுக்கலை. முன்னாடிவிட வரவேற்பு அப்ளாஸ் அதிகமா இருந்தது. கிசுகிசுவை மறந்துட்டேன். இப்ப கிசுகிசு வந்தா செம ஜாலியா இருக்கு!'

'நீங்க மியூசிக் பண்ணதில் உங்களுக்குப் பிடிச்ச பாட்டு எது?''

' 'கத்தி’ படத்துல வரும் 'ஆத்தி என நீ’. விஜய் மாதிரி மாஸ் ஹீரோ நடிக்கிற படத்தில், அந்த மாதிரி பாட்டுக்கு ஸ்பேஸ் கொடுக்க மாட்டாங்க. ஆனா, முருகதாஸ் சார் நிறைய சுதந்திரம் கொடுத்தார். அதனாலதான் அந்த மாதிரி பாட்டு பண்ண முடிஞ்சது. பொதுவா நான் மியூசிக் பண்ணின பாடல்களைத் திரும்ப கேட்கவே மாட்டேன். ஆனா, இப்ப வரை நான் கேட்டுட்டே இருக்குற பாட்டு... 'ஆத்தி என நீ’தான்!''

தொகுப்பு: நா.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள்: வீ.நாகமணி, ஆ.முத்துக்குமார், ஜெ.வேங்கடராஜ், ப.சரவணகுமார், தி.குமரகுருபரன்