Published:Updated:

2012 - ன் சிறந்த நடிகரும் 2016-ன் சீஃப் மினிஸ்டரும்!

சி.காவேரி மாணிக்கம்படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்

2012 - ன் சிறந்த நடிகரும் 2016-ன் சீஃப் மினிஸ்டரும்!

சி.காவேரி மாணிக்கம்படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:
##~##

'' 'ஒரு நாயகன் உருவாகிட்டான்... ஊரார்களின் இதயமாகிட்டான்!’ அந்தப் பாட்டு மெட்டுதான்...  இப்போ பல்லவி, சரணம் வரிகள் நான் சொல்றேன்... நோட் பண்ணிக்கோ.  'இரு நாயகர்கள் உருவாகிட்டாங்க.... டீனேஜ் பெண்களின் இதயமாகிட்டாங்க’!''

 ''ரெண்டு பேரும் சினிமா ஹீரோ ஆகிட்டீங்க... சினிமா அனுபவம் சொல் லுங்க!'' என்று 'மெரினா’ சிவகார்த்திகேயனையும் 'பரிதி’ ரிஷியையும் சந்திக்க வைத்தால், கிடைத்த கேப்பில் கிடா வெட்டிக்கொண்டு இருந்தார்கள் போங்கு பார்ட்டிகள்!  அடையார் 'ழ கபே’ விருந்தினர்களை இவர்களின் அதகளம் ரணகளம் ஆக்கிக்கொண்டு இருக்க, அதட்டி மிரட்டி வழிக்குக் கொண்டு வரவேண்டி இருந்தது!

''ரிஷி நீங்க நடிக்கிற 'பரிதி’ படத்துல எக்கச்சக்க ரொமான்ஸாம்... அதுல நீங்க முழு அர்ப்பணிப்போட நடிச் சீங்களாம்... டைரக்டர் பாராட்டினா ராம்... ஹீரோயின் பதறிச் சிதறி ஓடுனாங்களாம்... கடுமையா ஹோம் வொர்க் பண்ணிட்டுப் போயிருக்க போல!'' - காஸிப் பேசி கலாட்டாவை ஆரம்பித்தார் சிவா.

2012 - ன் சிறந்த நடிகரும் 2016-ன் சீஃப் மினிஸ்டரும்!

''அட நீங்க வேற... படத்துல ஒரே ஒரு கசங்குன சட்டைதான் என் காஸ்ட்யூம். முகத்துல கொசகொச தாடியும் தழும்பும்தான் மேக்கப். சிவாஜி படங்கள்ல கடைசி ஸீன்ல ஹீரோவும் ஹீரோயினும் லைட்டா தொட்டு, லைட்டா வெட்கப்படுவாங்களே... அந்த அளவுக்குத்தான் மொத்த ரொமான்ஸும்!'' என்று சோகமான ரிஷி, ''சரி... சரி... உங்களை எப்படி பாண்டிராஜ் சார் 'மெரினா’ படத்துல ஹீரோவா நடிக்க வைக்க முடிவெடுத்தார்?'' என்றார்.

''ஒரு நிகழ்ச்சியில பார்த்தப்ப, 'சினிமாவில் நடிக்கிறியா’னு கேட்டார் பாண்டிராஜ் சார். 'எனக்கு சினிமா நடிப்பு வரவே வராதே’னு சொன்னேன். 'அதுதான் வேணும்’னு இழுத்துட்டு வந்துட்டார். ஆக, 2012 தேசிய விருது ஜூரிக்களே இப்பவே நோட் பண்ணிக்கங்க... நான் 'மெரினா’ படத்தில் நடிக்கலை... வாழ்ந்திருக்கேன்!  அப்புறம் ரிஷி தழும்பெல்லாம் வெச்சி நடிக்கிறீங்களே... 'சைக்கோ’ கேரக்டரா?'' - கேள்வியுடன் முடித்தார் சிவா.

''அடப்பாவி... தழும்புவெச்சு நடிச்சா சைக்கோவா? எந்த ஊருப்பா நீ?'' என்று மிரண்ட ரிஷி, ''ஆமா உனக்குக் கோபமே வராதுன்னு சொல்றாங்களே. உண்மையா?'' என்று கேட்க,

''ஆமா... எனக்குக் கோபமே வராது. நான் யார் மேலயாவது கோபப்பட்டு, அவங்க என்னை அடிச்சிட்டா  என்னால அந்த வலியைத் தாங்க முடியாது. அதனால நான் கோபப்பட மாட்டேன்!'' என்று 'கம்பெனி ரகசியம்’ சொன்னார் சிவா. 'கபகபவென’ அடக்க முடியாமல் சிரித்தார் ரிஷி. சில நிமிடங்களுக்குப் பிறகும் ரிஷி நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே இருக்க,

2012 - ன் சிறந்த நடிகரும் 2016-ன் சீஃப் மினிஸ்டரும்!

''உங்களுக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்னு கேள்விப்பட்டேன்.ராத்திரியும் பகலும் 'நான் உங்களை லவ் பண்றேன். டீலா... நோ டீலா’னு போன் மேல போன் குவியுதாமே?'' என்று கொஞ்சம் விஷமம் கலந்து சிவா கேட்க, உடனே முகம் சுருங்குகிறது ரிஷிக்கு. ''என்னத்த பாஸ்? இதுல மட்டும் கொஞ்சம்கூட உண்மை இல்லை. உங்களுக்கு யாரோ கரெக்டா போன் பண்ணி என்னைப் பத்தி தப்புத் தப்பாவே தகவல் தர்றாங்க!'' என்று சோக ராகம் பாடினார் ரிஷி.

2012 - ன் சிறந்த நடிகரும் 2016-ன் சீஃப் மினிஸ்டரும்!

''இப்போ நான் ஒரு உண்மை சொல்றேன் நண்பா... உங்களுக்கும் எனக்கும் மொபைல் நம்பர்ல கடைசி ஒரு நம்பர்தான் வித்தியாசம். நிறைய தடவை... 'ரிஷி இருக்காரா’னு கொஞ்சிக் கெஞ்சி பொண் ணுங்ககிட்ட இருந்து போன் வரும். 'இல்லை... அவர் குழந்தைக்கு உடம்புக்கு முடியலை. ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கார்’, 'அவருக்கு பி.பி., ஷ§கர்லாம் ஓவர் ஆகிடுச்சு. மாஸ்டர் ஹெல்த் செக்-அப் எடுத்துட்டு ஒரு வாரம் ரெஸ்ட்ல போயிடுவார்’னு ட்ரீட்மென்ட் காரணங்களா சொல்வேன். உடனே, படக்குனு லைனை கட் பண்ணிரு வாங்க. அவங்க கட் பண்ணது போன் லைனை இல்லை நண்பா... உன் லைஃப் லைன். ஹாஹ்ஹாஹ்ஹா...'' என்று 'ரஜினி’ சிரிப்புடன் சிவா  சதாய்க்க,  ''அடப்பாவி... நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டா? இந்தப் படம் ஹிட் ஆகி, நான் படிப்படியா ஆக்ஷன் ஹீரோ ஆகி, 2016-ல முதல்வர் ஆகுறதுக்கு முன்னாடி நடிக்கிற கடைசி படத்துல உன்னை வில்லனா நடிக்கவெச்சு, க்ளைமாக்ஸ் ஃபைட்ல உன்னைக் கதறக் கதற அடிச்சு ஓடவிடலை...'' என்று பொங்கிய ரிஷி, சட்டெனத் தணிந்து பணிந்து, ''அப்படிலாம் நான் பண்ணாம இருக்கணும்னா, இப்போ காபி ஷாப்  பில்லை நீ கொடு!'' என்று அந்தப் பக்கம் பம்மிப் பதுங்க... இந்தப் பக்கம், ''ஹெஹேய்ய்... ஹேஹே... ஹெஹேய்ய்ய்!'' என்று தலை மறைவாகிவிட்டார் சிவா.