Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

இனி இல்லை இருட்டு!

நானே கேள்வி... நானே பதில்!

இனி இல்லை இருட்டு!

Published:Updated:
##~##

''சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மன நிலை இப்போது என்னவாக இருக்கும்?''

 ''மரண தண்டனையை எதிர்த்து எழுதிய கவிஞர் சமீஹ் அல் காசிமின் கவிதையைப் போல இருக்கும்.

'என்னை இறுதியில்
சந்திக்க வருவது
ஒரு குருட்டு வெளவாலாக
இருக்காது என்று நான் நம்புகிறேன்.
அது பகலாகத்தான் இருக்கும்.
அது பகலாகத்தான் இருக்கும்!’ ''

- கி.செம்மலர், சேலம்.

''அண்ணா ஹஜாரே குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசியதாக ஸ்ரீராம் சேனா அமைப்பினர் அவரை அடித்து உதைத்திருக்கிறார்களே?''

''பெங்களூரில் உள்ள பப்பில் புகுந்து பெண்களைத் தாக்குவது, காதலர் தினத்தில் காதலர் களைத் தாக்குவது ஆகியவற்றையே முழு நேர இயக்கச் செயல்பாடாகக்கொண்ட இந்த அமைப் பின் தலைவர் முத்தலிக்கை, சென்ற ஆண்டு தெகல்ஹா பத்திரிகையும் ஹெட்லைன்ஸ் டுடே சேனலும் இணைந்து அம்பலப்படுத்தி இருந்தன. ஒரு நிருபரை ஓவியராக நடிக்கவைத்து, 'தன் ஓவியக் கண்காட்சியில் உங்கள் ஆட்கள் கலவரம் செய்தால், எனக்கு விளம்பரம் கிடைக்கும்?’ என்று பேசவைக்க '60 லட்ச ரூபாய் கொடுத்தால் கலவரம் செய்யத் தயார்’ என்று கலவர பேரம் பேசியவர்தான் முத்தலிக். காசு வாங்கிக்கொண்டு கலவரம் நடத்தும் முத்தலிக், காஷ்மீர் குறித்து கருத்து மட்டும் சொல்லும் பிரசாந்த் பூஷண் - இருவரில் யார் இந்தியாவுக்கு எதிரானவர்?''

- எம்.பார்த்தசாரதி, ஸ்ரீரங்கம்.

நானே கேள்வி... நானே பதில்!

''ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் எதிராக ரத யாத்திரையை ஆரம்பித்துவிட்டாரே அத்வானி?''

''முதலில் அவர் ரதம் லேண்ட் ஆக வேண்டிய இடம் கர்நாடகா!''

- லாவண்யா, கரூர்.

''தி.மு.க. கூட்டணியில் இருந்து தானாகக் கழற்றிக்கொண்ட ராமதாஸ், கழற்றிவிடப்பட்ட திருமாவளவன் இருவரும் விஜயகாந்த்தைப் பார்த்து என்ன நினைத்துக்கொள்வார்கள்?''

'' 'நானாவது சைக்கிள்ல லைட் இல்லாம வர்றேன். ஆனால், பின்னாடி ஒரு ஆள் சைக்கிளே இல்லாம வர்றார்’ என்பதாக இருக்கும்!''

- ச.ஜான்பிரிட்டோ, திண்டுக்கல்.

நானே கேள்வி... நானே பதில்!