Published:Updated:

கட்டியக்காரி கொடுத்த மொளகாப் பொடி !

ந.வினோத்குமார் படங்கள்: ஜெ.தான்யராஜு, ஆ.வின்சென்ட் பால்

கட்டியக்காரி கொடுத்த மொளகாப் பொடி !

ந.வினோத்குமார் படங்கள்: ஜெ.தான்யராஜு, ஆ.வின்சென்ட் பால்

Published:Updated:
##~##

''நான் சென்னைக்காரன். நாடகத்துக்குச் சம்பந்தம் இல்லாத ஒரு குடும்பப் பின்புலத்தில் இருந்து வந்தவன்'' என்று சிநேகமாகச் சிரிக்கிறார் ஸ்ரீஜித்.

ஆனால், இவர் இயக்கிய 'மொளகாப் பொடி’ என்ற  நாடகம், காரசார விவாதங்களை எழுப்பி இருக்கிறது. வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் தேசிய நாடகப் பள்ளியின் கௌரவமிக்க நாடக விழாவுக்கும் தேர்வாகி இருக்கிறது. நாடகத்தின் கரு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கருக்கு’ பாமாவின் 'ஒரு தாத்தாவும் எருமையும்’ எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'மொளகாப் பொடி’ எனும் சிறுகதையின் மேல் கட்டமைக்கப் பட்ட நாடகம். நில உடைமை ஆதிக்கத் தைக் கையில்கொண்டு இருக்கும் ஒரு ஆதிக்க சாதிப் பெண்ணின் நிலத்தில், புல் அறுத்த தலித் பெண் ஒருவருக்குத் தண்டனையாக அவள் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவுகிறாள். காவல் துறையைக் கையில் போட்டுக்கொண்டு, தன்னுடைய நிலத்துக்குள் வந்த தலித் பெண்களைச் சிறைக்கு அனுப்புகிறாள். காவல் நிலையத்தில் 'தண்டம் கொடுத்தால் விட்டுவிடுகிறோம்’ என்று போலீஸார் சொல்ல, அதற்கு அந்தப் பெண்கள் புரிந்த எதிர்வினை... நாடகம் பார்க்கும் எவரையும் அதிர்வுகளுக்கு ஆளாக்கும்!

கட்டியக்காரி கொடுத்த மொளகாப் பொடி !

பாமாவின் சிறுகதையில் சின்னச் சின்ன மாற்றங்களுடன் இயல்பான எள்ளல்கள், பாடல்கள், வசனங்கள் மூலம்ரசிகர் களிடையே எழுச்சியை ஏற்படுத்து வதில் வெற்றி கண்டு இருக்கிறது இந்த நாடகம்!

கட்டியக்காரி கொடுத்த மொளகாப் பொடி !

புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு கற்றிருக்கும் ஸ்ரீஜித்,   விளம்பரம் மற்றும் ஆவணப் பட இயக்குநர், நடனக்காரர், பாலியல் சிறுபான்மையினருக்கான போராட் டங்களை முன்னெடுத்துச் செல் பவர் எனப் பல முகங்கள்கொண்டு இருக்கிறார்.  

''பொதுவாக, நாடக அரங்கில் ஆண்கள், பெண்கள், பாலியல் சிறு பான்மையினர்னு தனித் தனியா இயங்கு றாங்க. இவர்கள் எல்லோரையும் ஒருங்

கிணைச்சு, ஒரு குழு நடத்தணும்னு 'கட்டியக்காரி கலைக் குழு’ அமைச்சோம். பாமாவின் 'மொளகாப் பொடி’ கதையைப் பத்திச் சொன்னாங்க அ.மங்கை. தலித் கதைகள்னா சோகம்தான் அதிகமா இருக்கும். ஆனா, பாமாவின் எழுத்தில் நையாண்டி நிறைஞ்சு இருக்கும்.

செய்யாறில் இந்த நாடகத்தை அரங்கேற்றியபோது, நாடகத்தில் போலீஸாரை நையாண்டியாகச் சித்திரித்து இருந்ததால், அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த 'பிரக்ஞை’ அமைப்பின் இளைஞர்களை போலீஸ் கூப்பிட்டு மிரட்டி இருக்காங்க. இதே நாடகத்தை செங்கல்பட்டில் பஞ்சமி நிலங்களை மீட்கப்

கட்டியக்காரி கொடுத்த மொளகாப் பொடி !

போராடும் 'சாம்’ அமைப்பு அங்கு நடத்தினாங்க. 300, 400 பெண்கள் பார்வையாளர்களா இருந்தாங்க. நாடகம் ஆரம்பிச்சு முடியற வரைக்கும் ஆழ்ந்த அமைதி. 'ஏன் இப்படி?’னு பாமாகிட்ட கேட்டதுக்கு, 'அந்தப் பெண்கள் எல்லோரும் இந்த வலியை அனுபவிச்சு இருக்காங்க’னு சொன்னாங்க.

இந்த இரண்டு விதமான அங்கீகாரங் களும் ஒரு படைப்புக்குத் தேவை. நாடகம் பேசுகிற பிரச்னைகள், மக்களிடையே விழிப்பு உணர்வையும் விவாதத்தையும் ஏற்படுத்தணும்.

நாடக இயக்குநர் பிரளயன் முன் மொழிஞ்சு, சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத் 'அபிநயா தேசிய நாடக அரங்க விழா’வுக்குத் தேர்வானோம். அங்கே எங்கள் நாடகத்தைப் பார்த்துட்டு, தேசிய நாடகப் பள்ளியின் நாடக அரங்க விழாவுக்குத் தேர்வு செஞ்சு இருக்காங்க. உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்தான் இது.

'என் குரல் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் நான் பேசியாக வேண்டும்’ங் கிற கவிஞர் இன்குலாப்பின் வரிகள்தான் எனக்கான உந்து சக்தி. இன்னும் பேசப்பட வேண்டிய பிரச்னைகள் நிறைய இருக்கு. என் நாடகங்கள் அதைச் செய்யும்!''