பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

facebook.com/sowmya.ragavan: `டிரெஸ் நல்லா இருக்கா?' என்பது முதல் சுற்று.

`எனக்கு நல்லா இருக்கா?' என்பது அரை இறுதிச் சுற்று.

`இந்த டிரெஸ்ல நான் நல்லா இருக்கேனா?' என்பது இறுதிச்சுற்று.

facebook.com/nelsonxavier08: வழி தவறி (?!) வந்த ஒரு யானையை, பிணமாக காட்டுக்குத் திருப்பி அனுப்புகிறோம் என்றால், உண்மையில் யார் மிருகம்?

twitter.com/i_am_v_jey: சோட்டா பீம்கூட காட்டுலயும் மேட்டுலயும் ஃப்ரெண்ட்ஸோடு விளையாடுறான். பாவம், இந்தப் பிள்ளைங்க அவன் விளையாடுறதை டி.வி-யில் பார்த்துட்டு வீட்டுக்குள்ளேயே கிடக்குதுக!

twitter.com/sundartsp
: ஒரே ராக்கெட்ல இருபது சாட்டிலைட்டாம்... ஷேர் ஆட்டோ கண்டுபிடிச்ச ஊருடா!

twitter.com/vandavaalam:
துணி ஊறவெச்சுருக்கேன் என்பதுபோல் மரண பயம் தரக்கூடியது வேறு எதுவும் இல்லை.

twitter.com/itisLekha: உங்க கண்ணுக்கு நாங்க வாஷிங் மெஷினாவும் குக்கராவும் தெரியுற வரைக்கும், எங்க கண்ணுக்கு நீங்க ஏ.டி.எம் டப்பா மாதிரிதான் தெரிவீங்க!

twitter.com/ZhaGoD: ஆமா... அந்த 570 கோடி ரூபாய் என்னதான்யா ஆச்சு? அது பணமே இல்லை, பழைய லாட்டரிச் சீட்டுனாச்சும் கேஸை முடிச்சீங்களா... இல்லையா?!

twitter.com/pshiva475: 
முன்னாடி எல்லாம் பவுடர் அடிச்சு நல்லா மேக்கப் போட்டு போட்டோ எடுத்தாங்க! இப்போ, சிம்பிளா போட்டோ எடுத்துட்டு மேக்கப் போடுறாங்க!

twitter.com/kEdi_kRRisH: நீங்க ஆபீஸுக்கு லேட்டா வந்தா, போட்டுக்குடுக்க நூறு பேர் இருப்பாங்க. ஆனா, ஆபீஸைவிட்டு லேட்டா போறதைப் பார்க்க ஒரு பய இருக்க மாட்டான்!

twitter.com/bommaiya: ஓடுற அத்தனை ட்ரெய்ன்லயும் ஓப்பன் டாய்லெட்டைக் கட்டிவெச்சுட்டு, `திறந்தவெளியில் மலம் கழிக்காதீர்கள்'னு பல ஆயிரம் கோடி செலவுல அட்வைஸ்  பண்றாங்க!

வலைபாயுதே

twitter.com/David_EXIM: `உங்களை மாதிரி இல்லை. நம்ம பையனை நான் நல்லவனா வளர்க்கிறேன்'கிறா... # எவ்ளோ நுட்பமா எங்க அம்மாவைத் திட்றா பாருங்கய்யா!

twitter.com/aruntwitz: மொபைல் கேமராவுக்கு விதவிதமா போஸ் கொடுக்க தெரியுது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு மட்டும் முகத்தை எப்படி வெச்சிக்கிறதுனுதான் தெரியலை!

twitter.com/dhanalakshmirs: கடல் சங்கைக் கண்டவுடன் காதில் வைத்துக் கேட்கும் அளவுக்கு வாழ்வின் சுவாரஸ்யங்கள் மீதம் இருக்கின்றன!

twitter.com/BoopatyMurugesh:
  ஒரே வாரத்தில் ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் ஓட்டுக்கு பணம் தர முடிந்த தேசத்தில், ஒன்றரை வருடமாக எல்லோருக்கும் ஆதார் கார்டு தர முடியவில்லை :-)

twitter.com/Shanthhi:
  சில தோழிகளின் குடும்பப் பிரச்னைகளைக் கேட்கும்போது ரொம்பப் பாவமா இருக்கு... அவங்க குடும்பத்துல இருக்கிறவங்களை நினைச்சு!

facebook.com/nelsonxavier08

சம்பவம்1: ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்கால நாட்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில், போக்குவரத்து அமைச்சராக யார் இருந்தாலும் தவறாமல் ஒரு பேட்டி தருவார்கள்... `தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.'

சம்பவம் 2: ஆம்னி பேருந்துகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க, எல்லா பேருந்துகளிலும் அரசுக் கட்டணத்தை எழுதி ஒட்ட வேண்டும். கூடுதல் கட்டணப் புகார்களைப் பெற, புதிய தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருக்கிறது.

சம்பவம் 3: தீர்ப்பைக் கேட்டு பதறி எழுந்த அரசுத் தரப்பு வழக்குரைஞர், ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க ஏற்கெனவே அரசு சார்பில் புகார் எண்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பயணிகள், 044-24749001, 044-26744445 இந்த எண்களில் புகார் செய்யலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.

அதிர்ச்சி1: நேற்று தீர்ப்பு வந்ததும், நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்கள் சிலர் அந்தப் புகார் எண்ணுக்கு அழைத்திருக்கிறார்கள். போனை எடுத்த அலுவலக உதவியாளர், `இது புகார் தெரிவிக்கும் எண்ணே இல்லை. அரசுத் துறையின் இணைச்செயலாளர் எண். இந்த எண்ணில் கட்டணக் கொள்ளை தொடர்பான எந்தப் புகார்களும் பெறப்படுவது இல்லை' எனச் சொல்லியிருக்கிறார். `சரி, புகார்செய்ய வேறு தொலைபேசி எண்ணைக் கொடுங்கள்' எனக் கேட்க, `ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு என, தனி புகார் எண்களே இல்லை. ஆட்டோ ஓட்டுநர்கள், மீட்டர் பற்றிய புகார்களுக்கு மட்டுமே புகார் எண் இருக்கிறது' என்றிருக்கிறார்.

அதிர்ச்சி2: `கூடுதல் கட்டணம் பெறும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை' என அரசு சொல்லியிருப்பதால், `எவ்வளவு கட்டணம்?' என ஆராய்ச்சியில் இறங்கினால், அதிர்ச்சி காத்திருக்கிறது.

SETC அரசு இணையதளத்தில் சென்னை - திருச்சி இடையே (382 கி.மீ) சாதாரண பேருந்துக் கட்டணம் ₹186. Red Bus, Makemytrips போன்ற இணையதளங்களில் (பண்டிகைக் காலங்கள், வெள்ளி, சனி, ஞாயிறு இவற்றை எல்லாம் தண்ணிதெளித்து விட்டுவிடுங்கள்) வார நாட்களில் ஏசி இல்லாத சாதாரணப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ₹450. ஆக,  `சட்டத்தை எப்படி இப்படி வெளிப்படையாக மீறுகிறார்கள்?' எனக் கேட்டால், அடுத்த அதிர்ச்சிக்குத் தள்ளுகிறார்கள்.

அதிர்ச்சி 3: தமிழ்நாட்டில் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு, அரசு பயணக் கட்டணமே நிர்ணயிக்க முடியாது. ஏன்?

அதிர்ச்சி 4:
தமிழ்நாட்டில் பயணிகள் போக்குவரத்துக்காக ஆம்னி பஸ்களுக்கு அனுமதியே வழங்கப்படவில்லை.

ஐயோ! அப்புறம்..?

அதிர்ச்சி 5: பிறகு எப்படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன?

ஐம்பது பேர் ஒரு திருமணத்துக்காக வெளியூர் செல்கிறோம் என தனியார் ஆம்னி பேருந்தோடு ஒப்பந்தம் செய்து, பேருந்தையே வாடகைக்கு எடுத்துச்செல்வோம் இல்லையா, அது மாதிரி குழுவாக ஆம்னி பேருந்துகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுத்தான் தினம் தினம் இயக்கப்படுகின்றன. (ஆம்னி பஸ்ஸுல பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவன் சட்டப்படி உங்க சொந்தக்காரனாக இருக்கக்கூடும்).

அதிர்ச்சி 6: தமிழ்நாட்டில் Semi Sleeper, Sleeper வகை பேருந்துகளுக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவே இல்லை. வெளிமாநில ரிஜிஸ்ட்ரேஷனில் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி 1
: சட்டபூர்வமாக தனிநபர் பயணத்துக்கே அனுமதி இல்லாத நிலையில், `ஆம்னி பஸ், உரிமையாளர்கள், கூடுதல் கட்டணம் வாங்கக் கூடாது' என, எப்படி மாநில அமைச்சர் பேட்டி கொடுக்க முடியும்?

கேள்வி 2: அரசு அனுமதி இல்லாத பயணத்துக்கு, அரசுத் தரப்பால் கட்டணமே நிர்ணயிக்க முடியாத பயணத்துக்கு எப்படி `கட்டணக் கொள்ளை' என ஒரு புகார் இருக்க முடியும்? அதற்கு எப்படி ஓர் அரசு புகார் எண் அறிவிக்கப்பட முடியும்? அதை எப்படி ஓர் அரசு வழக்குரைஞர் தைரியமாக நீதிமன்றத்தில் சொல்ல முடியும்?

கோரிக்கை: கூடுதல் பயணக் கட்டணம், கட்டணக் கொள்ளை தொடர்பான புகார் எண், ஆண்டுதோறும் அமைச்சரின் தெம்பூட்டும் பேச்சு, நீதிமன்றத்துக்குத் தவறான தகவல் என போங்கு ஆட்டம் ஆடாமல், காலத்துக்கு ஏற்ப மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்தித் தொலையுங்கள்!

குறிப்பு:


27-6-16 அன்று மீண்டும் விகடன் சார்பில் 044-24749001-ல் அழைத்தபோது, `புகாருக்கு இந்த எண்தான். ஆனால், 20-ம் தேதி நீதிமன்ற ஆணை வந்த பிறகுதான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும்' என ஒருவர் தெரிவித்தார். `மேலதிகாரியிடம் பேச முடியுமா?' என்றதற்கு, மழுப்பலாகப் பதில் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு