Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

ந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்குத் திருமணம். கூடைப்பந்து வீராங்கனை பிரத்திமா சிங்கை மணக்கிறார். மணமகளின் சகோதரிகள் நான்கு பேருமே கூடைப்பந்தாட்ட வீராங்கனைகள்தான். பிரத்திமா சிங்கின் அக்கா பிரஷாந்தி, தற்போது இந்தியக் கூடைப்பந்து அணியின் கேப்டன். `கூடைப்பந்து ஆட்டத்துக்கு ஒருமுறை சிறப்பு விருந்தினராக வந்தார் இஷாந்த். கண்டதும் காதல்தான். ஐந்து ஆண்டு காதல், இப்போது திருமணத்துக்கு வந்திருக்கிறது' எனச் சிரிக்கிறார் பிரத்திமா.

பிட்ஸ் பிரேக்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`கடந்த வாரம், ஆன்லைன் தொடர்பாக சில விஷயங்கள் என் கவனத்துக்கு வந்தன. அதில் இந்தியாவில் வரி செலுத்துவது எப்படி, வழிமுறைகள் என்ன என்பதை ஏழு கோடிப் பேர் தேடிப் படித்திருக்கிறார்கள். ஆனால், வரி செலுத்தாமல் தப்பிப்பது எப்படி என்பதை 12 கோடிப் பேர் படித்திருக்கிறார்கள். இதுபற்றி ஐடியாக்கள் தர பல வலைதளங்களில் சிறப்புக் கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். வருமான வரி கட்டுவது குடிமக்களின் கடமை. அதில் இருந்து தப்பிக்க நினைப்பது குற்றம் என்பதுகூடத் தெரியாதா?' என உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் பிரதமர் மோடி.

சிறையில் இருந்தபடி படித்து ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றிருக்கிறார் பியூஷ் கோயல். பியூஷின் தந்தை கொலைவழக்கில் கைதாகி ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரச் சிறையில் ஆயுள்தண்டனைக் கைதியாக இருக்கிறார். `ஓப்பன் ஜெயில்' எனப்படும் இங்கே, பகலில் வெளியே சென்று வேலைசெய்துவிட்டு, மாலை திரும்பிவரும் வாய்ப்பு உண்டு. அப்படி வேலைசெய்து தனது மகனைப் படிக்கவைத்தார் பியூஷ். விடுதிக் கட்டணம் அதிகம் என்பதால், தந்தையுடன் சிறையிலே தங்கி இதைச் சாதித்திருக்கிறார் பியூஷ்.

பிட்ஸ் பிரேக்

தாலிபான்களை எதிர்த்துப் போராடிய மலாலா யூசுஃப்சாய் எழுதிய `ஐ'யம் மலாலா' புத்தகம், இதுவரை 18 லட்சம் பிரதிகள் விற்று சாதனைப்படைத்திருக்கிறது. உலகம் எங்கும் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு விற்பனையான இந்தப் புத்தகத்தின் மூலம் வந்த ராயல்டி தொகை மட்டும் 10 கோடி ரூபாய். `இதை என் தொண்டு நிறுவனம் மூலம் ஏழைக் குழந்தைகளின் படிப்புக்குச் செலவிடுவேன்' என்கிறார் மலாலா.

பிட்ஸ் பிரேக்

யக்குநர் சேகர் கபூரின் 15 வயது மகள் காவேரி கபூர்தான் கடந்த வார ஆன்லைன் சென்சேஷன். ஆறு வயதில் இருந்து இசை பயின்றுவரும் காவேரி, தானே எழுதி இசையமைத்துப் பாடிய `டிட் யூ நோ..?' என்ற பாடல் யூடியூபில் ரிலீஸான வேகத்தில் ஐந்து லட்சம் வியூஸை அள்ளியிருக்கிறது. ஷாரூக், ஹ்ரித்திக், அபிஷேக் என பாலிவுட் உலகமே காவேரிக்கு லைக்ஸ் தட்டியிருக்கிறது!

யோபிக் சீஸனில் அடுத்து சினிமாவாக இருப்பது அண்ணா ஹஜாரேவின் வாழ்க்கை. `கடந்த பன்னிரண்டு வருடங்களில் என் கிராமத்தை லட்சக்கணக்கான மக்கள் வந்து பார்வையிட்டு, என் பணிகளைப் பற்றி தெரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் இது இன்னும் நிறையப் பேருக்குச் சென்றடையும்' என, படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவில் தெரிவித்திருக்கிறார் அண்ணா ஹஜாரே. `அண்ணா கிசான் பாபுராவ் ஹஜாரே' என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இயக்கி, அண்ணாவாகவும் நடித்திருக்கிறார் ஷஷாங்க்.