Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• 10 ஆண்டு பிரேக்குக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாகி இருக்கும் சிரஞ்சீவியின் ஸ்டைலிஸ்ட் யார் தெரியுமா? அவரது மூத்த மகள் சுஷ்மிதா. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷனில் படித்தவரான சுஷ்மிதா, அப்பாவுக்கான காஸ்ட்யூம் களை வடிவமைப்பதில் செம பிஸி. ``அப்பாவுக்கு இப்போது 60 வயது. தமிழ் `கத்தி'யில் 40 வயது விஜய் ஹீரோவாக நடித்தார். என்னுடைய சேலஞ் எல்லாமே விஜய்யைவிட அப்பாவை இளமையாகக் காட்டவேண்டும் என்பது தான்'' என்கிறார் சுஷ்மிதா. ஸ்டைல் அப்பா... ஸ்டைலிஷ் பொண்ணு!

இன்பாக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

•   தமிழ், தெலுங்கு என ஆரம்பித்து, தற்போது நிரந்தரமாக இந்திப் பக்கம் ஒதுங்கி இருக்கிறார் இலியானா. அக்‌ஷய் குமாரின் `ருஸ்டம்' படத்தின் ஹீரோயின் இலியானாதான். 1959-ம் ஆண்டு நடந்த நானாவதி கொலை வழக்கு, இந்தியா முழுவதும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்கு. கடற்படை கமாண்டர்  நானாவதியின் மனைவி அஹுஜா, பிரேம் என்பவரைக் காதலித்தார். இதைக் கண்டுபிடித்த நானாவதி, பிரேமைச் சுட்டுக்கொன்றுவிட, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம். ஆனால், இரண்டே ஆண்டுகளில் நானாவதி விடுதலையானார். மிகவும் பரபரப்பைக் கிளப்பிய இந்த வழக்கைத்தான் `ருஸ்டம்' என படமாக்கி இருக்கிறார்கள். கடந்த வாரம் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர், இதுவரை 50 லட்சம் ஹிட்ஸ்களை அள்ளி இருக்கிறது. ட்ரெய்லர் மெர்சல்!

• `நெய்யப்பம், நட்டெல்லா இரண்டும் இல்லை. ஆண்ட்ராய்டு நெளகட்தான் ஃபைனல்' என அறிவித்துவிட்டது கூகுள். `ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு இனிப்புகளின் பெயர்களை வைத்துவரும் கூகுள், அடுத்த வெர்ஷனான ஆண்ட்ராய்டு 7-க்கு இந்திய பெயர் வைக்கும் திட்டம் இருக்கு' எனச் சொன்னார் சுந்தர் பிச்சை. அடுத்த மாடலுக்கு `N' எழுத்தில் பெயர் வைக்கலாம் என அறிவித்து, சமூக வலைதளங்களில் போட்டி நடத்தினார்கள். இதனால் N-ல் தொடங்கும்  நெய்யப்பம், நெய் முறுக்கு பெயர்கள் ட்ரெண்டு அடிக்க, இறுதியாக `நெளகட்' பெயரை வைத்திருக்கிறது கூகுள்.  போட்டியில் அதிக வாக்குகள் வாங்கியது நெய்யப்பம்தான், ஆனால், கூகுள் நிறுவனம் போங்கு ஆட்டம் ஆடிவிட்டது என சோஷியல் மீடியாவில் ஸ்டேட்டஸ்கள் பறக்கின்றன. ஸாரி...மல்லூஸ்!

இன்பாக்ஸ்

• `நெய்மார், மான்செஸ்டர் அணிக்குத் தாவப்போகிறார்' என செய்திகள் முளைக்க, 1,860 கோடி ரூபாய்க்கு 2021-ம் ஆண்டு வரை அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறது பார்சிலோனா.

2013-ம் ஆண்டில் இருந்து பார்சிலோனா அணிக்காக விளையாடிவருகிறார் பிரேசிலின் நெய்மார். இந்த ஒப்பந்தம் 2018-ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு நெய்மாரை வாங்க இங்கிலாந்தின் மான்செஸ்டர் அணி முயற்சித்தது. இதனால் ஒப்பந்தம் முடிய இரண்டு ஆண்டுகள் இருக்கும் முன்னரே நெய்மாருடன் டீலை முடித்திருக்கிறது பார்சிலோனா. நெய்மார் ராக்ஸ்!

இன்பாக்ஸ்

•   தீபிகாவின் சாதனையை சமன் செய்திருக்கிறார் ஜோஷ்னா சின்னப்பா. ஸ்குவாஷ் ரேங்கிங்கில் முதல்முறையாக டாப் டென்னில் இடம்பிடித்தவர் தீபிகா பலிக்கல். இப்போது தீபிகா 19-வது ரேங்குக்குச் சரிய, டாப் டென்னுக்குள் நுழைந்திருக்கிறார் ஜோஷ்னா. ``கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக ஸ்குவாஷ் விளையாடிவருகிறேன். டாப் டென்னுக்குள் நுழைய வேண்டும் என்பது பல ஆண்டுக்கனவு. இதற்கு தாமதமாகிவிட்டது. ஆனால், உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆக, நீண்டகாலம் எடுத்துக்கொள்ள மாட்டேன்'' என்கிறார் ஜோஷ்னா. ஜோஷ்னா சூப்பர்ப்பா!

• புத்தகமாக வெளிவந்து குழந்தைகள் மனதில் இடம்பிடித்த ‘தி பிக் ஃப்ரெண்ட்லி ஜெயன்ட்’தான் ஆஸ்கர் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் அடுத்த படம். ‘`என்னுடைய முதல் புத்தகமாக நான் படித்தது பி.எஃப்.ஜி-தான். அதை இப்போது படமாக்கும்போது நான் குழந்தைப்போலவே மாறிவிட்டேன்’' என்கிறார் ஸ்பீல்பெர்க். அனிமேஷன் பாதி, ஆட்கள் மீதி என எடுக்கப்பட்டிருக்கும் இந்த மெகா பட்ஜெட் ஃபேன்டசி படத்தின் நாயகி ரூபி பார்ன்ஹில். இந்தியில் இவருக்கு குரல் கொடுத்திருப்பவர் பரிணீதி சோப்ரா.  தி பிக் ஃப்ரெண்ட்லி வாய்ஸ்!

• ஹாலிவுட்டின் வசூல் ராஜாக்களுக்கு மத்தியில் மிகப் பெரிய வசூல் ராணியாக உயர்ந்திருக்கிறார் ஸ்கார்லெட் ஜோஹன்சன். வில்ஸ்மித், மேட் டிமோன், லியாம் நீசனுக்கு அடுத்து சென்ற ஆண்டில் தன் படங்களின் மூலம் அதிக வசூலை வாரிக்குவித்திருப்பது ஸ்கார்லெட்தான். கடந்த ஆண்டு மட்டும் அவருடைய படங்கள் சம்பாதித்திருக்கும் தொகை 3.3 பில்லியன் டாலர்கள். பில்லியன் டாலர் பேபி!

இன்பாக்ஸ்

• ``என் குழந்தைகளை மீடியாவிடம் இருந்து மட்டும் அல்ல, என்னிடம் இருந்தே தள்ளிவைக்க விரும்புகிறேன். முதலில் என் மகனைப் பற்றிய செய்திகள் ஆன்லைனில் பரவின. இப்போது என் 16 வயது மகள் தன் தம்பியுடன் பீச்சில் இருப்பதை, `ஷாரூக் கான் மகள், பிகினி உடையில்'என அருவருப்பான கமென்ட்டுகளுடன் ஆன்லைனில் பரப்புகிறார்கள்.சாதாரண ஒரு விஷயத்தைக்கூட ஏதோ மிகப் பெரிய தவறு செய்துவிட்டதுபோல அவர்களை நினைக்கவைக்கிறார்கள். எனக்கு என் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பயமாக இருக்கிறது'' என வருத்தப்பட்டிருக்கிறார் ஷாரூக் கான். திருந்துங்கப்பா!

• 33 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சக்திவாய்ந்த, எடை குறைந்த `தேஜாஸ்' போர் விமானம் வெற்றிகரமாக விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது. 1983-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த விமானத்தை உருவாக்குவதற்கான முயற்சி, இப்போதுதான் முடிந்தது. 560 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் முடியும்போது 13 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கிறது! ப்ரைடு ஆஃப் இந்தியா