Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான அச்சுறுத்தல்கள் பெருகிக்கொண்டிருக்கிற காலகட்டம் இது.

பொது இடங்களில் கேலிகளுக்கு உள்ளாவதில் தொடங்கி, பாலியல் சீண்டல்கள், பின்தொடரப்படுவது, தாக்குதல்களுக்கு உள்ளாவது... எனப் பிரச்னைகள் ஏராளம். இப்படிப்பட்ட ஆபத்துக்கள் நெருங்கும்போது நம்மைத் தற்காத்துக்கொள்ள இந்த ஆண்ட்ராய்டு செயலிகள் உதவும்...

விகடன் சாய்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

bSafe

நீங்கள் மோசமான சூழலில் சிக்கினால், உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இந்தச் செயலி உதவியோடு உடனடியாக தகவல் அனுப்பலாம். நீங்கள் எங்கேயாவது பயணிக்கும்போது, ஜி.பி.எஸ் உதவியோடு நண்பர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே உங்கள் பயணத்தைக் கண்காணிக்கலாம். யாராவது தொந்தரவு செய்யும்போது, உங்கள் செல்போனுக்கு போலியான அழைப்புகளை வரவழைக்கலாம். சிக்கலான நேரங்களில் Guardian alert button உதவியோடு, உங்கள் இருப்பிடம் மற்றும் நடக்கும் விஷயங்களை நண்பர்களுக்கு வீடியோவாக அனுப்பும் வசதி இந்தச் செயலியில் உண்டு.

இந்தச் செயலியை டவுண்லோடு செய்ய : https://goo.gl/jRVp3e

விகடன் சாய்ஸ்

Shake2Safety

இந்தச் செயலியைப் பயன்படுத்த இணைய வசதி தேவை இல்லை. ஆண்ட்ராய்டு செயலிகள் குறித்த தொழில்நுட்ப அறிவும் அவசியம் இல்லை. ஆபத்தில் சிக்கினால் உடனடியாக உங்கள் மொபைலை சிலமுறைகள் ஷேக் பண்ணினால் அல்லது பவர் பட்டனை நான்கு முறை அழுத்தினால்கூடப் போதும். `உதவி தேவை’ என்ற மெசேஜும் போன் அழைப்பும் நீங்கள் யாரை உதவிக்கு அழைக்க விரும்பிகிறீர்களோ அவர்களுக்குச் சென்றுவிடும்.

இந்தச் செயலியை டவுண்லோடு செய்ய : https://goo.gl/MMkb1O

விகடன் சாய்ஸ்

Women Safety

மிகவும் துரிதமாக, எளிமையாகச் செயல்படக்கூடிய முன்னணி செயலி இது. ஆபத்து நேரத்தில் கூகுள் மேப் உதவியோடு நாம் இருக்கும் இருப்பிடத்தோடு இந்தச் செயலி செய்தி அனுப்பும். என்றாலும், இது நம் போனில் இருந்து முன் மற்றும் பின்பக்க கேமரா உதவியோடு படங்கள் இரண்டையும், கூடவே ஆடியோ அல்லது வீடியோ செய்தியையும் எடுத்துச் சேமித்துக்கொள்ளும். அது நாம் யாருக்கு அனுப்ப விரும்புகிறோமோ அவரின் மின்னஞ்சலுக்கு (முன்னரே பதிவுசெய்த) அனுப்பிவிடும். பிரச்னைகளுக்கு ஏற்ப இதில் மூன்று பட்டன்கள் இருக்கின்றன. ஆபத்து அளவைப் பொறுத்து அதற்கு ஏற்ப செய்தி அனுப்பலாம்.

இந்தச் செயலியை டவுண்லோடு செய்ய :  https://goo.gl/iC7g0c

விகடன் சாய்ஸ்

Nirbhaya

நிர்பயா பாலியல் வன்கொடுமைச் சம்பவத்துக்குப் பிறகு உருவாக்கப்பட்ட செயலி இது. இதன் மூலம் ஒரே க்ளிக்கில் எமர்ஜென்சி அலர்ட்களை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுக்க முடியும். உங்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்திலும் அந்தச் செய்தி பகிரப்பட்டு அருகில் இருப்பவர்களிடம் இருந்து உதவிகிடைக்க வழிசெய்யும். பெண்கள் பயணிக்க ஆபத்தான பகுதிகள் உங்கள் நகரத்தில் இருந்தால், அதைக் குறிப்பிட்டு மற்றவர்களுக்கு உதவ முடியும். இந்தியாவின் பிரபல பாதுகாப்புச் செயலி இது.

இந்தச் செயலியை டவுண்லோடு செய்ய : https://goo.gl/QTkG4H

விகடன் சாய்ஸ்

Circle of 6

உங்களை ஆபத்தில் இருந்து காக்கக்கூடிய மிக முக்கியமான ஆறு பேரின் எண்களை இந்தச் செயலியில் பதிவுசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் காவல் துறை எண்கூட சேர்த்துக்கொள்ளலாம். ஆபத்துத் தருணங்களில் ஒரே ஒரு க்ளிக்கில் அந்த ஆறு பேருக்கும் `எனக்கு உதவி தேவை' என்ற உங்கள் குறுஞ்செய்தி சென்றுவிடும். கூடவே உங்கள் இருப்பிடம் குறித்த தகவலும் ஜி.பி.எஸ் உதவியோடு சென்றுவிடும். 

இந்தச் செயலியை டவுண்லோடு செய்ய: https://goo.gl/tsRkSV