Published:Updated:

“கச்சத்தீவு கொச்சின் பக்கத்துலயா இருக்கு?”

“கச்சத்தீவு கொச்சின் பக்கத்துலயா இருக்கு?”
பிரீமியம் ஸ்டோரி
News
“கச்சத்தீவு கொச்சின் பக்கத்துலயா இருக்கு?”

நா.சிபிச்சக்கரவர்த்தி, ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

“கச்சத்தீவு கொச்சின் பக்கத்துலயா இருக்கு?”

``உங்க ஜாலி கேள்வியினால் நிறையப் பேருக்கு டப்பா டான்ஸ் ஆடினதை நான் பார்த்திருக்கேன். இப்ப நானா? ரொம்ப ஈஸியா கேட்டீங்கன்னா கலந்துக்கிறேன். டீல் ஓ.கே-வா?'' என்ற ஒப்பந்தத்துடன் என்டர் ஆகிறார் இயக்குநர் மோகன் ராஜா.

``சினிமா தொடர்பான கேள்விகள்னா சமாளிச்சுடுவேன். வேறு ஏதாவது கேட்டீங்கன்னாதான் சிக்கிடுவேன்'' - ஜாலி மூடுக்கு மாறுகிறார் சஞ்சிதா ஷெட்டி.

`` `ராஜா மந்திரி' பார்த்தீங்களா... பிடிச்சிருந்ததா? எனக்கு ரொம்ப நெருக்கமா இருந்தது அந்த `அண்ணன்' கேரக்டர். நிறையப் பேர் பாராட்டுறாங்க பிரதர். ரொம்ப சந்தோஷமா இருக்கு'' - முழு எனர்ஜியுடன் ஆரம்பிக்கிறார் நடிகர் காளி வெங்கட்.

``நீங்க ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரினு எந்த சப்ஜெட்ல வேணும்னாலும் கேளுங்க. அதுக்கு முன்னாடி ஒரு லைவ் ஷோவை முடிச்சுட்டு வந்துடுறேன்'' என, பரபரக்கிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் தியா கார்த்திக்.

``மக்கள் நலக் கூட்டணியில் இருந்து எந்த இரு கட்சிகள் வெளியேறின?''

விடை: தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்,  தமிழ் மாநில காங்கிரஸ்.

மோகன் ராஜா:
``ஆமாம், கூட்டணியில் இருந்து ரெண்டு பேர் வெளியேறினாங்க. ஒரு கட்சி வாசனுடையது. இன்னொரு கட்சி மக்கள் தே.மு.தி.க-வா? அது இல்லைனு நினைக்கிறேன். அப்ப திருமாவா... விஜயகாந்தா? (யோசிக்கிறார்) யெஸ்... விஜயகாந்த்தான் வெளியேற்றிட்டார். இப்ப ஸ்கிரிப்ட் வேலைகள் அதிகமா இருக்கிறதால, சரியா நியூஸ் கவனிக்காம விட்டுட்டேன்.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“கச்சத்தீவு கொச்சின் பக்கத்துலயா இருக்கு?”

சஞ்சிதா ஷெட்டி: ``இது கருணாநிதி சார் ஃபார்ம் பண்ண பொலிட்டிக்கல் அலையன்ஸா? இல்லையா... இருங்க சொல்லிடுறேன். ஆனா, இப்ப ஜெயலலிதா அம்மா மீண்டும் டி.என் சீஃப் மினிஸ்டர் ஆகிட்டாங்கனு தெரியும். மே பீ காங்கிரஸ் ஆர் பி.ஜே.பி பார்ட்டி வெளியே வந்திருப்பாங்க'' என்றவரிடம் பதிலைச் சொன்னதும் ``ஓஹோ... விஜயகாந்த் சார் பார்ட்டிதான் டி.எம்.டி.கே-வா? ஓ.கே கூல். எனக்கு பாலிட்டிக்ஸ் பற்றி எல்லாம் தெரியாதுங்க'' எனச் சிரிக்கிறார்.

காளி வெங்கட்: ``விடுதலைச் சிறுத்தைகள் கட்சினு நினைக்கிறேன். இன்னொருத்தர் வைகோ கட்சியா தல? அட, முதல் கேள்வியே இவ்வளவு கஷ்டமா கேட்டீங்கன்னா நாங்க எல்லாம் எப்படித்தான் பதில் சொல்வோம்?''

தியா கார்த்திக்
: ``அய்யய்யோ! இது நான் நினைச்சதைவிட கஷ்டமா இருக்கே. என் வீட்டுக்காரர்கிட்ட ஹெல்ப் கேட்டுக்கிறேன், ப்ளீஸ்... ப்ளீஸ்...'' என்று தன் கணவரிடம் கேட்டுவிட்டு, ``ஒண்ணு, விஜயகாந்த் கட்சி.இன்னொண்ணு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. என் ஹஸ்பண்ட் சொன்னா சரியா இருக்கும். ஐ'ம் ப்ரவுடு ஆஃப் ஹிம்.''

``கச்சத் தீவு எங்கு உள்ளது?''

விடை: இந்தியா-இலங்கைக்கு இடையில், ராமேஸ்வரம் அருகில்.

மோகன் ராஜா: ``ராமநாதபுரம் பக்கத்துல இருக்கு. கரெக்ட்டா... தப்பா? அய்யோ... இருங்க (யோசித்தவர்) அட, ராமேஸ்வரம் பக்கத்துல இருக்குங்க. கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆகிட்டேன். ராஜாக்கள் வாழ்ந்த ஊர் ராமநாதபுரம். அதனால ராமநாதபுரம் ஊர்தான் மனசுல நிக்குது.''

சஞ்சிதா ஷெட்டி
: ``ஐ திங்க்... கோயம்புத்தூர், கொச்சின் பக்கத்துலயா இருக்கு?'' எனக் கேட்டு யோசித்தவர் ``நோ... நோ... ஸ்ரீலங்காவில் இருக்கு. என் நெக்ஸ்ட் ஃபிலிம் ஷூட்டிங் அங்கே எடுக்கப்போறதா சொன்னாங்க. அங்கே போயிட்டு வந்த பிறகு, ஸ்ரீலங்காவைப் பற்றி இன்னும் நிறையத் தகவல்கள் சொல்றேன்.''

காளி வெங்கட்:
``ஹி... ஹி... ஈஸி! நம்ம ராமேஸ்வரம் பக்கத்துல இருக்கு ஜி. எப்படியோ ஒரு மார்க் வாங்கிட்டேன். சரி... இந்தக் கேள்விக்கு யாரு எல்லாம் சரியான பதில் சொன்னாங்க?'' எனச் சிரிக்கிறார்.

“கச்சத்தீவு கொச்சின் பக்கத்துலயா இருக்கு?”

தியா கார்த்திக்: ``ஒரு கெஸ்ல சொல்றேன். தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் நடுவுல இருக்குனு நினைக்கிறேன். சரியா?''

`` `ரெமோ' பட ஃபர்ஸ்ட் லுக்கில் சிவகார்த்திகேயன் என்ன கெட்டப் போட்டிருந்தார்?''

விடை: நர்ஸ்.

மோகன் ராஜா
: ஆர்வமாகிறார் ``என் அடுத்த படத்தோட ஹீரோங்க. எனக்குத் தெரியாம இருக்குமா? நர்ஸ் கெட்டப். சிவா எல்லாத்தையும் கத்துக்கணும்னு நினைக்கிறார். அவர் நல்லா வருவார்.''

சஞ்சிதா ஷெட்டி: ``வாவ்... லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு அச்சு அசல் ஓர் அழகான நர்ஸ் மாதிரியே இருந்தார். நானும் அவரும் நிறைய அவார்டு ஷோக்கள்ல மீட் பண்ணியிருக்கோம். படத்துக்கு மை விஷ்ஷஸ். ஒரு கொஸ்டீனுக்குத்தான் கரெக்டா பதில் சொல்லிட்டேன். இந்தக் கேள்விகள் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு. முதல் தடவை இப்படி ஒரு ஜாலி இன்டர்வியூ. அடுத்த கேள்விக்கு வாங்க.''

காளி வெங்கட்: ``நான் இந்த போட்டோ பார்த்ததும் `ரம்யா நம்பீசன் ஏதோ நர்ஸ் கேரக்டர்ல நடிக்குதோ!'னு நினைச்சேன். அப்புறம்தான் தெரியுது நம்ம சிவகார்த்திகேயன். லேடி கெட்டப்ல செமயா இருக்கார் சிவா. தமிழ் சினிமாவுல மூணு பேரோட லேடி கெட்டப்தான் கச்சிதமாக இருக்கும். சத்யராஜ், பிரசாந்த், இப்போ சிவகார்த்திகேயன்.''

தியா கார்த்திக்: ``ஹாஸ்பிட்டல் நர்ஸ் கெட்டப். இதைப் பார்த்துட்டு, கீர்த்தி சுரேஷ் லைட்டா சிவகார்த்திகேயனைப் பார்த்துப் பொறாமை பட்டாங்களாம் பிரதர்.''

“கச்சத்தீவு கொச்சின் பக்கத்துலயா இருக்கு?”

``ரோமாபுரி பாண்டியனுக்குப் பிறகு, கருணாநிதியின் எந்த வரலாற்று நாவல் சீரியலாகிறது?''

விடை: தென்பாண்டி சிங்கம்.

மோகன் ராஜா: ``கலைஞர் கதை-வசனம் எழுதிய அத்தனை படங்களையும் பார்த்திருக்கேன். `பராசக்தி', `மந்திரிகுமாரி' எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சப் படங்கள். ஆனா, இப்ப எந்த நாவல் சீரியலாகுதுனு தெரியலைங்க. இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி.''

சஞ்சிதா ஷெட்டி: ``கருணாநிதி சார் எக்ஸ் சி.எம்-தானே? அவர் படத்துக்கு டையலாக் எல்லாம் எழுதியிருக்காரா? இன்ட்ரஸ்ட்டிங். எந்தப் படம், யார் நடிச்சிருக்காங்க?'' எல்லாம் விசாரித்த பிறகு, ``சத்தியமா பதில் தெரியாதுங்க. கூகுள் பண்ணி டு மினிட்ஸ்ல சொல்லட்டுமா?''

காளி வெங்கட்
: இராமானுஜர் சீரியல். ஆனா, எனக்கு கலைஞர் எழுதிய வசனத்தில் பிடித்த ஆல் டைம் ஃபேவரிட் படம் `பராசக்தி'.''
 
தியா கார்த்திக்: ``ரோமாபுரி பாண்டியன் பார்த்திருக்கேன். ராமானுஜமா... அய்யய்யோ தெரியலையேங்க!''