Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

Whatsapp:

``நீங்க புக்ஸ், யூனிஃபார்ம், ஷூ, சாக்ஸ், பெல்ட், எல்லாமே இங்கே ஸ்கூல்லதான் வாங்கணும்!''

``படிப்பு?''

``அதுக்கு வெளியே டியூஷன் வெச்சுக்கங்க!''

Whatsapp:

வாடிக்கையாளர்: சார், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒண்ணு எடுக்கணும். ஆனால், தலையில் இருந்து செருப்பு வரை தெரியணும்... முடியுமா?
கடைக்காரர்: இதெல்லாம் சப்பை மேட்டர். உன்னோட செருப்பை தலையில வெச்சிட்டு நில்லு. சூப்பரா எடுத்திடலாம்!

twitter.com/ksnagarajan:
Whatsapp-ன் தமிழாக்கம் `இன்றென்ன புரளி?'

twitter.com/teakkadai:  மனைவியின் டீன் ஏஜ் புகைப்படம் கணவனுக்குக் கிளுகிளுப்பையும், கணவனின் படம் மனைவிக்கு எரிச்சலையும் தரவல்லது!

twitter.com/oviyachaaral:
அது ஏன் யாராச்சும் சறுக்கிக் கீழே விழுந்தா, உடனே பரிதாபம் வராம, டக்குன்னு சிரிப்புப் பொத்துட்டு வருது நமக்கெல்லாம்?

twitter.com/manipmp:
வாய்ப்பு கிடைச்சவன் டி.வி-யில் பேசுவான்.கிடைக்காதவன், பேசுறவன் பக்கத்துல இருந்து தலையாட்டுவான்!

twitter.com/teakkadai: ஒரு வாட்ஸ்அப் குரூப்பைக் கலைக்க, அதில் ஒரு எம்.எல்.எம் ஆசாமியைக் கோத்துவிட்டால் போதும்!

twitter.com/kanavey: பெண்கள் மீதான குற்றங்களைக் குறைக்க, தேவை ஆன்மிகக் கல்வி - ராமகோபாலன்  # துள்ளியெழுந்து உக்காரும் ஸ்மைலி by நித்தியானந்தா!

twitter.com/yugarajesh2:  `பேய், பூதம், பூச்சாண்டி' வரிசையில் இந்த அம்மாக்கள் ஸ்கூல் மிஸ்ஸையும் சேர்த்துட்டாங்க

#ஒழுங்கா சாப்பிடுறியா... இல்ல மிஸ்கிட்ட பிடிச்சுத்தரவா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வலைபாயுதே

twitter.com/vigneshvicky341:  நாட்டுல விலைவாசி எல்லாம் கன்னாபின்னான்னு ஏறியிருக்கு. அநியாயம் ஒரு சாப்பாடு 120 ரூபா. சாப்பிட்ட எனக்கே இப்படி இருக்கே... பில் கொடுத்தவன் மனசு என்ன பாடுபடும்?

twitter.com/kiramaththan: பின் என்றோ ஒருநாளில், `அதெல்லாம் ஒரு பொற்காலம்' எனச் சொல்லப்போகும் இந்நாளை வெகு சாதாரணமாகக் கடந்து கொண்டிருக்கிறேன்! :(

twitter.com/Ulaganandha:  மஹேந்திரா காலேஜ் விளம்பரத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் மாடல். காப்பி அடிக்க வெச்சாவது பாஸ் பண்ணிவிட்ருவானுக!

twitter.com/kanandchris:
  உருது மொழிதான் வலம் இருந்து இடமாகப் படிக்க முடியுமாம். அட போங்க பாஸ்... ஹோட்டல் மெனு கார்டு எல்லாமே நான் அப்படித்தான் படிக்கிறேன்!

twitter.com/sundartsp:  சம்பாதிப்பதற்குப் படிக்கிறோம். கொஞ்ச நாள் கழிச்சு, பசங்க படிக்கிறதுக்குச் சம்பாதிக்க ஆரம்பிச்சுடுறோம்!

twitter.com/Thameem06:
  சரக்கடிச்சிட்டுத் தெளிவாப் பேசுறதா நினைப்பதுதான் போதையின் தொடக்கம்!

வலைபாயுதே

twitter.com/iKappal:  குழந்தையைத் தூங்கவைக்கிறது இருக்கே... கை வலிக்க அரை மணி நேரம் தொட்டிலை ஆட்டி முடிச்ச பிறகு உள்ளே பார்த்தா, `நீ யார்றா கோமாளி?'னு பார்க்கும்!

twitter.com/BoopatyMurugesh:
  பக்கத்து வீட்டுக்காரன் ஷூவைத் தரையில தட்றான்... உள்ளே பூச்சி இருக்குமாம். அதுக்குத்தான்டா சாக்ஸையும் உள்ளேயே வைக்கணும். பாம்பே போனாலும் செத்துரும்!

facebook.com/santhosh.narayanan.319:

வலைபாயுதே

நைஜீரியா எண்ணெய்த் தொழிற்சாலையில் வேலைசெய்யும் நண்பருடன் நேற்று பேசிக்கொண்டிருந்தேன். உலகம் எங்கும் கடலின் நடுவில் செயல்படும் இந்த எண்ணெய்த் தொழிற்சாலைகளின் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது, பிரமாண்ட உலோக டைனோசர்கள் கடல் நடுவில் நிற்கின்றன எனத் தோன்றியது. கடலுக்குச் சம்பந்தம் இல்லாத ஏதோ அந்நிய மிருகங்கள். அதை அப்படியே ஒரு மிக்ஸ்டு மீடியா ஆர்ட்டாக ட்ரை பண்ணினேன்!

வலைபாயுதே

facebook.com/mani.pmp.5:

இடது கையில் வைத்து போன் பேசும்போது வலது கை ஏதாவது உருப்படியான ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்.

facebook.com/altappu.vinoth:

ஒரு நாளைக்கு 30 நிமிஷம்தான் நியூஸ்னு இருந்தவரைக்கும் நாட்டுல எல்லாம் நல்லவிதமாத்தான் நடந்திட்டிருந்தது.