Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

Published:Updated:
விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்
விகடன் சாய்ஸ்

காடுகள் சூறையாடப்படுவது, காட்டுயிர்கள் கொல்லப்படுவது, நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவது, ஆறுகள் சாக்கடைகளாவது... இவை சகஜமாகிவிட்ட காலத்தில் வாழ்கிறோம். சுற்றுச்சூழல் குறித்தும் காட்டுயிர்கள்  குறித்தும் , முழுமையாக அறிந்துகொள்வதுதான்  இந்தச் சீர்கேடுகளைப்   புரிந்துகொள்ளும் முதல் படி. அந்தக் கற்றலை இந்த நூல்கள்  எளிதாக்கும். சூழலியல் நூல்களை தொடர்ந்து வாசிப்பதற்கான ஆர்வத்தைத் தொடங்கி வைக்கும்.

தமிழகத்தின் இரவாடிகள் - ஏ.சண்முகானந்தம்

வெளியீடு: தடாகம் பதிப்பகம்,  ரூ.300

விகடன் சாய்ஸ்

புகைப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம் எழுதியிருக்கிற அவசியம் படிக்கவேண்டிய நூல் இது. இரவில் நம்மைச் சுற்றி வலம்வரும் உயிரினங்களைப் பற்றி விரிவாக அறிமுகப்படுத்துகிறது இந்த நூல். ஆந்தைகள், மூங்கணத்தான், தேவாங்கு, கூகை, பக்கி, மரப்பாச்சை, முள்ளம்பன்றி என இரவு நேரத்து ஜீவன்களின் வாழ்வியலைப் பற்றியும் சூழலியலின் அவசியம் குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள எண்ணற்ற புகைப்படங்கள் இந்த நூலுக்கு மதிப்புக் கூட்டுகின்றன. குழந்தைகளும் படித்துப் புரிந்துகொள்ளும்படி எளிய மொழியில் எழுதப்பட்டுள்ள நூல் இது.

திருடப்பட்ட தேசம் - நக்கீரன்

எதிர் வெளியீடு,  ரூ.70

விகடன் சாய்ஸ்

சூழலியல் தொடர்பான  அரசியலையும் பின்னணியையும் எளிதாகக் கற்றுத்தருகிறது இந்த நூல். பன்னாட்டு நிறுவனங்கள் இன்று இந்தியாவின் காடுகளையும் விவசாய நிலங்களையும் எப்படி எல்லாம் கபளீகரம் செய்கின்றன, மக்களின் வாழ்வாதாரங்களை எப்படிச் சுரண்டுகின்றன என்பதை எழுத்தாளர் நக்கீரனின் காத்திரமான எழுத்துக்கள் தயவுதாட்சண்யம் இன்றி முன்வைக்கின்றன. கட்டுரைகள் சிறுகதைகளின் சுவாரஸ்யத்துடன் எழுதப்பட்டிருப்பதால் புரிந்துகொள்ள சிரமமான விஷயங் களையும் இலகுவாக வாசிக்க முடிகிறது. இதுவே இந்த நூலின் பலம்.

அழியும் பேருயிர் : யானைகள் - ச.முகமது அலி, க.யோகானந்த்

 வெளியீடு: இயற்கை வரலாற்று அறக்கட்டளை

ரூ. 150

விகடன் சாய்ஸ்

நம் காடுகளுக்கு யானைகள் ஏன் அவசியம்? தமிழர்களுக்கும் யானைக ளுக்குமான தொடர்புகள் என்ன? அவற்றின் வாழ்க்கைமுறைகள் தொடங்கி யானைகள் தொடர்ச்சியாகச் சந்திக்கும் வெவ்வேறுவிதமான அச்சுறுத்தல்கள் வரை காட்டுயானைகள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள உதவும் அவசியமான அறிமுக நூல் இது. இந்த நூலைப் படித்து முடிக்கும் போது யானைகள் பற்றிய முழுமையான ஒரு புரிதலும், காட்டுயிர்கள் பற்றி தொடர்ந்து வாசிக்கவேண்டும் என்ற ஆவலும் உருவாகின்றன. நூல் எங்கும் இணைக்கப்பட்டிருக்கும் யானை களைப் பற்றிய இலக்கியக் குறிப்புகள் நூலுக்கு சுவை கூட்டுகின்றன.

நீராதிபத்தியம் - மாட் விக்டோரியா பார்லோ

தமிழில்: சா.சுரேஷ்

எதிர் வெளியீடு, ரூ. 200

விகடன் சாய்ஸ்

உலகெங்கும் தண்ணீர் வணிகம் உச்சம் பெற்றுள்ள காலகட்டம் இது. இந்திய அளவிலும் தண்ணீர் வணிகத்தின் கரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கிவிட்டன. சர்வசாதாரணமாக வீட்டில் பாட்டில் தண்ணீர் குடிக்க ஆரம்பித்துவிட்டோம். ஒரு பக்கம் பாதுகாப்பான குடிநீர் ஆதாரங்களை அழித்து அங்கு எல்லாம் கட்டடங்கள் கட்டிவிட்டு, இன்னொரு பக்கம் நீருக்காக விலை கொடுக்க தொடங்கிவிட்டோம். இந்த அரசியலையும் அதன் பின்னணியையும், நீர் என்பது வணிக சரக்கு அல்ல, அது நம்முடைய உரிமை என்பதையும் உணர இந்த நூல் உதவுகிறது. நமக்கு மிக அருகில் இருந்த நீர் எப்படி பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றது என்பதை அறிய இந்த நூல் உதவும்.

கொதிக்குதே... கொதிக்குதே... - ஆதி வள்ளியப்பன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

ரூ. 80

விகடன் சாய்ஸ்

புவி வெப்பமயமாதல் பற்றியும் அதன் பாதிப்புகள் பற்றியும் தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் இது. மனிதர் களின் தொடர் செயல்பாடுகளால் உண்டான பருவநிலை மாற்றம், அதன் பாதிப்புகள், இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் வரை விரிவாகப் பேசுகிறது. பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன? அது உருவாவதால் உலகத்தில் உருவாகும் மாற்றங்கள், விவசாயம் தொடங்கி தனிமனித வாழ்க்கை வரை இந்தப் புவி வெப்பமயமாதல் எந்தவிதம் மாற்றியமைக்கின்றன என முழுமையாக அலசி ஆராய்கிறது இந்த நூல். அறிவியல்பூர்வமான பல உண்மைகளை எளிய தமிழில் யாரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதியிருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் ஆதி வள்ளியப்பன்.

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக - சு.தியடோர் பாஸ்கரன்

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

ரூ.120

விகடன் சாய்ஸ்

சுற்றுச்சூழல், காட்டுயிர், புள்ளினம், பல்லுயிரியம் போன்ற பல்வேறு விஷயங்களையும் தொட்டுச் செல்கிற விரிவான கட்டுரைகள் அடங்கிய அடர்த்தியான தொகுப்பு இது.

நம் காலத்தில் காட்டுயிர்கள் சந்திக்கிற பிரச்னைகள், அதன் தீர்வுகள் எனப் பல விஷயங்களைப் பற்றியும் இந்தக் கட்டுரைகள் உரையாடுகின்றன. இயற்கை சார்ந்து வாழும் ஆச்சர்யமூட்டும் மனிதர்களை அறிமுகப்படுத்துகிறார். அலங்கு எனும் விலங்கைத் தவறுதலாக எறும்புத் தின்னி என அழைப்பது, வெளிநாட்டுப் பறவைகள் இரை தேட மட்டுமே இந்தியாவுக்கு வருவதாகவும் இங்கே இனப்பெருக்கம் செய்வது இல்லை என்பது மாதிரியான காட்டுயிர்கள் குறித்த நம்முடைய பலவித கற்பிதங்களையும் உடைத்துப் போடுகிறது தியடோர் பாஸ்கரனின் எழுத்து.