Published:Updated:

“தேங்காய்ப்பால் ரசம், ஆசம்... ஆசம்!”

   “தேங்காய்ப்பால் ரசம், ஆசம்... ஆசம்!”
பிரீமியம் ஸ்டோரி
“தேங்காய்ப்பால் ரசம், ஆசம்... ஆசம்!”

கே.அபிநயா, படங்கள்: எம்.உசேன், சொ.பாலசுப்ரமணியன். ஆ.முத்துக்குமார்

“தேங்காய்ப்பால் ரசம், ஆசம்... ஆசம்!”

கே.அபிநயா, படங்கள்: எம்.உசேன், சொ.பாலசுப்ரமணியன். ஆ.முத்துக்குமார்

Published:Updated:
   “தேங்காய்ப்பால் ரசம், ஆசம்... ஆசம்!”
பிரீமியம் ஸ்டோரி
“தேங்காய்ப்பால் ரசம், ஆசம்... ஆசம்!”
   “தேங்காய்ப்பால் ரசம், ஆசம்... ஆசம்!”
   “தேங்காய்ப்பால் ரசம், ஆசம்... ஆசம்!”

ருச்சி ஊறுகாயும் சக்தி மசாலாவும் கைகோக்க, பிரமாண்டமாக நடந்தது `அவள் விகடன் கிச்சன்’ இதழின் இரண்டாம் ஆண்டு விழா. ஜூலை 3-ம் தேதி சென்னை கிரவுன் பிளாஸா ஹோட்டலில் நடந்த இந்த விழாவில்,  சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன், பிரபல செஃப் பிரவீன் ஆனந்த், செஃப் தாமு மற்றும் பிரபல சமையல் கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை, விகடன் நிறுவன நிர்வாக இயக்குநர் பா. சீனிவாசன் தொடங்கிவைத்தார். இரண்டாம் ஆண்டு இதழை, இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் கிரவுன் பிளாஸாவின் எக்ஸிகியூட்டிவ் செஃப் பிரவீன் ஆனந்த் ஆகியோர் வெளியிட்டனர்.

கிச்சன் இதழை வாங்கிப் பார்த்த கௌதம் மேனன், ``இந்த கவர்ல இருக்க பனானா பேன் கேக், என் ஃபேவரிட் பிரேக்ஃபாஸ்ட்... எனக்கு பேக்கிங் பண்ண தெரியும். அதை ஒரு க்ரியேட்டிவ் புராசஸ்ஸாத்தான் பார்க்குறேன். அதோட அவுட்புட் பத்தி கவலைப்பட மாட்டேன்.

எங்க  வீட்ல  `இன்னைக்கு என்ன சமைக்கலாம்?’னு ஒரு டிஸ்கஷனோடுதான் சமைக்கவே ஆரம்பிப்போம். அம்மா டீச்சர். ஞாயிறுக்கிழமையில அவங்க சமையல்தான்.அன்னைக்கு மதியம் எல்லாரும் வீட்டில் ஆஜர் ஆகிடுவோம். வீட்டில் அம்மா என்ன சமைப்பாங்களோ... அதைத்தான் வெளியில போறப்பவும் எடுத்துப்பேன். ​

   “தேங்காய்ப்பால் ரசம், ஆசம்... ஆசம்!”

​அம்மா, வீட்டில் மஷ்ரூம் செய்ய மாட்டாங்க. அதனால நானும் வெளியிடத்துல மஷ்ரூம் சாப்பிட மாட்டேன். நாங்க பாதி தமிழ், பாதி மலையாளி. அதனால ரெண்டு ஃபங்ஷனும் கொண்டாடுவோம். அப்பலாம் அம்மாதான் எல்லா ஸ்வீட்ஸும் செய்வாங்க’’ என, தன் அற்புதமான அம்மா சமையல் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

வந்திருந்த கெஸ்ட்களிடையே, ``இங்க யாருக்கு ரசம் வைக்கத் தெரியும்... ரெசிப்பி சொல்லுங்க?’’ எனக் கேட்டு ஆண்களிடம் இருந்து ரெசிப்பியை வெற்றிகரமாக வரவழைத்தார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஆர்.ஜே.சனோ. த்ரில் வீராவின் ஜக்லிங் நிகழ்ச்சி நடத்தப்பட, உற்சாகமாக ரசித்தார்கள் விருந்தினர்கள்.

   “தேங்காய்ப்பால் ரசம், ஆசம்... ஆசம்!”

விழா ஸ்பெஷலாக `இண்டோ - பிரெஞ்சு ஃபியூஷன்’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டு, தலைப்புக்கு ஏற்ற அலங்காரத்துடன் மதிய உணவு தயாராக இருந்தது. அதைப் பற்றி கிரவுன் பிளாஸாவின் எக்ஸிகியூட்டிவ் செஃப் பிரவீன் விவரிக்க, அனைவரும் உணவை ருசிக்கத் தயார் ஆனார்கள். அரங்கத்தின் பிரமாண்ட கதவுகள் மெள்ளத் திறக்கப்பட ஆரம்பமானது லன்ச்!

``கடைசியா கொடுத்தீங்களே தேங்காய்ப் பால் ரசம்... அது ஆசம்... ஆசம்...'' என செஃப்களுக்கு லைக்ஸ் போட்டார் லஷ்மி ராமகிருஷ்ணன்.

   “தேங்காய்ப்பால் ரசம், ஆசம்... ஆசம்!”

தொடர்ந்து `செல்ஃபி எடு... கொண்டாடு’ மொமன்ட் சந்தோஷங்களுடன் விழா முடிவுக்கு வந்தது. கல்லூரியில் இருந்து கிளம்புவதுபோல சந்தோஷமாகக் கிளம்பியவர்களுக்குப் பார்த்துப் பார்த்து ரெடிசெய்த டேக் அவே கிட் ஒன்றும் கொடுக்கப்பட்டது. அதில் ருச்சி ஊறுகாய் பாட்டில், சக்தி மசாலாவின் பஜ்ஜி மாவு பாக்கெட் ஆகிவற்றோடு, பறவைகளுக்கு உணவு வைப்பதற்கான `பேர்டு ஃபீடர்' பாட்டிலும் அடங்கியிருந்தது. ஒவ்வொருவரும் ஆச்சர்யத்தோடு  `வாவ்... சூப்பர் கிஃப்ட்!' என ஸ்மைலிகளோடு விடைபெற்றனர்.