Published:Updated:

"ஏ.ஆர்.ரஹ்மான் எப்பவும் யங்தான்!”

"ஏ.ஆர்.ரஹ்மான் எப்பவும் யங்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
"ஏ.ஆர்.ரஹ்மான் எப்பவும் யங்தான்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

"ஏ.ஆர்.ரஹ்மான் எப்பவும் யங்தான்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:
"ஏ.ஆர்.ரஹ்மான் எப்பவும் யங்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
"ஏ.ஆர்.ரஹ்மான் எப்பவும் யங்தான்!”
"ஏ.ஆர்.ரஹ்மான் எப்பவும் யங்தான்!”

“முதல்லயே கேள்வி என்னனு சொன்னீங்கன்னா...   சரி, நீங்க சொல்ல மாட்டீங்க. ஓகே... ஆரம்பிங்க” - நிதானமாகப் பேசுகிறார் கவிஞர் பழநிபாரதி.

“நாட்டுல நடக்கிற அத்தனை விஷயங்களையும் நான் கவனிச்சுட்டுத்தான் இருக்கேன். அதுனால, என்னை பாஸ் பண்ணிவிடணும் தம்பி... சரியா?” -சிரிக்கிறார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

“ஜி.கே-ல நான் ரொம்ப வீக்குங்க. அதுவும் நான் நியூஸ் எல்லாம் படிச்சு கி.மு., கி.பி இருக்கும். இருந்தாலும் நான் போட்டியில கலந்துக்கிறேன். எவ்வளவோ பண்ணிட்டோம். இதைப் பண்ண மாட்டோமா?” - தயாராகிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினி அஞ்சனா.

``அட... ஜாலி கேள்வியா? என்னையும் என் மாமனார் டி.கே.எஸ்.இளங்கோவனையும் ஒண்ணா சேர்த்துக் கேள்வி கேட்டிருக்கலாம். பரவாயில்லை. இந்த வாரம் எதைப் பத்தி கேட்கப்போறீங்க?’’ - ஆர்வமாகிறார் நடிகர் ஜான் விஜய்.

“சமீபத்தில் ‘எனக்கு வயசாகிடுச்சு’ எனச் சொன்ன இசையமைப்பாளர் யார்?”

விடை : ஏ.ஆர்.ரஹ்மான்

பழநிபாரதி : “ஏ.ஆர்.ரஹ்மான். இதுல அவருடைய பக்குவம்தான் நல்லா தெரிஞ்சது. தவிரவும் `ஜி.வி.பிரகாஷ், அனிருத்... மாதிரி நிறைய இளம் இசையமைப்பாளர்கள் இங்கே இருக்காங்க’னு சொல்லியிருந்தார். அடுத்த தலைமுறையை அடையாளம் காண்பிக்கும் இந்த முயற்சியை ரொம்ப ரசிச்சேன்.”

எம்.எஸ்.பாஸ்கர் : அதிர்ந்தவர்... “யாரு தம்பி இப்படிச் சொன்னது? ஓகோ... நான்தான் பதில் சொல்லணுமா? இசைஞானி இளையராஜாவா... ஏ.ஆர்.ரகுமானா? என்னைப் பொறுத்தவரை அவங்க இன்னமும் இளமையான இசையமைப்பாளர்கள்தான். ஏன் இதை நான் சொல்றேன்னா எனக்கே 24 வயசுதான்.”

 அஞ்சனா :
“இளையராஜா, ரஹ்மான், அனிருத்... இவங்க எல்லாரையும் எனக்குப் பிடிக்கும். நானா ஒரு கெஸ்ல பதில் சொல்லி மாட்டிக்க விரும்பலை. நீங்களே பதில் சொல்லிடுங்க. ஆனா, அனிருத் இப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. அவர் இப்பதான் வளர்ந்துவர்றார்”. பதிலைக் கேட்டதும், “அய்யோ... ரஹ்மான் சாரா, அவருக்கு என்ன வயசு ஆகிடுச்சுனு இப்படிச் சொல்லியிருக்கார்? அவர் எப்பவும்் யங்தான்.”

"ஏ.ஆர்.ரஹ்மான் எப்பவும் யங்தான்!”

ஜான் விஜய்: ``இசைஞானி என்றென்றும் இளமையானவர்தான். ஏ.ஆர்.ரஹ்மான் வேணும்னா இப்படிச் சொல்லியிருக்கலாம்... ரைட்டா?’’

“வைகோ கட்சியின் சார்பாகத் தொடங்கப்பட்டிருக்கும் புதிய தொலைக்காட்சி சேனலின் பெயர் என்ன?”

விடை : மதிமுகம்

பழநிபாரதி :  “வைகோ, டி.வி ஆரம்பிக்கப் போறாருனு ஒரு செய்தி படிச்சேன். என்ன பேருனு கவனிக்கலையே. ஆனா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேனல்தான் ஞாபகத்துக்கு வருது... பேரு ‘வெளிச்சம்’. இதுக்கு எல்லாம் மார்க் கொடுக்க மாட்டீங்களா?”

எம்.எஸ்.பாஸ்கர் :  “என்னது வைகோ சேனல் ஆரம்பிச்சிருக்காரா? சரி... அதைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது. நான் இப்ப யூடியூப் சேனல்தான் அதிகம் பார்க்கிறேன். வரலாற்றுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அன்றாடச் செய்திகள்னு எல்லாமே இதுலதான் பார்க்கிறேன். நேத்துகூட தலைவர் பிரபாகரன் பேச்சைக் கேட்டிட்டிருந்தேன்.”

"ஏ.ஆர்.ரஹ்மான் எப்பவும் யங்தான்!”

அஞ்சனா  : “அய்யோ... பொலிட்டிக்கல் கேள்வியா... ஆளை விடுங்கஜி. பாலிட்டிக்ஸ் பத்தியும் தெரியாது; பாலிட்டிக்ஸ் பண்ணவும் தெரியாது.”

ஜான் விஜய் : ``வெளிச்சம் சேனல்னு நினைக்கிறேன்.  ஆனா, அவர் எந்த சேனல்ல வொர்க் பண்ணிட்டிருக் கார்னு மட்டும் ரொம்ப நல்லா தெரியும். டி.வி இலவசமா கொடுத்தாச்சு; சாப்பாடும் மலிவு விலையில கிடைக்குது. இவ்வளவு சேனல் இருந்தால் அவன் எங்கே வேலைக்குப் போகப்போறான்? சும்மாதான் இருப்பான். அப்புறம் எப்படி தமிழ்நாடு முன்னேறும்? இதை எல்லாம் சொன்னால் நம்மகிட்ட சண்டைக்கு வருவாங்க. எதுக்கு தம்பி பிரச்னை? அடுத்த கேள்விக்கு வாங்க.’’

 “எந்த நதி நீரை தபால் நிலையங்கள் மூலம் மத்திய அரசு விற்பனை செய்துவருகிறது?”

விடை : கங்கை நதி நீர்.

பழநிபாரதி : “தபால் துறைக்கு இப்ப வேலையே இல்லாம ஆகிடுச்சுல்ல. அதான் ஏதோ ஒரு வேலை கொடுப்போம்னு போஸ்ட் மேன்களையும் தண்ணி விற்கும் ஆட்களாக மாத்திட்டாங்க. இந்தத் திட்டத்துல அரசியல் என்னன்னா... நதி நீரை விற்பனை செய்றதுனா... எல்லா நதிகளின் நீரையும் விற்பனை செய்யவேண்டியதுதானே? ஏன் கங்கை நதி நீரை மட்டும் விற்பனை செய்றாங்க?”

எம்.எஸ்.பாஸ்கர் :  “கங்கை நதி தீர்த்தம். உண்மையாக இந்தத் திட்டத்தை நான் வரவேற்கிறேன். நிறைய மக்கள் இதனால் பயன் அடைவாங்க. தம்பி... இந்தத் தீர்த்தத்தை வாங்க எப்படி ஆர்டர் பண்றது?”

அஞ்சனா : “என்னங்க போஸ்ட் ஆபீஸ் நிலைமை இப்படி ஆகிடுச்சா? சும்மா ஒரு கெஸ்ல சொல்றேன் கங்கா வாட்டரா? முன்னாடி சொம்புல அடைச்சுக் கொடுத்தாங்க. இப்ப பாட்டிலில் அடைச்சுக் கொடுக்கிறாங்களா?”

ஜான் விஜய் : ``ஹி... ஹி... போன வாரம் என் ஃப்ரெண்ட் ஒருத்தன் பாட்டில்ல அடைச்சு வித்த கங்கை தண்ணியை எடுத்துட்டு வந்தான். `எதுக்கும் லேப்ல டெஸ்ட் பண்ணி குடிடா'னு சொன்னேன். `மாமு... கிண்டல் பண்ணாத. இது புனித நீர்'னு சொல்லி சோகமாகிட்டான். நான் கங்கைக்கு நேரடியாகவே போய்ப் பார்த்திருக் கேன். குப்பைகளும் பிணங்களுமா மிதக்கும். அதை எப்படிச் சுத்தம் பண்ணி தண்ணி எடுப்பாங்க? அதனால சொன்னேன். தம்பி... இந்தப் பகுதிக்கு என்னை யாராவது செம அடி அடிச்சாங்கனா... நீங்கதான் பொறுப்பு சொல்லிட்டேன்.’’

"ஏ.ஆர்.ரஹ்மான் எப்பவும் யங்தான்!”

உலக அளவில் தற்போது மெகா வைரலில் இருக்கும் மொபைல் கேம் எது?”

விடை : போக்கிமான் கோ

பழநிபாரதி :: “என் பொண்ணு ரெண்டு நாளைக்கு முன்னாடி சொல்லிட்டிருந்தாங்க. ஏதோ தெரு தெருவாப் போய் பொம்மை கண்டுபிடிக்கணுமாமே? அந்த விளையாட்டுத்தான போக்கிமான் கோ? என்னடா இது எல்லாம் ஒரு விளையாட்டானு விட்டுட்டேன். அடுத்த நாள் என் பெண் ஃப்ரெண்ட் வீட்டுக்கு லேட்டாகப் போனாங்களாம். ‘ஏன்?’னு கேட்டதுக்கு ‘போக்கிமான் கண்டுபிடிக்க பக்கத்து ஏரியாவுக்குப் போயிட்டு வந்தேன்’னு சொன்னாங்களாம். கடைசியில `ஊடகம் உங்களை எல்லாம் பொம்மை பொறுக்க அனுப்பிடுச்சுடா’னு  சொன்னேன். அதான் உண்மையும்கூட.''

எம்.எஸ்.பாஸ்கர் :  “நான் நோக்கியா மொபைல் வெச்சிருந்தப்ப, ஸ்நேக் கேம்மை நைட் 1 மணிக்கு எல்லாம் எழுந்திருச்சு விளையாடிட்டே இருப்பேன். அது எல்லாம் ஒரு காலம். இப்ப இந்த கேம் பேரு... போக்கிரி மேனோ, போகோ மேனோ ஏதோ ஒரு பேருங்க.”

அஞ்சனா  : “இப்ப என் மொபைலில் ஒரு கேம்கூட கிடையாது. ஆமா, அமெரிக்கா,  தமிழ்நாடு எல்லா பக்கங்களிலும் இந்த கேம் ட்ரெண்டிங்கா?அய்யோ... ஒண்ணுமே தெரியாத பச்சக்குழந்தையாக இருக்கேனே. நீங்களே பார்த்து ஆன்ஸர் எழுதிடுங்க பிரதர்.”

ஜான் விஜய் : ``ஃபுட்பால் கேமா, ஓ... நீங்க கேட்டது மொபைல் கேமா? எங்க வீட்டுல மொபைலை எடுத்துட்டு எங்கயோ ஓடி ஓடி கேம் விளையாடிட்டு இருந்தாங்களா.  `என்ன?’னு கேட்டேன். ஏதோ போக்கிமானே என்னமோ... ஏதோ பேர்ல கேம். இதை எல்லாம் கத்துக்க நமக்கு எங்கே நேரம் இருக்கு?’’