Published:Updated:

“சமூகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்!”

“சமூகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்!”
பிரீமியம் ஸ்டோரி
“சமூகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்!”

“சமூகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்!”

“சமூகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்!”

“சமூகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்!”

Published:Updated:
“சமூகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்!”
பிரீமியம் ஸ்டோரி
“சமூகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்!”
“சமூகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்!”
“சமூகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்!”

னந்த விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்துக்கு 25-ம் ஆண்டு இது. பல்வேறு கட்டத் திறனாய்வுத் தேர்வு நிலைகளுக்குப் பிறகு தேர்வான, 75 மாணவப் பத்திரிகையாளர்களுக்கு சென்னையில் நடந்த பயிற்சி முகாமில், ஊக்கமும் உற்சாகமும் தந்து வழிகாட்டினர் பல்துறை வல்லுநர்கள்.

ஸ்ரீதரன் மதுசூதனன் - இந்திய வெளியுறவுப் பணி

``நான் மாணவப் பத்திரிகையாளனாக இருந்தபோது அச்சுப் பத்திரிகைகள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்றைய தலைமுறைக்கு டிஜிட்டல் ஊடகங்களில் வாய்ப்புகள் விதவிதமாக உலகம் முழுவதும் உருவாகி வருகின்றன. வருங்காலத்தில் எல்லாமே டிஜிட்டல் மயமாகத்தான் இருக்கப்போகிறது. மாறிவரும் ரசனைகளுக்கு ஏற்பத் தயாராகுங்கள்.”

“சமூகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்!”

விஜய் மில்டன் - இயக்குநர்

``ஒரு படம் ரிலீஸாகி, எல்லா தரப்பு மக்களுக்கும் பிடிச்சிருந்தால்தான் அது வெற்றிகரமான சினிமா. வரும்காலத்தில் விதவிதமாகத் தொழில்நுட்பங்கள் மாறலாம். ஆனால், அதன் அடிப்படை ஆன்மா மாறாது.  எதற்கும் தயாராக இருங்கள்; எப்போதும் தயாராக இருங்கள். ஊடகம் உங்கள் வசம் ஆகட்டும்.''

ராஜூ முருகன் - இயக்குநர்

“என்னுடைய ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களுக் கான கதைக்களங்கள் நான் விகடனில் வேலை செய்தபோது ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்புதான். பல சிறந்த இயக்குநர்கள், படைப்பாளிகள் அடிப்படையில்  பத்திரிகையாளர்களாக இருந்தவர்களே. செய்தியாளர்களால் மட்டும்தான், ஒவ்வொரு விஷயத்தையும் புதுப்புது பரிமாணங்களில், வித்தியாசமான கோணங்களில்  அணுக முடியும். அதனைப் படித்துவிடுங்கள்; பிடித்துவிடுங்கள்.”

“சமூகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்!”

மீரா - பத்திரிகையாளர்

``இந்த இடத்தில் இருந்துதான் எனது பத்திரிகைப் பயணமும் தொடங்கியது.  இப்போதெல்லாம் பல செய்திகளை முதலில் பிரேக் செய்வதே விகடன்  இணையதளம்தான்.  டிஜிட்டல் மீடியா வளர்ச்சி அடைந்துகொண்டி ருக்கும் இந்த நேரத்தில், செய்திகளைப் பல கோணங்களில் கொடுப்பதற்கு ஸ்பேஸும் கிடைத்திருக்கிறது. இதை ஊடகங்களும் வாசகர்களும் சரியாகப் பயன்படுத்துக்கொள்ள வேண்டும்.”

பிரபஞ்சன் - எழுத்தாளர்

``விகடன் குழுமத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகாலம் நானும் பணிபுரிந்திருக்கிறேன் என்பதே மகிழ்வான விஷயம். ஒரு பத்திரிகையாள னாக அழகான விஷயங்களைத்தான் சொல்ல வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. சாதாரண மொழியிலேயே ஒரு விஷயத்தை எளிதாக மக்களிடம் கொண்டுசேர்த்துவிட முடியும். இயல்பாக, இயற்கையாக இருக்கும் எழுத்துதான் எப்போதும் அழகு. ஒரு பத்திரிகையாளர் எப்போதும் உண்மையைத் தேடிக் கண்டறிய வேண்டும். எண்ணத்தில் நேர்மையும் எழுத்தில் சுத்தமும் இருந்தாலே சமூக மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும்.”

“சமூகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்!”

அபிலாஷா - உளவியல் நிபுணர்

``மீடியாவின் வளர்ச்சி சில வருடங்களாக மாறிவருகிறது. ஊடகங்கள் உளவியல் சார்ந்த விஷயங்களைக் கவனமாகக் கையாள வேண்டும்.''

கோபிநாத் - நிகழ்ச்சித் தொகுப்பாளர்

``செய்தி உண்மையா... பொய்யா என செய்திக்குள் இருக்கும் கிளைத் தகவல்களையும் தீர்மானமான கூற்றுகளையும் மக்களுக்கு எடுத்துச்சொல்ல ஒரு பத்திரிகையாளன் அவசியம். எதையும் துணிவாக எதிர்கொள்ளும் தைரியக் குணம் ஊடகவியலாளனுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. எந்த ஒரு செய்தியை அணுகும்போதும் அது சரியா, தவறா என்ற கேள்வி நமக்குள்ளேயே எழ வேண்டியது அவசியம்.”

“சமூகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்!”

கார்த்திகைச் செல்வன் - ஊடகவியலாளர்

``ஊடகம் என்பதே `வாய்ஸ் ஆஃப் வாய்ஸஸ்’ அதாவது எங்கு எல்லாம் மனித உரிமை மீறல்கள் நடக்கிறதோ, அங்கு எல்லாம் எளிய மக்களின் குரலாக இருந்து பிரச்னைகளுக்கு எதிராகப் போராடுவது. ஒரு செய்தியை பல்வேறு ஊடகவியலாளர்களும் தொடரும்போது அதில் நம் தனித்தன்மை எதுவோ அதை நிரூபிக்க முயற்சிக்க வேண்டும். ஒரு பத்திரிகையாளன் எப்போதுமே ஒரு வட்டத்துக்குள் அடங்கி விடாமல், எல்லை தாண்டிய சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் கொண்டவனாகச் சிந்திக்க வேண்டும்.”

ஹிப் ஹாப் ஆதி - இசையமைப்பாளர்

``நான் இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சதும்... எங்க அப்பாகிட்ட `ராப் சாங் பாடப்போறேன்'னு சொன்னேன். எங்க அப்பா `என்னது ராப்பா...'னு பயந்துட்டார். ஆனாலும் என் மேல நம்பிக்கை வெச்சார். அந்த நம்பிக்கையை இப்ப காப்பாத்திட்டேன்னு நினைக்கிறேன். இந்தச் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு ரியாக்ட் பண்ணாமல் ரெஸ்பாண்ட் பண்ணணும் என்பதுதான் நான் கற்றுக்கொண்ட பாடம்.”

கார்த்திக் சீனிவாசன்  - புகைப்படக் கலைஞர்

``முதல்ல `நான் போட்டோகிராஃபர் ஆகணும்'னு சொன்னதும் யாரும் வாய்ப்பு தரலை. அப்புறம் நானே படிப்படியா போட்டோ எடுக்கக் கத்துக்கிட்டேன். ஆயிரக்கணக்கான போட்டோஷூட் எடுத்திருக்கேன். ஆனாலும்  இப்போ ஷூட் போகும்போதும் சின்னப் பதற்றம் இருக்கும். நல்லா பண்ணணுமேனு தோணும். பத்து வருடங்களாக ஒரே மாதிரி கான்செப்ட்ல போட்டோஸ் எடுத்துட்டிருந்தேன்னா எப்பவோ காணாமல்போயிருப்பேன். தொடர்ந்து இந்தத் துறையில நீடித்து நிற்பதுக்குக் காரணம், என்னைத் தொடர்ந்து அப்டேட் பண்ணிக்கொண்டே இருப்பதுதான்.”

“சமூகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்!”

வானதி சீனிவாசன் - பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர்

“ரெஸ்பாண்ட் பண்றது மட்டும் அல்லாமல் சமூகம் சார்ந்த ‘ரெஸ்பான்ஸிபிலிட்டி’யும் ஒரு பத்திரிகையாளனுக்கு ரொம்ப அவசியம். கண்களால் பார்ப்பது மட்டும் பார்வை என்பது அல்லாமல், உடல்முழுவதும் கண்கள் இருப்பது இன்றைய ஊடகவியலாளர்களுக்கு முக்கியம். அரசியல்வாதியையோ, அதிகார வர்க்கத்தையோ அச்சம் இல்லாமல் கேள்விகேட்க பத்திரிகையாளர்களால்தான் முடியும்.”

நக்கீரன் - சூழலியலாளர்

``2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியபோது பல லட்சம் மக்கள் இறந்தார்கள். ஆனால், ஒரு தீவில் மட்டும் பழங்குடிகளாக வசித்துவந்த 160 பேர் உயிருடன் இருந்தார்கள். அதற்கு அவர்கள் சொன்ன பதில், ‘இயற்கை மற்றும் உயிரினங்களின் சில விநோத சமிக்கைகளைப் பார்த்து, கடலில் இருந்து ஏதோ ஓர் ஆபத்து நெருங்குகிறது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்’ என்பதுதான். இயற்கையை நேசித்த கிராமப் பகுதிகளும் விலங்குகளும் இன்று அழிந்துகொண்டே வருகின்றன. ஒரு சூழல் சார்ந்த செய்தியை மனிதனுடைய பார்வையில் மட்டும் அல்லாமல் ஏனைய உயிரினங்கள் சார்ந்தும், உண்மையான கருத்துக்களுடன் எழுதக்கூடிய திறன் பத்திரிகையாளனுக்கு இருக்க வேண்டும்.”

வ.நாகப்பன் - நிதி ஆலோசகர்

``நிதி நிர்வாகம் என்பது கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பது அல்ல. உங்களிடம் இருக்கும் பணத்தை கோடிக்கணக்காகப் பெருக்குவது எப்படி என்பதுதான். வளர்ந்துவருகிற இந்தத் துறை குறித்த பார்வை இல்லாத மீடியாவே இன்று கிடையாது. அதனால் பொருளாதாரம் குறித்த செய்திகளில் தெளிவான சிந்தனையும் அது குறித்த தாக்கமும் இருக்க வேண்டும்.”

“சமூகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்!”

சகாயம் - ஐ.ஏ.எஸ்

“சமூகம் என்பது பல்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் மனிதக் குழுக்களைக் கொண்டது. நம் கருத்தில் தெளிவைக் காண முதலில் சமூகத்தைப் படிக்க வேண்டும். உதாரணமாக அரசியல் அமைப்புச் சட்டம் குறித்த தெளிவான சிந்தனைகளைப் படிக்கக்கூடிய மாணவன் வழக்கறிஞராகவும், மருத்துவம் சார்ந்து படிக்கக்கூடிய மாணவன் மருத்துவராகவும் ஆகிறான். ஆனால், இந்தச் சமூகத்தைப் படிக்கக்கூடிய மாணவன் நல்ல மனிதன் ஆகிறான். எனவே, முதலில் சமூகத்தைப் படிக்கவேண்டியது அவசியம்.”

மகுடேசுவரன் - கவிஞர்

``உலக அளவில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. அதில் தமிழ் மொழி மிகத் தொன்மையானது. தமிழில் இருக்கும் வார்த்தைகளின் சரியான சொல்வடிவம் மற்றும் பொருள் வடிவத்தை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.”

தொகுப்பு: நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.விஜயலட்சுமி
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்,
பா.காளிமுத்து, ப.சரவணகுமார்