Published:Updated:

“சாதி ஒழிப்பு பற்றி பேசாமல் எப்படி படம் எடுக்க முடியும்?”

“சாதி ஒழிப்பு பற்றி பேசாமல் எப்படி படம் எடுக்க முடியும்?”
பிரீமியம் ஸ்டோரி
“சாதி ஒழிப்பு பற்றி பேசாமல் எப்படி படம் எடுக்க முடியும்?”

“சாதி ஒழிப்பு பற்றி பேசாமல் எப்படி படம் எடுக்க முடியும்?”

“சாதி ஒழிப்பு பற்றி பேசாமல் எப்படி படம் எடுக்க முடியும்?”

“சாதி ஒழிப்பு பற்றி பேசாமல் எப்படி படம் எடுக்க முடியும்?”

Published:Updated:
“சாதி ஒழிப்பு பற்றி பேசாமல் எப்படி படம் எடுக்க முடியும்?”
பிரீமியம் ஸ்டோரி
“சாதி ஒழிப்பு பற்றி பேசாமல் எப்படி படம் எடுக்க முடியும்?”
“சாதி ஒழிப்பு பற்றி பேசாமல் எப்படி படம் எடுக்க முடியும்?”
“சாதி ஒழிப்பு பற்றி பேசாமல் எப்படி படம் எடுக்க முடியும்?”

விகடன் மாணவப் பத்திரிகையாளர்களுக்கு  அது செம சர்ப்ரைஸ். பரபரப்பான பயிற்சி நிகழ்வுகளுக்கு நடுவே `கபாலி' படம் பார்த்த பரவசத்தில் இருந்தனர். அடுத்த நாளே இன்னும் ஓர் இன்ப அதிர்ச்சி... சிறப்பு விருந்தினராக வந்து `வணக்கம்' சொன்னார் இயக்குநர் பா.இரஞ்சித்!

“நானும் கல்லூரியில் படிக்கும்போது விகடன் மாணவப் பத்திரிக்கையாளராகச் சேரணும்னு ஆசைப்பட்டு விண்ணப்பிச்சேன். ஆனா, எனக்கு வாய்ப்பு கிடைக்கலை. என் நண்பன் மகேந்தி ரனுக்கு அப்போ அந்த வாய்ப்பு கிடைச்சது. இப்போ நீங்க எல்லாம் தேர்வாகியிருக்கீங்க. முதலில் உங்க எல்லாருக்கும் வாழ்த்துக்கள்'' என உற்சாகமாக ஆரம்பித்தார் இரஞ்சித்.

``சாதி அழிக்கணும்னு நினைக்கிற எண்ணம் நம் எல்லாருக்குமே இருக்கு. நமக்கு நம் சாதி தெரியும்; நம் நண்பனோட சாதியும் தெரியும். ஆனா, அதைப் பத்தி நாம பேச மாட்டோம். மனசுக்குள்ளேயே வெச்சுப்போம். நம்ம ஊர்ல  படிக்காதவங்களைவிட படிச்சவங்கக்கிட்டதான் சாதி வெறி அதிகமா இருக்கு. சமூக வலைத்தளங்களில் பார்க்கிறப்போ, அது இன்னும் நல்லாவே தெரியுது. இதை எல்லாம் தவிர்க்கவே முடியாதானு பெரிய கேள்வி நமக்கு முன்னாடி இருக்கு. சினிமா, ஊடகம் மூலமாத்தான் இந்தச் சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றி நாம மக்களிடம் கொண்டுசேர்க்க முடியும். சமூகப் பிரச்னைகளைப் பேசாத எந்த ஒரு ஆர்ட்டுமே ஆர்ட் கிடையாது என்பது என் கருத்து. சாதியப் பிரச்னைகளை ஒழிக்க வேண்டுமானால், ஊடகவியாலாளர்களான நீங்கள் அதைப் பற்றி முதலில் யோசிக்க வேண்டும். சாதிய எண்ணங்களை வேர் அறுக்கும் வகையில் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் மனுஷனை மனுஷனா மனுஷன் மதிக்கணும்'' என இரஞ்சித் பேசப் பேச அரங்கில் உற்சாகக் கைதட்டல்கள்.

 `` `உங்கள் படங்களில் ஏன் தொடர்ந்து சாதியத்துக்கு எதிரான கருத்துகளைப் பேசுகிறீர்கள்?' எனக் கேட்கிறார்கள். நான் எங்கே போனாலும் எனக்கு முன்னால் அங்கே சாதிதானே இருக்கு. அதை ஒழிப்பது பற்றி பேசாமல் நான் எப்படி படம் எடுக்க முடியும். சாதியால் ஒரு பிஹெச்.டி ஸ்காலர் தற்கொலை செஞ்சுக்கிறான். அதுக்கு அவனைத் தூண்டியது எது, நாம ஏன் யோசிக்க மாட்டேங்கிறோம்?

தயவுசெய்து இதைப் பற்றி ஒவ்வொருத்தரும் விவாதிங்க. எதிர்த்துப் பேசுறது இங்க எப்பவும் பிரச்னைதான். எவனோ ஒருத்தன் மட்டுமே பேசிட்டிருப்பான். எப்பவும் அவன் பேச்சை எல்லாரும் கேட்டுக்கிட்டே இருக்கணும். ஒருநாள் புரியலைனு சொல்லிப்பாருங்க. உடனே அதட்டி, மிரட்டி, உங்களை உட்காரச் சொல்வாங்க. ஆனா, தொடர்ந்து கேட்கணும்; எதிர்க்கணும்; எழுந்து பேசணும். இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் சாதியப் பிரச்னைகள் அப்படியேதான் இருக்கு. சமூக மாற்றத்தை உண்டுபண்ற ஒரு மாற்றத்தை நம்மகிட்ட இருந்தே தொடங்குவோம். ஜனநாயகத்தின் மற்றொரு வலிமையான துறைக்குள் காலெடுத்துவைக்கும் நீங்களும் இதைப் பற்றி சிந்தியுங்கள். சாதிக்கு எதிரான, அடிமைத்தனத்துக்கு எதிரான குரலை உரக்க ஒலிக்கச் செய்யத் தயங்காதீர்கள்... மகிழ்ச்சி” என்றவர், ``மாணவர்களைப் பார்த்ததும் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன். நீங்க என்ன எல்லாம் என்னிடம் கேட்க விரும்புறீங்களோ... அதை எல்லாம் தயக்கம் இல்லாமல் கேளுங்க'' எனச் சொல்ல `கபாலி' இயக்குநருடன் கேள்வி நேரம் தொடங்கியது.

“நீங்க சினிமாவுக்குள் வரணும்னு தூண்டியது எது?”

“சினிமா ஒரு சூப்பரான மீடியம். இந்த நாலு சுவத்துக்குள்ள நீங்க பேசுகிற விஷயங்கள் பெரிய எண்ணிக்கையிலான ஆடியன்ஸ்கிட்ட கொண்டுபோய் சேர்க்கிற பவர்ஃபுல் மீடியமா சினிமாதான் இருக்கு. அப்படித்தான் `நாம ஏன் இந்த சினிமா மீடியத்தைப் பயன்படுத்தக் கூடாது?'னு தோணுச்சு. முதல்ல, நான் சினிமாவுல ஆர்ட் டைரக்டர் ஆகணும்னு நினைச்சேன். அப்பதான் பிலிம் ஃபெஸ்டிவல் நடந்தது. ‘life is beautiful', ‘cinema paradiso’... என நிறைய உலக சினிமா கிளாசிக் படங்கள் பார்த்தேன். இந்தப் படங்களை எல்லாம் பார்த்த பின்னாடிதான் சினிமா எவ்வளவு ஒரு மகத்தான கருவினு புரிஞ்சுது. நிறையப் புத்தகங்கள் படிச்சேன். எனக்குத் தோன்றுவதை எல்லாம் எழுதிவெச்சேன். ஆனா, இங்க சினிமா என்பதே வேற மாதிரி இருந்தது. சினிமாவுல அரசியல் கருத்துக்களைப் பேசவே முடியாது. இதுவரை தமிழ் சினிமாவில் பேச வேண்டாம்னு ஒதுக்கிவெச்ச சில விஷயங்கள் பேசணும்னு நினைச்சுத்தான் இயக்குநர் ஆனேன்.

“சாதி ஒழிப்பு பற்றி பேசாமல் எப்படி படம் எடுக்க முடியும்?”

என் முதல் படம் ‘அட்டகத்தி’. இது செம ஜாலியான படம்னு எல்லாரும் நினைச்சுட்டி ருந்தாங்க. எனக்கு அப்படிக் கிடையாது. அந்தப் படம் மிக முக்கியமான அரசியல் திரைப்படம். இதுல நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கேன்.  ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இந்தக் கதை மூலமா சொன்னதே பெரிய அரசியல்தான்.

‘மெட்ராஸ்’ பட ஐடியா ஒரு டாக்குமென்டரி பார்க்கும்போது கிடைச்சது. ‘இஸ்ரேல் - பாலஸ்தீன தடுப்புச் சுவர்’ இருக்கிறது. அந்தச் சுவர் மட்டுதான் இருவரையும் பிரிக்கும் ஒரு முக்கியமான விஷயம். அப்பதான் கோயம்பேடு பகுதியில் சுவரால் ஒரு பிரச்னை நடந்தது. இதை எல்லாம் சேர்த்துவெச்சு உருவானதுதான் `மெட்ராஸ்' படம். ‘அட்டகத்தி’ படத்தில் நான் பேசணும்னு நினைச்சதை இதுல இன்னும் நிறைவா பேச முடிஞ்சது. ‘மெட்ராஸ்’ படத்துக்கு முதல்ல ‘ரஜினி’னு பேருவைக்க லாம்னுதான் முடிவுபண்ணினேன். ஏன்னா அந்த கேரக்டருக்கு நாங்க யோசிச்சுவெச்சிருந்த பேர் ரஜினி. அப்புறம் மெட்ராஸ்னு மாறுச்சு. ‘மெட்ராஸ்’ படம் பார்த்து ரொம்பப் பிடிச்சுப்போய்த்தான் ரஜினி சார் என்னைக் கூப்பிட்டார். மலேசியா தமிழர்களைப் பத்தி பேசலாம். அதில் சமூகத்துக்கு பயனுள்ள சில விஷயங்களைச் சொல்லலாம்னு முடிவுபண்ணினேன். அது இல்லாம மட்டும் படம் எடுக்கக் கூடாதுனு யோசிச்சேன். அதை நோக்கித்தான் நகர்கிறேன்.”

“ ‘மெட்ராஸ்’ படத்துல நடிச்ச எல்லாருமே ‘கபாலி’ படத்தில் நடிச்சிருக்காங்களே... ஏன்?”

“ஒரு பெரிய படம் எல்லார்கிட்டயும் நல்லா ரீச் ஆகும்னு தெரியும்போது... நமக்குப் பிடிச்சவங்க படத்துல இருக்கணும்னு தோணுச்சு. நானும் அவங்களோடு வேலைசெய்றது கம்ஃபர்ட்டா இருக்கும்னு நினைச்சேன். அவ்வளவுதான்.”

“’கபாலி’ படத்தில் அம்பேத்கர், மார்க்ஸ், சேகுவாரா, சார்லி சாப்ளின், மால்கம் எக்ஸ்னு பலரோட படங்கள் படம் முழுக்க இடம்பெறுது. ஆனால் பெரியார் எங்குமே இல்லையே. ஏன் பெரியாரைத் தவிர்த்துட்டீங்க?''

“பெரியார் எனக்கு ரொம்பப் பிடிச்சத் தலைவர். அவரை நான் தவிர்த்திருந்தால் இந்த இடத்துக்கு வந்திருக்கவே முடியாது. ‘சாதியை மற... மனிதனை நினை’ என்பது பெரியார் சொன்ன முக்கியமான ஸ்டேட்மென்ட். நான் பெரியாரை வேணும்னே தவிர்க்கலை. தெரியாமல் விடுபட்டிருக்கலாம். படத்தில் அவர் படம் இல்லை என்பதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஸாரி.”

``இந்த மலேசியா கேங்ஸ்டர் கதை எழுத எவ்வளவு நாட்கள் எடுத்துகிட்டீங்க. எந்த மாதிரி கிரவுண்ட் வொர்க் பண்ணீங்க?''

``இந்தக் கதை எழுதி முடிக்க ரொம்பக் குறைவான நேரம்தான் இருந்தது. மலேசியா சம்பந்தமான நிறையப் புத்தகங்கள் வாங்கிப் படிச்சேன். அங்கு உள்ள நிறையப் பேரைப் போய் பார்த்துப் பேசினேன். கொஞ்ச நாட்கள் மலேசியாவுல சுத்தினேன். கோயில் திருவிழாக்களுக்குப் போனேன். அங்க அரசியல் சம்பந்தமான பிரச்னைகள் என்ன மாதிரி வருதுனு பார்த்தேன். கதை எழுதுறதுக்கு மூணு, நாலு மாசங்கள் எடுத்துக்கிட்டேன்.''

“நீங்க ரஜினி ரசிகரா?”

“ரஜினி பிடிக்கும். அவர் நடிக்கும்போதே அவரை ரொம்ப ரசிச்சுப் பார்த்தேன்.''

“ `மகிழ்ச்சி’ங்கிற வார்த்தையை `கபாலி' படம் முழுக்கப் பயன்படுத்திடிருக்கீங்களே... ஏன்?”

“எனக்கு தமிழ் ரொம்பப் பிடிக்கும். இலக்கியங்களில் ஈடுபாடு வரக் காரணமே எனக்கு தமிழ் மீது இருந்த காதல்தான். `மகிழ்ச்சி'தான் நான் அதிகம் பயன்படுத்துற வார்த்தை. அதனால்தான் என் பொண்ணுக்கு ‘மகிழினி’னு பேர் வெச்சிருக்கேன்.”

“ரஜினியின் மற்ற படங்கள் எல்லாமே `ஆண்டவன் பாத்துப்பான்', `கடவுள் பார்த்துப்பான்'கிற ரெஃபரன்ஸ் இருக்கும். அப்படி எதுவும் இல்லாமல் ஒரு கதையை எப்படி ரஜினி ஓ.கே பண்ணார்?”

“அடிப்படையில் நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். இந்தக் கதையை நான் சொன்னப்போ அதில் இருக்கும் வீரியம் ரஜினி சாருக்குப் பிடிச்சிருந்தது. உடனே ‘பண்ணலாம்ப்பா’னு சொல்லிட்டார்.”

“இங்க அரசியல், சினிமானு எல்லாத்தையும் சோஷியல் மீடியாவில் விமர்சனம் பண்றாங்க. சோஷியல் மீடியாவால் மாற்றம் நடக்கும்னு நினைக்கிறீங்களா?”

``உலகம் முழுக்க சோஷியல் மீடியாவால் பல அரசியல் மாற்றங்கள் நடந்திருக்கு. சமீபத்திய உதாரணம் துருக்கி. ஆனால், இங்கே சோஷியல் மீடியாவால் இன்னும் மாற்றம் நிகழவே இல்லை.”

“சாதி ஒழிப்பு பற்றி பேசாமல் எப்படி படம் எடுக்க முடியும்?”

லைசிறந்த மாணவப் பத்திரிகையாளர்கள் 2015 -16ம் ஆண்டுக்கான தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர்களாக (இடம் இருந்து வலம்) தா.நந்திதா, பா.அபிரக்‌ஷன், மு.சித்தார்த், பா.நரேஷ், ஜெ.விக்னேஷ், மா.பி.சித்தார்த், மு.பிரதீப் கிருஷ்ணா, ச.ஆனந்தப்பிரியா, கோ.இராகவிஜயா (இவர் டெல்லி சென்றுவிட்டதால் இவரது சார்பில் விருதை பெற்றோர் பெற்றுக்கொண்டனர்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதோடு விகடன் வாசகர் பா.சத்தியநாராயணன், 12 மாணவப் பத்திரிகையாளர்களுக்கு பேனாவும் சிறப்பு பரிசாக ஒருவருக்கு புத்தகமும் வழங்கினார்!

தொகுப்பு: நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.விஜயலட்சுமி

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து, ப.சரவணகுமார்