Published:Updated:

லால்குடியின் உதிரிப்பூக்கள்!

லால்குடியின் உதிரிப்பூக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
லால்குடியின் உதிரிப்பூக்கள்!

வீயெஸ்வி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

லால்குடியின் உதிரிப்பூக்கள்!

வீயெஸ்வி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
லால்குடியின் உதிரிப்பூக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
லால்குடியின் உதிரிப்பூக்கள்!
லால்குடியின் உதிரிப்பூக்கள்!

ருளில் மியூஸிக் அகாடமி அரங்கம்... மேடையில் பரவும் மிதமான காவி நிற வெளிச்சம். நடுவில் பாம்பே ஜெயஸ்ரீ, அபிஷேக் ரகுராம். விட்டல் ராமமூர்த்தியும் எம்பார் கண்ணனும் வயலினுடன். அனந்தா ஆர்.கிருஷ்ணன் மற்றும் கணபதிராமன் மிருதங்கம். இந்த அறுவருடன் தபேலா ஓஜஸ் அதியாவும் இணைந்து எழுவரானார்.

விட்டலும் எம்பாரும் வயலினில் மல்லாரி வாசித்து ஆரம்பித்துவைக்க, மிருதங்கமும் தபேலாவும் இணைந்து கம்பீரம் சேர்த்தன. அபிஷேக் பாட, பாம்பே ஜெயஸ்ரீ அவருடன் சேர்ந்துகொள்ள, கம்பீரநாட்டை ராகத்தில் சுவாமி புறப்பாடு.

அன்றைய உற்சவமூர்த்தி, வயலின் மேதை மறைந்த லால்குடி ஜெயராமன்.

‘To Sir, With Love’ என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்வு, ஸ்ரீராம் குழுமத்தின் ஏற்பாடு. இதன் நிறுவனர் ஆர்.தியாகராஜன், லால்குடியின் அதிதீவிர ரசிகர். அவரது இசைக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டவர். லால்குடியின் சங்கீத மேதைமைக்கு புகழ் அஞ்சலி செலுத்த விரும்பி, அவரது இசையில் நாளும் மூழ்கித் திளைத்துக்கொண்டிருக்கும் பாம்பே ஜெயஸ்ரீ குழுவினரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் தியாகராஜன்.

இரண்டு வருடங்களுக்கு முன்னரே, இதற்கான விதை தூவப்பட்டிருக்கிறது. ‘ஜூலை 1, 2016’ என, கடந்த நவம்பரிலேயே தேதியை முடிவுசெய்து அகாடமியை ‘புக்’ செய்திருந்தனர்.
லால்குடியிடம் அபரிமிதமான குருபக்தி கொண்ட பிரதான சீடர் பாம்பே ஜெயஸ்ரீ லால்குடியின் குடும்ப உறவு அபிஷேக். விட்டல், லால்குடியின் தயாரிப்பு. விட்டலிடம் சிறிது காலம் வயலின் கற்றிருக்கிறார் எம்பார் கண்ணன். கணபதிராமன், ஜெயராமன் கச்சேரிகளுக்கு நிறைய வாசித்திருக்கிறார்கள். ஆக, குழுவில் கிட்டத்தட்ட அனைவருமே அந்த ஜீனியஸுடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்கள்தான்.

லால்குடியின் உதிரிப்பூக்கள்!

இந்த நிகழ்ச்சியை, வழக்கமான கச்சேரி பாணியில் அமைத்துக்கொள்ளவில்லை. அதாவது வர்ணத்தில் ஆரம்பித்து இரண்டு சிறு கீர்த்தனைகள், சப் மெயின், மெயின், ராகம் - தானம் - பல்லவி, துக்கடாக்கள் எனப் பாடிவிட்டு தில்லானாவில் முடிக்கும் டைம் டேபிள் கிடையாது. லால்குடி ஜெயராமன் இயற்றியவை, அவர் மெருகூட்டி செப்பனிட்டவை, அவர் வாசித்து வாசித்துப் பிரபலப்படுத்தியவை எனக் கலவையான மெனு.

அன்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த திருத்தவத்துறை (லால்குடி தலத்து இன்னொரு பெயர்!) ரசிகர்கள், மெய்ம்மறந்து ரசித்துப் பாராட்டினார்கள்; அல்லாதவர்கள் குழம்பினார்கள். அவர்கள் முகங்களில் முழு திருப்தி காணப்படவில்லை.

‘`இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பில் எங்கள் அனைவரின் பங்களிப்பும் உண்டு. அபிஷேக் நிறைய ஐடியாக்கள் கொடுத்தார். விட்டலும் எம்பாரும் வெறும் பக்கவாத்தியமாக இல்லாமல், பக்காவான ஆலோசனைகள் வழங்கினார்கள். கணபதிராமனும் அனந்தாவும் ‘இதைச் சேர்த்துக்கொள்ள வேண்டும், அதை விட்டுவிடக் கூடாது' என நிறைய டிப்ஸ் கொடுத்தார்கள்” என்றார் பாம்பே ஜெயஸ்ரீ. ஏப்ரல், மே மாதத்தில் இருந்தே திட்டமிடலை ஆரம்பித்துவிட்டார்களாம். கடைசி பதினைந்து நாட்கள் முழு வீச்சில் பிராக்டீஸ் நடந்திருக்கிறது.

முதலில் குறிப்பிட்ட மல்லாரி, லால்குடி இசையமைத்து தேசிய விருது பெற்ற ‘சிருங்காரம்’ திரைப்படத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது. அடுத்து, ‘எங்கு இருந்து வருகுவதோ..?’ எனத் தொடங்கும் பாரதியாரின் பாடல். இந்தப் பாடலை சுத்த சாவேரி ராகத்தில் ஆரம்பித்து, சுருதி பேதம் செய்து இந்தோளம், சுத்த தன்யாசி, மோகனம், மத்யமாவதி ராகங்களில் பயணிக்கும் வகையில் ஐந்து சரணங்களுக்கு மெட்டு போட்டிருப்பார் லால்குடி. அவற்றை இரு குரல்களும், இரு வயலின்களுடன் இணைந்து இசைத்து இனிமை பொழிந்தன.

தியாகராஜரின் ‘ஆடமோடி கலதே...’ (சாருகேசி), ‘கதி நீவநி...’ (தோடி) ஆகிய இரண்டு கீர்த்தனைகள் நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்பட்டதற்குக் காரணம் உண்டு. சாருகேசியில் ஸ்பெஷல் சங்கதிகளைக் குழைத்துக் கொடுத்து அந்த ராகத்துக்கு புதுப் பொலிவு கொடுத்தவர் லால்குடி. இந்த ராகத்தில் அவர் இயற்றிய வர்ணத்தில் வெளிப்படுத்திய ஸ்வரங்களை இரு வயலின்களும் வாசிக்க, பாடல் வரிகளை ஜெயஸ்ரீயும் அபிஷேக் ரகுராமும் பாடி சொக்கவைத்தார்கள். தோடி ராகப் பாடல், லால்குடிக்கு தியாகராஜர் விஜயம் செய்தபோது பாடிய பஞ்சரத்தினங்களில் ஒன்று என்பதால் கூடுதல் சிறப்பு.

லால்குடியின் உதிரிப்பூக்கள்!

லால்குடி இயற்றிய வர்ணங்களும் தில்லானாக்களும், அவருக்குப் பெயரும் புகழும் பெற்றுத்தந்தவை. இசைக் கலைஞர்களும் நடனமணி களும் இவற்றை இன்று வரை பாடியும் ஆடியும் வருகிறார்கள். அன்றைய நிகழ்வில் அந்த இரண்டையும் ‘மெட்லி’யாகக் கலக்கிக் கொடுத்துப் பருகவைத்தார் ஜெயஸ்ரீ நீலாம்பரி, பௌளி, நளினகாந்தி, சாமா, கருடத்வனி, தேவகாந்தாரி, கல்யாணி, ஷண்முகப்ரியா ராகங்களில் அமைந்த வர்ணங்களை துளித்துளி கோடிட்டுக் காட்டியபோது, பார்வையாளர் களுக்குக் கிடைத்தது சுவையான ஃபுரூட் சாலட்.

அதே மாதிரி, சிந்துபைரவி, செஞ்சுருட்டி, பெஹாக், மோகன கல்யாணி, திலங் ராக தில்லானாக்கள் வாசித்துப் பாடியபோது, லால்குடியார் தொடுத்துக் கொடுத்துச் சென்றிருக்கும் பாமாலைகளை உதிர்த்து, கையில் விழுந்த உதிரிப்பூக்களால் அர்ச்சனை செய்த உணர்வு.