Published:Updated:

ஜென் Z - நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஜாப்ஸ்

ஜென் Z - நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஜாப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஜாப்ஸ்

கே

ஜென் Z - நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஜாப்ஸ்

கே

Published:Updated:
ஜென் Z - நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஜாப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஜாப்ஸ்
ஜென் Z - நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஜாப்ஸ்

கார்ப்பரேட் உலகின் கான்ஜுரிங் பேய்கள், மேனேஜர்ஸ்தான். `உன் வயசு என் எக்ஸ்பீரியன்ஸ்' என்றபடி ஆர்டர் மட்டும் போடும் இவர்களின் தொல்லை இல்லாத வேலைகள் பற்றி தெரியுமா? பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை இப்படி ஒரு வேலை நம் நாட்டில் இல்லவே இல்லை. ஆனால், அடுத்த பத்து ஆண்டுகள், இந்த ஏரியாதான் மோஸ்ட் ஹேப்பனிங் பிளேஸ்!

 1) ஆப் டெவலப்பர்ஸ்:

2007-ம் ஆண்டுதான் ஆப்பிள் மொபைல்கள் மார்க்கெட்டுக்கு வந்தன. ஆண்ட்ராய்டு அதற்குப் பிறகுதான். ஸ்மார்ட்போன்களுக்காக அன்று முதல் பல மில்லியன் ஆப்ஸ்கள் வந்துவிட்டன. இதுவரை 20 பில்லியன் டாலருக்கும் மேல் ஆப்ஸ் மூலம் மட்டுமே சம்பாதித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். நம் அன்றாடத் தேவைகள் எதையாவது ஆன்லைன் மூலம் செய்ய முடிகிறதா? அதை இன்னும் ஸ்பெஷலாகச் செய்ய ஒரு கைடுலைனை உங்களால் யூகிக்க முடிந்தால், உடனே ஆப்ஸ் டெவலப்பிங் படிங்க... அட்டகாசம் பண்ணுங்க!

ஜென் Z - நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஜாப்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2) சோஷியல் மீடியா மேனேஜர்ஸ்:

ஜென் Z - நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஜாப்ஸ்

 ஒரு கம்பெனியின் ஆபீஸ் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் அதற்கொரு அக்கவுன்ட் இருந்தே ஆக வேண்டும். ட்ரோல் செய்வதையே குலத்தொழிலாகக் கொண்ட நெட்டிசன்களைச் சமாளிக்க அதற்கு சோஷியல் மீடியா மேனஜரும் தேவை. கொஞ்சம் பொறுமையும், நிறைய க்ரியேட்டிவிட்டியும், ஆன்லைன் அப்செஷனும் உங்களுக்கு உண்டா? இந்தாங்க அப்பாயின்ட்மென்ட் ஆர்டர். யூ ஆர் எ சோஷியல் மீடியா மேனேஜர்.

3) யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் டிசைனர்:

சூரியனைப் பார்த்தபடி, குருவிகளின் சத்தம் கேட்டு எழுந்திருப்பது ஒருவிதம். அலாரத்தின் `ட்ரிங்... ட்ரிங்...' இரைச்சலில் விழிப்பது இன்னொருரகம். அலாரத்துக்குள் குருவியையும் சூரியனையும் அடைப்பதுதான் இந்த யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் டிசைனரின் வேலை. இயற்கையை டெக்னாலஜிக்குள் சிறைவைக்கும் இந்த வேலைக்கு, அல்டிமேட் கற்பனையும் டெக்னிக்கல் நாலெட்ஜும் தேவை. `மனிதர்களின் வாழ்க்கைமுறையையே மாற்றி அமைப்பவங்கடா நாங்க' என பயோவில் சேர்த்து, தூள் கிளப்பலாம்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism