Published:Updated:

ஜென் Z - நான் அபராஜித் ஆனது எப்படி?

ஜென் Z - நான் அபராஜித் ஆனது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நான் அபராஜித் ஆனது எப்படி?

சிபி, படம்: கே.ராஜசேகரன்

ஜென் Z - நான் அபராஜித் ஆனது எப்படி?

சிபி, படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:
ஜென் Z - நான் அபராஜித் ஆனது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நான் அபராஜித் ஆனது எப்படி?
ஜென் Z - நான் அபராஜித் ஆனது எப்படி?

பாபா அபராஜித்... இளைய தமிழன்; ஜென் Z கிரிக்கெட்டர். ரஞ்சிகோப்பை, அண்டர்-19 உலகக்கோப்பை... என சில பல களங்கள் கடந்து, இந்திய அணி் டி ஷர்ட் அணியக் காத்திருக்கிறார்.

“என் டார்கெட் கிரிக்கெட்தான்னு நாலு வயசுலேயே ஃபிக்ஸ் பண்ணிட்டேன். நானும் என் அண்ணன் இந்திரஜித்தும் ட்வின்ஸ். ரெண்டு பேரும் கிரிக்கெட் மட்டும்தான் விளையாடுவோம். பந்தை அவன் உருட்டிவிடுவான், நான் பிளாஸ்டிக் பேட்டால் அடிப்பேன். இதை எங்க அப்பா, பாபா கவனிச்சுட்டே இருந்தார்போல. அம்பத்தூர்ல ஒரு கோச்சிங் சென்டர்ல சேர்த்துவிட்டார்.

அதிகாலை 6 மணிக்கே கிரவுண்ட்ல இருப்போம். இரண்டு மணி நேரம் பிராக்டீஸ். ஸ்கூல் முடிஞ்சதும் திரும்பவும் கிரவுண்டு. வேற எது மேலயும் எங்களுக்கு மனசு திரும்பலை. அப்பாவும், `படிங்க’னு சொன்னதைவிட `விளையாடுங்க’னு சொன்னதுதான் அதிகம்.

ஜென் Z - நான் அபராஜித் ஆனது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

10 வயசுல, என்னைவிட சீனியர்கள்கூட ஒரு மேட்ச்ல கலந்துக்கிட்டேன். 107 ரன் அடிச்சு, அவுட் ஆகாமல் நின்னு டீமை ஜெயிக்கவெச்சேன். 100 ரூபா கொடுத்தாங்க; நெத்தியில முத்தம் கொடுத்துப் பாராட்டினாங்க. ஒரு விளையாட்டில் வின் பண்ணா, நம்மை நேசிப்பாங்க... கொண்டாடுவாங்கனு அப்பதான் புரிஞ்சது. இன்னமும் கொஞ்சம் ஃபோக்கஸா இருக்கணும்னு நினைச்சேன். அப்பாவும் அதையே நினைச்சு, பாலாஜி சாரை எனக்கு பெர்சனல் கோச் ஆக்கினார். அதுக்கு அப்புறம்தான் என் கிரிக்கெட் கேம் அடுத்த லெவலுக்கு நகர்ந்தது. பாலாஜி சார்தான் இப்போ என் பெர்சனல் கோச்.

நான் ரைட் ஹேண்டட் பேட்ஸ்மேன். ‘உனக்கு ஹேண்ட் பவர் அதிகம். பேட்டிங் பக்கா. ஆனா, பெளலிங் மாத்தணும்’னு சொன்னார். நான் அப்ப ஃபாஸ்ட் பெளலர். இந்த பெளலிங் ஸ்பீடு எல்லாம் பத்தாது. ஸ்பின் போடுனு அதுக்குப் பயிற்சிகொடுத்தார். ஃபாஸ்ட் பெளலிங்கைவிட, ஸ்பின் சூப்பரா பண்ணினேன். ரன்னும் அடிச்சேன், விக்கெட் எடுத்தேன். ‘ஆல் ரவுண்டர் அபராஜித்’னு பாராட்டினாங்க. அதன் பிறகு ஸ்டேட்ல நடந்த அண்டர்-13, அண்டர்-15, அண்டர்-17, அண்டர்-19னு எல்லா போட்டிகள்லயும் கலக்கினேன். 17 வயசுல ரஞ்சிகோப்பை ஆடினேன். இதுல, ‘அபராஜித்னு ஒரு பையன் நல்லா விளையாடுறான்’னு பாராட்டினாங்க.

2012. ஆஸ்திரேலியாவுல நடந்த அண்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நானும் செலெக்ட் ஆனேன். சின்ன வயசுக் கனவுகள் நனவான தருணம் அது. புளூ கலர் ஜெர்ஸில சும்மா அடி பொளந்துகட்டணும்னு மனசுக்குள்ள வெறி. ஆஸ்திரேலியாவுக்குப் பறக்கிறதுக்கு முன்னாடி `சச்சின், உங்ககூடப் பேசுவார்’னு சொன்னப்போ, வெறி இன்னும் அதிகமாகிடுச்சு. அவர்கூட கைகுலுக்கி பேசினதை நினைச்சா, இப்பக்கூட உடம்புக்குள்ள எனர்ஜி பாயுது. அந்த எனர்ஜியை வெச்சுத்தான் ஆஸ்திரேலியாவுல சும்மா ரவுண்டு கட்டி அடிச்சோம்.

குவார்ட்டர் ஃபைனல்ல பாகிஸ்தானுக்கு எதிரா 55 ரன், ஒரு விக்கெட் எடுத்தேன். செமி ஃபைனல்ல நியூஸிலாந்துகூட 10 ஓவர் மேட்ச்தான். அதுல 25 ரன், ஒரு விக்கெட் எடுத்தேன். இந்த ரெண்டு மேட்ச்லயும் நான்தான் மேன் ஆஃப் தி மேட்ச். ஃபைனல்ல நாங்க ஜெயிச்சு இந்தியா வந்தபோது... ஒரு வெற்றி, நம் அடையாளத்தை எந்த அளவுக்கு மாத்தும்னு தெரிஞ்சது. அந்த நொடிக்காகத்தான் 15 வருஷமா பயிற்சி எடுக்கிறோம்னு தோணுச்சு.

ஐ.பி.எல்-ல நம் சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்ல மூணு வருஷம். ஒரு வருஷம் புனே டீம். தோனி, பிராவோனு பல பேர்கூட பழகும் வாய்ப்பு கிடைச்சது. ஒவ்வொருத்தரும் ஒரு வகையில் எனக்கு இன்ஸ்பிரேஷன். இப்ப எனக்கு வயசு 22. இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள இந்தியா டீம்ல விளையாடணும். தீவிரமா பயிற்சியில இருக்கேன்.

சீக்ரெட் ஆஃப் சக்சஸ்னு நான் நம்புறது ரெண்டு விஷயங்கள்தான். விடாமுயற்சி, உழைப்பு. அடுத்து, தப்புனு தெரிஞ்சா ஏத்துக்கணும். தவறுகள்தான் நம்மை நிறுத்தி, திருத்தி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். மேட்ச்ல நான் பல தவறுகள் பண்ணியிருக்கேன். அதை எல்லாம் சரிபண்ண முயற்சி செஞ்சிட்டே இருக்கேன். என் வாழ்க்கையின் ஃபர்ஸ்ட் ஹாஃப் மட்டும்தான் இது. செகண்ட் ஹாஃப் எனக்காக வெயிட்டிங். அதையும் அசால்ட் பண்ணுவோம் ப்ரோ!”

ஹாபி

ஒரே வேலையையோ, விளையாட்டோ தொடர்ந்து செஞ்சுட்டே இருந்தால் சலிப்பு வந்துடும். அப்ப அப்ப கிரிக்கெட் விளையாட்டுக்கு குட்டி பிரேக் விட்டுட்டு சினிமா பார்க்க, ஃப்ரெண்ட்ஸ்கூட சாட் பண்ண கிளம்பிடுவேன்.

ஸ்டைல்

வலதுகை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்.

வலதுகை ஆஃப் ஸ்பின் பௌலர்.

சக்சஸ் மந்த்ரா

உழைப்பு...
உழைப்பு...
உழைப்பு மட்டுமே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism