Published:Updated:

ஜென் Z - ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ!

ஜென் Z - ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ!

கோ.இராகவிஜயா

ஜென் Z - ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ!

கோ.இராகவிஜயா

Published:Updated:
ஜென் Z - ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ!
ஜென் Z - ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ!

பிரா... ஆம் பிரா!

இந்த வார்த்தையை உரக்க வாசித்துப்பாருங்கள்... பக்கத்தில் இருப்பவர்களுள் ஒன்றிரண்டு பேராவது உங்களைக் கேவலமாகப் பார்ப்பார்கள். இத்தனைக்கும் இது கெட்டவார்த்தை கிடையாது. மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று.

பள்ளிப்பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும்போது எல்லாம் `மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது!' `கெஸ்ட் வெளியே வந்துட்டாங்க!' என்றெல்லாம் குறியீடு வைத்துக்கொண்டுதான் சிறுமிகள் பேசிக்கொள்வர். ஒருமுறை யூனிஃபார்முக்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு `உன் பாய் ஃப்ரெண்ட் எட்டிப்பார்க்கிறான்' எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன்தான் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு. அதே தோழி, அடுத்தமுறை பிராவை எப்படி யூனிஃபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்றும் சொல்லிக்கொடுத்தாள். இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை.

ஜென் Z - ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரா பயன்படுத்தப்படாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாதாம். மொட்டைமாடியில் மற்ற துணிகளோடு ஒன்றாகச் சேர்த்து பிராக்களைக் காயப்போடுவதுகூட அநாகரிகமாம். அதுவும் வீட்டில் அண்ணன், தம்பி யாராவது இருந்துவிட்டால் போதும், நிலைமை இன்னும் மோசம். துண்டுக்குள் வைத்துச் சுருட்டிக் கொண்டுதானே குளியலறைக்கே எடுத்துச் செல்லவேண்டுமாம். `ஷாப்பிங் போறியா அண்ணா... எனக்கு பிங்க் கலர்ல ஒரு பிரா வாங்கிட்டு வாயேன்' என எங்கேயாவது பெண்கள் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின் விளம்பரங்களில்கூட உதிரப்போக்கைக் குறிக்க நீல நிற நீரைத்தானே காட்டுகிறார்கள். மாதவிடாய், நாப்கின், பிரா எனப் பெண்கள் சார்ந்த விஷயங்களைச் சுற்றி எதற்கு தேவை இல்லாத இத்தனை மர்மம்? அதுவும் ‘பிரா’ என்ற வார்த்தை, உச்சரிக்கப்படவே கூடாத கெட்ட வார்த்தையா என்ன?

ஆடைகளுக்கு உள்ளே அணியப்பட்டிருக்கும் பிரா ஸ்ட்ராப் அவ்வப்போது வெளியே தெரிவது ஓர் இயல்பான விஷயம்தான் என, ஏன் நம்மால் பார்க்க முடிவதில்லை. அப்படியே வெளியே தெரியும் பிரா ஸ்ட்ராப்பை உள்ளே தள்ளாமல் விட்டுவிட்டால் போதுமே, `வளர்ப்பு சரியில்லை, பெத்தவங்களைச் சொல்லணும்' என ஒட்டுமொத்தக் குடும்ப மானத்தையே அந்தச் சிறிய பிரா ஸ்ட்ராப்பில் பதுக்கிவைக்கவேண்டிய அவசியம்தான் என்ன?

இவ்வாறான அத்தியாவசிய விஷயங்களைக்கூட நாம் யாருக்காக taboo-வாக மாற்றி வைத்திருக்கிறோம்? திரைப்படங்களில் எத்தனை உள் பாடி ஜோக்குகள் இன்னும் வந்துகொண்டே இருக்கின்றன!

செருப்பு, சாக்ஸ், சுடிதார், வாட்ச்போல பிராகூட பெண்கள் உபயோகப்படுத்தும் மற்றொரு தேவையே என்பதை இந்த வாட்ஸ்அப் காலத்திலாவது மக்கள் உணர்ந்தால் நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism