Published:Updated:

ஜென் Z - புதுசா... பெருசா... - ஸ்டார்ட் அப் சீக்ரெட்ஸ்!

ஜென் Z - புதுசா... பெருசா... - ஸ்டார்ட் அப் சீக்ரெட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - புதுசா... பெருசா... - ஸ்டார்ட் அப் சீக்ரெட்ஸ்!

கே

ஜென் Z - புதுசா... பெருசா... - ஸ்டார்ட் அப் சீக்ரெட்ஸ்!

கே

Published:Updated:
ஜென் Z - புதுசா... பெருசா... - ஸ்டார்ட் அப் சீக்ரெட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - புதுசா... பெருசா... - ஸ்டார்ட் அப் சீக்ரெட்ஸ்!
ஜென் Z - புதுசா... பெருசா... - ஸ்டார்ட் அப் சீக்ரெட்ஸ்!

`ஒரு நல்ல ஐடியா மட்டுமே பிசினஸுக்குப் போதாது. எல்லா ஐடியாக்களுமே ஒரு சக்சஸ்ஃபுல் பிசினஸ் மாடலுக்கான விதைதான். அந்த ஐடியா செல்லுபடியாகும் மார்க்கெட் இங்கே இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்'.

இன்று வெற்றிகரமாக இயங்கும் ஸ்டார்ட்அப்கள் அனைத்துக்குமே இது பொருந்தும். அப்படி ஹிட் ஆன ஒரு ஸ்டார்ட் அப்தான் `Voonik'.

சுஜயத் அலியும் நவநீத கிருஷ்ணனும் பொள்ளாச்சி இளைஞர்கள். 2013-ம் ஆண்டில் தொடங்கிய இந்த ஸ்டார்ட்அப், இப்போது ஆண்டுக்கு 720 கோடி ரூபாய் டர்ன்ஓவர் செய்கிறது. Voonik-ன் ஸ்பெஷல்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜென் Z - புதுசா... பெருசா... - ஸ்டார்ட் அப் சீக்ரெட்ஸ்!

``எங்க ஐடியா ரொம்ப சிம்பிள். ஜபாங், மிண்ட்ரா எல்லாம் fashion forward womenனு சொல்ற எலைட் மக்களைத்தான் அதிகமா டார்கெட் பண்றாங்க. ஏற்கெனவே ஃபேஷன் பத்தின ஆர்வம் இருக்கிற பெண்களுக்கே எல்லோரும் கேட்டர் பண்றாங்க. நாங்க இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை ஊர்ல இருக்கிறவங்களுக்கு, Affordable prices-ல (<500) ஃபேஷன் விஷயங்களைக் கொடுக்கலாம்னு யோசிச்சோம். பெரிய பிராண்டுகளைவிட சின்னச் சின்ன ஆட்கள்தான் அதிகம். அவங்களால இ-காமர்ஸ்ல அதிகமா இடம் பிடிக்க முடியலை. அதனால, affordable prices-ல துணிகள் தயாரிக்கிறவங்களையும், அந்தத் துணிகளை வாங்குறவங்களையும் இணைக்கும் பாலமா ஒரு ஸ்டார்ட்அப் பண்ணலாம்னு  ஆரம்பிச்சதுதான் `Voonik'.

போன வருஷம் வரைக்கும் மாசம் ஒரு கோடிதான் எங்க டார்கெட். இந்த வருஷம் ஒரு மாசம் 60 கோடி ரூபாய்க்கு பிசினஸ் பண்ணியிருக்கோம். வருஷத்துக்கு 720 கோடி ரூபாய் டார்கெட். நாலே பேர் சேர்ந்து இந்த பிசினஸ் ஆரம்பிச்சோம். இப்ப எங்க டீம் சைஸ் 500 பேர். எங்க கஸ்டமர்கள், வெண்டர்கள், எங்ககிட்ட வேலை செய்றவங்களையும் சிவகாசி, ராஜபாளையம் மாதிரியான Tier2, Tier3 நகரங்களைச் சேர்ந்தவங்களைத்தான் எடுத்திருக்கோம். அவங்க ஊர் மக்களைப் பற்றி அவங்களுக்குத்தானே நல்லா தெரியும்” என்கிற சுஜயத் அலி, அமேஸானில் வேலைபார்த்தவர்.
`Voonik'ஐ தொடங்கிய கதையே செம ஜாலி எக்ஸ்பீரியன்ஸ்.

`` யு.எஸ்-ல இருந்து  ஜனவரி 17, 2013-ல சென்னை வந்ததும், எங்க புது ஆபீஸுக்குள்ள நான் நுழைஞ்சேன். முன்னாடி அங்கே இருந்த சின்ன ஸ்டார்ட்அப் காலி செஞ்சிட்டுப் போன தடயங்கள் தெரிஞ்சது. வேலைக்கு ஆகாதுனு அவங்க விட்டுட்டுப்போன பிரின்டர்ஸ், டேபிள்னு ஒரு பேய்ப் படத்தின் எஃபெக்ட். பாத்ரூம்ல தண்ணி வரல. நவநீத் என்னைப் பார்த்து சிரிச்சார். அன்னைக்கு முழுக்க அந்த இடத்தைச் சுத்தம் பண்ற வேலையை மட்டும்தான் செஞ்சோம். எங்களோட மிகப் பெரிய ஜர்னி, அப்பதான் தொடங்குதுனு எங்க ரெண்டு பேருக்கும் தெரியும்'' கண்கள் சிமிட்டிச் சிரிக்கிறார் சுஜயத் அலி.

ஃபேஷனுக்கு என தனி கன்சல்டன்ட்ஸ் இருப்பார்கள். `Personal stylist' என்பார்கள். ஒருவரது பாடி ஷேப், நிறம், ஸ்கின் டோன் போல பல விஷயங்களை மனதில் வைத்து பெர்சனல் ஸ்டைலிஸ்ட் அறிவுரை சொல்வார்கள். அந்த சஜஷன்ஸை நம் கஸ்டமர் களுக்குச் சொன்னால், இன்னும் எளிதாக இருக்குமே என்ற ஐடியா ஃப்ளாஷ் ஆகியிருக்கிறது.

ஜென் Z - புதுசா... பெருசா... - ஸ்டார்ட் அப் சீக்ரெட்ஸ்!

ஆக, ஒருவருக்கு ஃபேஷன் தொடர்பாக சஜஷன்ஸ் தருவது என்றால், அவருக்குப் பிடித்த கலர், அவரது பாடி ஷேப் போல பல விஷயங்களைச் சேகரிக்க வேண்டும். `டெக்னாலஜியில் இதற்கு வழி இருக்கிறது. அதைச் சரியாகப் பிடித்து Voonik ஆப்-ல் சேர்த்தார் சுஜயத் அலி. நாம் பார்க்கும் ஒவ்வொரு காஸ்ட்யூமும் பிடித்திருந்தால் ரைட் சைட் க்ளிக்; இல்லையென்றால், லெஃப்ட் சைட் க்ளிக்.
 
ஒரு குறிப்பிட்ட காலத்தில், நமது விருப்பங்களை வைத்து ஒரு பேட்டர்னை சிஸ்டமே உருவாக்கி விடும். அதன் அடிப்படையில், நமக்கு பிடிக்கக்கூடிய உடைகளை மட்டுமே அது நம் கண்ணில் காட்டும். (இதற்கு Image recognaization technology எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.) அதாவது 1,000 ஜீன்ஸ்களில் இருந்து நமக்குப் பிடித்ததை எடுக்காமல், நமக்கு செட் ஆகும் 20ஐ மட்டும் பார்த்து வாங்கிக் கொள்ளலாம். இதனால் நேரமும் மிச்சம்; நமக்குப் பிடித்த விஷயங்களை மிஸ் செய்யவும் மாட்டோம். இந்த ஐடியாதான் Voonik-ன் ஹெலிகாப்டர் ஷாட்” என்கிறார் சுஜயத் அலி. செமத்தியா டிரெஸ் பண்ணணும் ப்ரோ!

https://play.google.com/store/apps/details?id=com.voonik.android&hl=en

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism