Published:Updated:

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 1

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 1

தொடர்Dr. ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: காமேடி

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 1

தொடர்Dr. ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: காமேடி

Published:Updated:
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 1
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 1

திரைக்கதை ஆசான் சிட்ஃபீல்ட், `உங்கள் கதை மாந்தர்களை முதலில் அறிமுகம் செய்துவிட்டு, அதன் பின் முக்கியமான கதை மாந்தர்களின் சிக்கல்களைச் சொல்லுங்கள். பிறகு, `அவர்கள் தங்கள் லட்சியத்தை அடைந்தார்களா எனச் சொல்லுங்கள்' என்பார். களம் அமைத்தல், எதிர்கொள்ளல் மற்றும் முடிவு என்பதுதான் Three Part Structure என ஹாலிவுட் சிலாகிக்கும் திரைக்கதை வடிவம்.
நீங்களும் நானும்தான் நம் கதையில் மாந்தர்கள்.

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 1

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

களம், உலக நடப்புகள்.

இப்போதைக்கு இவ்வளவுதான்!

அது சரி... உங்க லட்சியம் என்ன பாஸ்?

@

செகண்டில் சொல்ல முடியவில்லை என்றால், தெளிவாக எதுவும் இல்லை என்றுதான் பொருள். அதனால் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை.

வாழ்க்கை லட்சியம் சிறு வயதில் புலப்படுவது என்பது, ஜனத்தொகையில் 0.001 சதவிகிதம்தான் சாத்தியம். டெண்டுல்கரையும் ரஹ்மானையும் உதாரணம் காட்டுவது சரியல்ல. அதேபோல நாளுக்கு ஒரு லட்சியம் மாறிக்கொண்டே இருப்பதும் இளவயதில் சகஜம்.

“எப்பவும் எந்த வேலை செய்தாலும் ஹேப்பியா இருக்கணும் சார்” என்று சொன்ன பெண்ணை, பித்துப்பிடித்தவரைப்போல பார்த்தார்கள் அவளுடைய பெற்றோர். பெரிதாக மெனக்கெடாத பெண்ணை ஐ.ஐ.டி-க்குத் தயார் செய்யவைப்பது எப்படி என்பதுதான் அவர்கள் பிரச்னை. பெற்றோர் இருவரும் அந்த சுவாமிஜியின் பக்தர்கள் என்பது, பேசுகையில் தெரிந்தது. “அங்கே கிடைக்கும் சந்தோஷம், நிம்மதி..” என்று தாயார் ஆரம்பித்தபோது மகள் என்னை அர்த்தமாகப் பார்த்துப் புன்னகைத்தாள்.

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 1

எல்லாம் சரி, நீங்க யார் ப்ரோ? என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.

@


நான் ஒரு சைக்காலஜிஸ்ட். என் வேலை அறிவுரை சொல்வது என நினைத்து வருபவர்கள் அதிகம். `நீங்கதான் கொஞ்சம் புத்தி சொல்லணும்' எனக் கேட்டு வருபவர்களிடம்தான் பெரும்பாலும் அதிகப் பிரச்னைகள் இருக்கும். அறிவுரை சொல்வதற்கும் ஆலோசனை சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பிறர் வாழ்க்கையில் முடிவெடுக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒருவர் வாழ்க்கை பற்றி Value Judgments செய்வதும் அத்துமீறல்தான். ஆற்றுப்படுத்துதலே கவுன்சலிங். தீவிர மனசிகிச்சைகள் பற்றி பின்னர் பேசலாம்.

ஆலோசனை பலன் அளிக்கும். அறிவுரை சந்தேக கேஸ். சிலருக்கு அது தேவை இல்லை. பலருக்கு அதனால் பலன் இல்லை.

@


அறிவுரை சொல்கிறேன், மோட்டிவேட் பண்றேன்னு சொல்லி, மொத்தமாகக் காலிசெய்வதில் ஆசிரியர்களுக்கு நிகர் பெறோர்கள் மட்டுமே. அபூர்வமாக சிலர் சரியான தருணத்தில் ரத்தினச்சுருக்கமாகச் சொல்வது வாழ்க்கையையே புரட்டிப்போடுவதாக இருக்கும்.

உதாரணத்துக்கு, `உன்னால முடியாதுனு யார் சொன்னாலும் நம்பாதே. நானே சொன்னாலும் சரி!' என்று ஒரு அப்பா ஆறு வயது மகனுக்குச் சொல்லும் வசனம், உங்களை பல நாட்கள் தூக்கம் இழக்கவைக்கும்.

வில் ஸ்மித் நடித்த `Pursuit of Happiness' படத்தைப் பாருங்கள். ஏற்கெனவே பார்த்திருந்தால் மீண்டும் ஒரு முறை பாருங்கள். நான் உத்தரவாதம் தரும் ஊக்க மருந்து.

@


அன்று வீட்டுக்கு வந்திருந்த உறவுக்காரப் பையன் சொன்னான், `இப்படி ஒரு ஆக்‌ஷன் படம், என் லைஃப்ல பார்த்தது இல்லை!' என்று. பையனுக்கு வயது 11.

ஐந்து வயதில் `பயங்கர மூளை!' எனப் பெருமைப்படும் பெற்றோர்கள், பத்து வருடங்கள் கழித்து அதற்காகவே கவலைப்படுகிறார்கள்.

என்னிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு பேராசிரியர் இந்தத் தலைமுறைக்கு
`பெரிய தலை, சின்ன இதயம்' என வர்ணித்தார். `நாம்தானே அவர்களை அப்படி ஆக்கினோம்' என்றபோது மெளனம் சாதித்தார்.

@

மில்லினியம் குழந்தைகள் பற்றியும், Gen Z பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள் நிறுவன உளவியலில் மேற்கொண்டுள்ளார்கள். இன்று 20-களைச் சமாளிப்பது எப்படி என, 50-களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம்.

`உன் வயசு என் அனுபவம்!' என மார்தட்டுபவர்களின்  ஜம்பம் இனி பலிக்காது. சொல்லித்தராததை கூகிள் பண்ணித் தெரிந்துகொண்டு, அடுத்த நாளே கேள்வி கேட்கும் அபாயம் உண்டு.

அதற்காக, `நம் பசங்களுக்கு எல்லாம் தெரியும்' எனச் சொல்ல முடியாது. `எம்.பி.ஏ அப்ளை பண்ண பையனுக்கு, இந்திரா காந்தி யார்னு தெரியலை சார்' என்றார். `இன்டர்வியூவுல கேட்டா முழிக்கிறான். எப்படி சார் இவங்க எல்லாம்..?' என ராகம் பாடினார். இது பற்றி என் மாணவன் ஒருவனிடம் கேட்டபோது, அவன் சொன்ன பதில் ரொம்பவும் யோசிக்கவைத்தது. `எதையும் தேவைப்படும்போது தெரிஞ்சுக்கிட்டா போதும் சார். எதுக்கு சார் எல்லாத்தையும் மண்டையில ஏத்திக்கிட்டு?'

இந்தத் தலைமுறையின் ஆதார குணம் இது.

@

ஐ.க்யூ-வைவிட இன்று ஈ.க்யூ-வை(EQ) அதிகம் பார்க்கிறார்கள், இன்டர்வியூக்களில்.

எமோஷனல் இன்டலிஜன்ஸ் என்றால் என்ன? உணர்வுகளைக் கையாளும் அறிவு. உலக அறிவைவிட தன்னைப் பற்றிய அறிவு முக்கியம் என்பதை மெள்ள பணி உலகம் கண்டுகொள்ள ஆரம்பித்திருக்கிறது.

ஈ.க்யூ வளர நிறையப் பயிற்சிகள் உள்ளன. Delay for Gratification-தான் அதன் முக்கிய அம்சம். `காத்திருந்து பொறுமையாய் பெறுதல்' அல்லது `காத்திருந்து கிடைக்காததை ஏற்றுக்கொள்ளுதல்' இந்த இரண்டும்தான் உணர்வு முதிர்ச்சியின் அடையாளங்கள்.

`ஒரு தட்டு வறுத்த முந்திரியில் ஒரு பருப்பை மட்டும் வாயில் போட்டுக்கொண்டு அதோடு நிறுத்துவதுதான் முதிர்ச்சி' எனச் சொல்லும் ஜென் தத்துவம்போல.

@


Electronic Screen Syndrome என்பதைப் பற்றி மருத்துவ உளவியல் கருத்தரங்கில் விரிவாகப் பேசப்பட்டது. ஏதாவது ஒரு ஸ்கிரீனை நிச்சயம் பார்க்க வேண்டும் என்ற addiction பரவிவருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மொபைல் இல்லாவிட்டாலோ, அல்லது அதில் சார்ஜ் இல்லாவிட்டாலோ கை நடுங்கும் அளவுக்கு withdrawal symptoms வந்துவிடுகின்றனவாம். சிடுசிடுப்பும் கோபமும் இயலாமையுமாக மீண்டும் திரையைப் பார்த்தால்தான் தீருகிறதாம்.

ஒரு தொழில்நுட்பத்தை நம் கட்டுக்குள் வைத்துக்கொள்வது அத்தியாவசியம். Internet of Things பெருகிவரும் காலத்தில் உளவியல் சவால்கள் நிச்சயம் பெருகும்.

இதை எப்படிச் சமாளிப்பது?

எதிர்கொள்வோம்!

@

காத்திருத்தல் பற்றிய ஓர் அற்புத கவிதையோடு ஹைஃபை கொடுக்கிறேன். படித்த பிறகு, எழுதியவர் யார் என யோசியுங்கள்.

`காத்திருக்கும் வரை
நம் பெயர்
காற்றென்றே இருக்கட்டும்.
புறப்படும்போது
புயலென்று புரியவைப்போம்!'


பாடலாசிரியர் யார்?

அவர் எழுதிய பாடல் `ராஜராஜசோழன் நான்..!' பாடல் 25 ஆண்டுகள் கழித்தும் இளசுகள் விரும்பும் ராஜாவின் ஹிட். அவ்வளவுதான் க்ளூ.

- மற்றவை நெக்ஸ்ட் வீக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism