Published:Updated:

ஜென் Z - “நாங்கதான் இப்ப ட்ரெண்டிங்!”

ஜென் Z - “நாங்கதான் இப்ப ட்ரெண்டிங்!”
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - “நாங்கதான் இப்ப ட்ரெண்டிங்!”

ஜே, விஜி, படங்கள்: கே.ராஜசேகரன், சக்திவேல்

ஜென் Z - “நாங்கதான் இப்ப ட்ரெண்டிங்!”

ஜே, விஜி, படங்கள்: கே.ராஜசேகரன், சக்திவேல்

Published:Updated:
ஜென் Z - “நாங்கதான் இப்ப ட்ரெண்டிங்!”
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - “நாங்கதான் இப்ப ட்ரெண்டிங்!”
ஜென் Z - “நாங்கதான் இப்ப ட்ரெண்டிங்!”

ஹிப்ஹாப் கலாசாரத்தின் இசை வடிவம்தான் `ராப்'. இதற்கு `Rhythmic American Poetry', `Rhythm and Poetry', `Rhythmically Applied Poetry' எனப் பல்வேறு பெயர் காரணங்களைச் சொல்கிறார்கள். சொல்ல நினைப்பதை கொஞ்சம் இசையுடன், நிறையக் கோபம் கலந்து கொடுப்பது என எடுத்துக்கொள்ளலாம். தமிழில் ராப் பாடல்கள் குறைவுதான். சினிமா பாடல்களில் இடையிடையே சில ராப் போர்ஷன்ஸ் வருவது உண்டு. அதைத் தாண்டி, `யூடியூபில் தமிழ் ராப் இருக்கிறதா?' எனத் தேடினோம். `Hi dude' என வாட்ஸ்அப் தட்டியதும் விகடன் ஸ்டுடியோவுக்கே வந்தார்கள்.

ஜென் Z - “நாங்கதான் இப்ப ட்ரெண்டிங்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நம்ம ஊர்ல `மியூஸிக்'னாலே சினிமா சாங்ஸ்தான். எனக்கு அது சரியாப்படலை. இத்தனை வருஷத்துல என் கி்டார்ல ஒரு சினிமா பாட்டுகூட வாசிச்சது இல்லை. இசையோட டைமென்ஷன் வேற லெவல். அதை இப்படி கன்ட்ரோல் பண்றது ரொம்பத் தப்பு ப்ரோ. இந்த மாஃபியாக் களை உடைச்செறிஞ்சு, இசையை சுதந்திரமாக்கணும்கிற தாலதான் எங்க பேண்டுக்கு `கூலிப்படை'னு பேரு வெச்சிருக்கோம்’’ - முதல் அடியே ஹெவி பன்ச் கொடுத்து ஆரம்பிக்கிறார் தமிழ் ராப் கலைஞர் சத்யா .

`` `கூலிப்படை'யில நான் ஒரு கிடாரிஸ்ட் அண்ட் சிங்கர். கிடார்னா ரொம்பப் பிடிக்கும். காலேஜ் போனதுக்கு அப்புறம் நானே பாட்டு எழுத ஆரம்பிச்சேன். அப்புறம்தான் `கூலிப்படை'ங்கிற பேர் வெச்சேன். அண்ணா யுனிவர்சிட்டி, மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்னு நிறைய இடங்கள்ல வாசிச்சிருக்கேன். ஆரம்பத்துல எங்களை பயங்கரமா கிண்டல் பண்ணுவாங்க. ஆனா, பெர்ஃபாமன்ஸ் பண்ண ஆரம்பிச்சதும் அப்படியே அது பாராட்டா மாறிடும்.  இண்டிபெண்டட் மியூஸிஷியன்ஸுக்கு இங்கே பெருசா காசு கிடைக்காது ப்ரோ. இந்த மாதிரி பாராட்டுக்கள்தான் பரிசு. நம்மளோட லைஃப்ல நடக்கிற விஷயங்களை அழகா சொல்ல உதவறதுதான் ராப். நான் ஸ்டீவன் டெய்லர், மைக்கேல் ஜாக்சன் சாங்ஸ் கேட்டுதான் இன்ஸ்பையர் ஆனேன்.

ஜென் Z - “நாங்கதான் இப்ப ட்ரெண்டிங்!”

‘பிஞ்சுக் குழந்தையின் கரங்கள் பிச்சை இங்கு எடுப்பது ஏனோ?

காதல் செய்யும் இளமைப் பருவம் கஞ்சா இங்கு இழுப்பது ஏனோ?

ஒருநாள் விடியல் வரும்... இந்தக் காட்சிகள் மறைந்துபோகுமே...

உதவும் கரங்களைக் கொடுத்து உயர்த்துவோம்!’

இந்த மாதிரியான பாட்டுதான் எழுதுறேன்.  தமிழ்நாட்ல ராப் ஃபீல்டுல அதிகமா பொண்ணுங்க கிடையாது. காரணம் அவங்களை மரியாதையா நடத்த மாட்டேங்குறாங்க. ஓட்டி எடுத்துடுவாங்க. ராப் இசை வாழ்க்கை, வருமானத்துக்குக் குறைச்சலா இருந்தாலும் மனசுக்கு நிம்மதியா இருக்கு. ஒருநாள் அடிச்சு மேல வருவோம் ப்ரோ. அப்போ மறுபடியும் மீட் பண்ணலாம்.”

கவாஸ்கர் அவினாஷ்  ``காலேஜ் படிக்கிறப்ப எனக்கும் ராப் இசையில இன்ட்ரஸ்ட் இல்லை. நம்ம மைண்ட் ஃபுல்லா டான்ஸ்தான். அப்பதான் ஏ.ஆர்.ரஹ்மானோட பேட்டி ஒண்ணு படிச்சேன். அதில் அவர் சொல்லி இருந்த எஃப்.எல்.ஸ்டுடியோன்ற சாஃப்ட்வேர் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. கொஞ்சம் கொஞ்சமா என் டான்ஸுக்கான பீட்ஸ்லாம் அதில் மிக்ஸ் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம்தான் முறையா நோட்ஸ்னா என்ன, கீனா என்னன்னுலாம் கத்துக்க ஆரம்பிச்சேன்,

மொதல்ல ராப் பாட்டு எழுதிப் பாடினப்போ என்னோட அம்மா, ‘ஏன்டா எதையோ ஒப்பிச்சுக்கிட்டே இருக்க?’னு சொல்லிட்டாங்க. அப்புறம்தான் கொஞ்சம் ரிதமிக்கா, பிட்ச் சேர்த்து ராப் பாடல்களைப் பாட ஆரம்பிச்சேன்.

ஜென் Z - “நாங்கதான் இப்ப ட்ரெண்டிங்!”
ஜென் Z - “நாங்கதான் இப்ப ட்ரெண்டிங்!”

எனக்கு ராப்ல இன்ஸ்பிரேஷன்னா அது ஹிப் ஹாப் ஆதி; அப்புறம் எமினம். அவரோட லிரிக்ஸ புரிஞ்சுக்கவே நமக்கு நாலு நாள் பிடிக்கும். இங்க ஒரே ஒரு பிரச்னை என்னன்னா, மெலடி சாங்ஸ் மக்கள் மனசில் இடம் பிடிச்ச மாதிரி ஆர்ப்பாட்டமான இந்த ராப் சாங்ஸ் இடம்பிடிக்க ஆரம்பிக்கலை. சமூகம் சார்ந்த பிரச்னைகளைக்கூட ராப் மூலமா ஈஸியா எடுத்துச் சொல்ல முடியும்கிறதுதான் ராப் ஸ்பெஷல்.

‘பிறந்த மண்ணை விட்டு வெளியே ஏறும்
கணினி மனதோடு வாழ்க்கை ஓடும்
பருவத்தோழனின் பெயரை மறந்து
இரவும் பகலுமாய் பணியை முடித்து
வரியைக் கட்டி வெளிநாட்டை வளர்க்க நாம்
பிறந்த நாடு இங்கு தளர்ந்துகிடக்க..’

எனக்கு தப்புன்னு தோணுற எதையுமே ராப் ஆக்கிடுவேன். என்னோட ஃப்ரெண்ட் ஆனந்த் கமல். அவர் என்னோட ரிதம் ஆஃப் தமிழன் பாட்டு பார்த்துட்டு அவர் டைரக்ட் பண்ற ‘நோலன் சமன்பாடு’ படத்துக்கு மியூஸிக் பண்ற வாய்ப்பு கொடுத்தார். இப்ப நானும் மியூஸிக் டைரக்டர் டூட்.”

யுகி பிரவீன் `` ‘பிரைட் ரே புரொடக்‌ஷன்ஸ்’கிற பேர்ல ஒரு பேண்டு, என் ஃப்ரெண்ட் தேவாவுடன் சேர்ந்து ஆரம்பிச்சேன். நான் பாட்டு எழுதி மியூஸிக் பண்ணுவேன். தேவா அதை ஷூட் பண்ணி, ஒரு வீடியோ ஆல்பமா தருவான். ராப் மேல காலேஜ் டைம்ல இருந்தே ஆர்வம். `குளிர் 100 டிகிரி' படத்துக்கு இசையமைத்த போபோ சசி சாருடைய நட்பு கிடைச்சது. அப்புறமாதான் இதை சீரியஸா எடுத்துக்கிட்டு செய்ய ஆரம்பிச்சேன். `கப்பல்', `காஞ்சனா 2' படங்கள்ல ராப் பாட வாய்ப்பு கிடைச்சது. எந்தெந்த வழிகள்ல எல்லாம் திறமையைக் காட்ட முடியுமோ காட்டிக்கிட்டிருக்கேன்.

`ஊலலலா'னு ஒரு ஆல்பம் பண்ணியிருந்தோம். அதுல நல்ல ரீச் கிடைச்சது. அடுத்ததா, கானா பாலாகூட சேர்ந்து `மணி ஆந்தம்’ மாதிரி ஒரு பாட்டு ரெடி பண்ணிவெச்சிருக்கோம். தமிழ்நாட்டுலயே ஃபாஸ்ட் ராப்பர் ஆகணும். 144 வார்த்தைகளை என்னால 24 நொடிகள்ல பாட முடியும். கேட்கிறீங்களா?”
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism