Published:Updated:

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

Published:Updated:
உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!
உணவு நல்லது வேண்டும்!

ஆரோக்கியமான தசைக்கு

உடலின் ஒவ்வோர் இயக்கத்துக்கும் காரணம், தசைகள். தசைகளை ஆரோக்கியமாக்குவது உணவில் உள்ள உயர்தர புரதமும் உடற்பயிற்சியும். ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் நிறைந்த மீன், ஃபிளக்ஸ் விதைகள், அக்ரூட் மற்றும் புரோகோலி, பால் பொருட்கள், நல்லெண்ணெய், இஞ்சி, வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் தசைகளின் ஆரோக்கியத்தைக் காக்கலாம்.

உணவு நல்லது வேண்டும்!

அன்னாசி - எலுமிச்சை மிக்ஸ்டு ஜூஸ்

தேவையானவை: அன்னாசிப் பழத் துண்டுகள் -  4,  சிறிய எலுமிச்சைப் பழம் - 1, சர்க்கரை, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: அன்னாசிப் பழத் துண்டுகளுடன், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை கலந்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும். தேவைப்படுபவர்கள், ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.

பலன்கள்: வைட்டமின் சி நிறைந்த ஜூஸ் இது. இரும்பு, பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு முதலான தாதுஉப்புகள் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதய நோயாளிகளுக்கு ஏற்றது. வயிற்றுப்புண் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த ஜூஸைக் குடிக்கக் கூடாது. காலையில் வெறும் வயிற்றிலோ, உணவுடன் சேர்த்தோ எடுத்துக்கொள்ளக் கூடாது.

உணவு நல்லது வேண்டும்!

வெண்டைக்காய் குடமிளகாய் சாலட்

தேவையானவை: கத்திரிக்காய், வெண்டைக்காய், குடமிளகாய் தலா - 100 கிராம், சீஸ் - 20 கிராம், மிளகு - 10 கிராம், பூண்டு - 2 பல், ஆலிவ் எண்ணெய், துளசி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குடமிளகாயை துண்டுகளாக நறுக்கி, தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் நன்றாகச் சுட்டு எடுக்கவும்.  பிறகு தோலை நீக்கி, துளசி, ஆலிவ் எண்ணெய், மிளகு, தோல் நீக்கிய பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, மையமாக அரைக்க வேண்டும். அடுத்து, கத்திரிக்காயை மிக மெல்லியதாக வட்ட வடிவிலும், வெண்டைக்காயை நீளவாக்கிலும் வெட்டி, அடுப்புத் தணலில் காட்டிச் சுட வேண்டும்.  க்ரில் வசதி இருந்தால், அதில் போட்டும் கருகவிடாமல் சுட்டு எடுக்கலாம். வெண்டைக்காய், கத்திரிக்காயை ஒவ்வொரு லேயராக அடுக்கி, அதற்கு மேல் சீஸ் போட்டு, இதன் மீது நாம் ஏற்கெனவே செய்துவைத்துள்ள குடமிளகாய் சாஸ் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

பலன்கள்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சாலட். வெண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் பி நிறைவாக உள்ளன. சீஸில் கால்சியம் உள்ளது. ஓரளவுக்கு வைட்டமின் டி-யும் உள்ளது. கால்சியத்தை எலும்பு கிரகிக்க, வைட்டமின் டி துணைபுரியும். ஃபோலிக் அமிலம் நிறைவாக உள்ளதால், கர்ப்பிணிகளுக்கு நல்லது.

உணவு நல்லது வேண்டும்!