Published:Updated:

கனவுகளின் எரிபொருள்!

கனவுகளின் எரிபொருள்!
பிரீமியம் ஸ்டோரி
கனவுகளின் எரிபொருள்!

ம.கீர்த்தனா, மு.முருகன் , படம்: கோ.ப.இலக்கியா

கனவுகளின் எரிபொருள்!

ம.கீர்த்தனா, மு.முருகன் , படம்: கோ.ப.இலக்கியா

Published:Updated:
கனவுகளின் எரிபொருள்!
பிரீமியம் ஸ்டோரி
கனவுகளின் எரிபொருள்!
கனவுகளின் எரிபொருள்!

ல்கி சுப்பிரமணியம் எழுத்தாளர், நடிகை... இப்போது ஓவியர். திருவனந்தபுரத்தில் நடந்த இவரது முதல் ஓவியக் கண்காட்சிக்கு செம வரவேற்பு. அது தந்த உற்சாகத்தில், இரண்டாவது ஓவியக் கண்காட்சியை கோவையில் நடத்தினார்.  கல்கியின் அத்தனை ஓவியங்களும் வலியையும் துயரத்தையும் சுமக்கின்றன. எல்லா முகங்களிலும் அடர்வண்ணங்கள்.

“நான் பெண்ணிலும் பெரிய பெண்.  என் பாலியல் அடையாளத்தால் நான் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அனைத்தையும் கடந்து உங்கள் முன்னால் நிற்கிறேன். என் அடையாளக் குழப்பங்களை வெளிப்படுத்தும் ஊடகமே ஓவியம்தான்” எனப் புன்னகைக்கிறார் திருநங்கையான கல்கி.

``நான் பிறவியிலேயே ஓர் ஓவியராகத்தான் இருந்திருக்க வேண்டும். சிறு வயதில் இருந்தே ஓவியங்களில் தேடல் இருந்தது. பள்ளிக் காலத்தில் எனது பாலியல் அடையாளக் குழப்பங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் மொழியாக ஓவியங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஓவியங்களின் அடிப்படை விதிகள் எதுவும் எனக்குத் தெரியாது. ஒரு தாய் தன் கருவில் உதிக்கும் குழந்தையை எப்படித் திட்டமிட முடியாதோ, அப்படித்தான் என் ஓவியங்களும். எந்தத் திட்டமிடலும் இல்லாமல்தானே வெளிப்படுகின்றன?''

``எல்லா ஓவியங்களிலும் ஏன் இவ்வளவு அடர்வண்ணங்கள்?''

``உலகை, என் கண்கொண்டு பார்க்கின்றன என் ஓவியங்கள். ஏமாற்றம், அழுகை, சோகம், மறுத்தல், புறக்கணிப்பு, தவிப்பு, காதல்... என நான் கடந்துவந்த எல்லா உணர்வுகளையும் வண்ணங்களின் வழியாக, கொண்டாட்டமாக மாற்றுகிறேன். என்னைப் பொறுத்தவரை அடர்வண்ணம் என்பது கொண்டாட்டத்தின் குறியீடு.''

``ஓவியம் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு `fuel a dream’ என்ற திட்டத்தைத் தொடங்கி யிருக்கிறீர்கள்... இதன் மூலம் என்ன செய்ய திட்டம்?''

``கல்வியும் மருத்துவமும்தான்  திருநங்கைகளுக்கு இன்னும் எட்டாக்கனிகள்.  கண்காட்சி வைப்பதற்கு முன்பே இதில் கிடைக்கும் 60 சதவிகிதப் பணத்தை திருநங்கைகளின் படிப்புச் செலவுக்குப் பயன்படுத்த முடிவு செய்துவிட்டேன். 40 சதவிகிதப் பணத்தை ஓவியம் தொடர்பான தொடர்பணிகளுக்குப் பயன்படுத்துவேன்.  பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுப்பதில் இருந்து திருநங்கைகளை விடுவிக்க வேண்டும். அவர்கள் ஈடுபடவேண்டிய உண்மையான களங்கள் இந்த உலகத்தில் ஏராளம் இருக்கின்றன. அதற்கு அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். முதற்கட்டமாக நான்கு திருநங்கைகளுக்கான கல்விச் செலவை ஏற்கிறோம். சிலருக்கு மருத்துவ உதவிகள் செய்ய இருக்கிறோம்.  இந்தப் பணிகளை படிப்படியாக விரிவுபடுத்த வேண்டும்.'' 

கனவுகளின் எரிபொருள்!

``திருநங்கைகள் பற்றி சமூகப்பார்வை மாறியிருக்கிறதா?''

``நிச்சயம் மாறியிருக்கிறது. சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்ததுதான்  அதற்குக் காரணம். எங்கள் முன்னோர்கள் எங்களைவிட பல மடங்கு துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். இன்று திருநங்கைகள் ஒரு பெண்ணைப் போல் புடவை கட்டிக்கொண்டு பெருமிதத்தோடு வாழ முடிகிறது.  பிரித்திகா யாஷினி போன்றவர்கள் அரசுப் பணியில் இணைய முடிகிறது. ஆஷா, பாரதி போன்ற மூத்த திருநங்கைகளுடைய போராட்டங்களும் தியாகங்களும்தான், இந்தத் தலைமுறைத் திருநங்கைகளுக்குச் சில வாழ்வுரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கின்றன.ஆனால், திருநங்கைகளை சகமனிதர்களாக மதிக்கிற மனோபாவம் இங்கு எல்லோருக்கும் வரவேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலியல் சமத்துவத்தைக் கற்றுத்தர வேண்டும்.  பாலியல் குழப்பங்களோடு உள்ள குழந்தைகளை ஆசிரியர்கள் புறக்கணிக்காமல் அவர்கள் மேல் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். கல்விதான் திருநங்கைகளுக்கான பெரிய சொத்து. அது தடைபடக் கூடாது. பாலியல் அடையாளம், எந்த வகையிலும் ஒருவருடைய சாதனைக்குத் தடையாக இருக்கக் கூடாது.''

``கல்கியின் தனிப்பட்ட வாழ்க்கை...?''

``நிறையக் காதல் வயப்பட்டிருக்கிறேன்; ஏமாற்றங்களையும் சந்தித்திருக்கிறேன். அவை எல்லாம் இளவயதின் இனம்புரியா ஈர்ப்பாக மட்டுமே இருந்தன. காதல் பற்றிய என் பார்வை இன்று மாறியிருக்கிறது. ஆண்களைத் தாண்டி இங்கே காதலிக்க நிறைய விஷயங்கள் இருக் கின்றன என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறேன்.''