Published:Updated:

பாப்பா எப்படி பொறக்குது?

பாப்பா எப்படி பொறக்குது?
பிரீமியம் ஸ்டோரி
பாப்பா எப்படி பொறக்குது?

பா.விஜயலட்சுமி, ஓவியம்: ஹாசிப்கான்

பாப்பா எப்படி பொறக்குது?

பா.விஜயலட்சுமி, ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
பாப்பா எப்படி பொறக்குது?
பிரீமியம் ஸ்டோரி
பாப்பா எப்படி பொறக்குது?
பாப்பா எப்படி பொறக்குது?

‘அப்பா... நான் எப்படி பிறந்தேன்?' - இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத பெற்றோரே இருக்க முடியாது. அப்படி ஓர் அப்பாதான் பப்பா; கேள்வி கேட்டுத் துளைப்பது குட்டிப்பையன் பப்பு.

யூடியூபில் சக்கைப்போடு போடும் ‘செக்ஸ் சாட் வித் பப்பு அண்ட் பப்பா’ என்ற இணையத்தொடர் நாயகர்கள் இவர்கள். இதில் பப்புவின் பாலியல்ரீதியிலான சின்னச்சின்னக் கேள்விகளுக்கு பப்பா சொல்லும் க்யூட் பதில்கள் அனைத்தும் செம வைரல். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட 15 மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்தத் தொடரின் முதல் இரண்டு எபிசோடுகள், இந்தியில் வெளியாகி இந்தியா முழுக்க  பரபரப்பைக்  கிளப்பியிருக்கின்றன.

`இது யூ.எஸ்.பி கேபிள், இது என்ன... லேப்டாப்.செல்போனை, யூ.எஸ்.பி கேபிள் வழியா  லேப்டாப்போடு இணைக்கும்போது, செல்போன்ல இருக்கும் தகவல்கள் எல்லாமே லேப்டாப்புக்குப் போகுது இல்லையா... அதுபோலதான் அப்பாவோட உயிரணுக்கள், அம்மாவோட கருமுட்டையோடு இணையுது. அப்படித்தான் நீ குட்டிப் பாப்பாவா அம்மா வயித்துக்குள்ள வளர்ந்த’ என, குழந்தைகளிடம் பேசத் தயங்கும் செக்ஸ் ரகசியங்களை அழகான உதாரணங்களின் வழியே பப்புவுக்கு விளக்குகிறார் பப்பா. 

பாப்பா எப்படி பொறக்குது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் தலைமை அதிகாரி ஆஷிஸ் பட்டேல்தான் இந்த இணையத் தொடரைத் தயாரித்து, இயக்கிவருகிறார். ‘`மாதவிடாய் என்றால் என்ன என்பதை, ஒரு சிறுமிக்குக்கூடச் சொல்லிக்கொடுக்கும் கடமை எப்படி அம்மாவுக்கு இருக்கோ, அதேபோல  ஆண் குழந்தைகளின் பாலியல் சார்ந்த சந்தேகங்களைத் தீர்த்துவைக்கிற கடமை அப்பாக்களுக்கும் இருக்கு. அப்பதான் பாலியல்ரீதியிலான தவறுகளை சமூகத்தில் பெருமளவில் குறைக்க முடியும்'’ என்கிறார் பட்டேல்.

`பாலியல் கல்வியை, குழந்தைகளுக்கு  சரியான முறையில் சொல்லிக்கொடுங்க' என்கிற குரல்கள் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. பாலியல் குற்றங்கள் பெருகி வரும் சூழல் இன்னொரு பக்கம்.

இத்தகைய தருணத்தில் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது, அவசியமானது!