Published:Updated:

ஜென் Z - மீம்ஸ்டா!

ஜென் Z - மீம்ஸ்டா!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - மீம்ஸ்டா!

சிபி, படங்கள்: கே.ராஜசேகரன்

ஜென் Z - மீம்ஸ்டா!

சிபி, படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
ஜென் Z - மீம்ஸ்டா!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - மீம்ஸ்டா!
ஜென் Z - மீம்ஸ்டா!

வங்க எல்லாம் யாரு... எங்க இருக்காங்க... எப்படி இப்படி யோசிக்கிறாங்க என ஆச்சர்யப்படவைப்பவர்கள் மீம் க்ரியேட்டர்கள். சோஷியல் மீடியாவின் ஹிட் மாஸ்டர்கள்; மிகப்பெரிய அரசியல் மாற்றங்களைக்கூட ஜஸ்ட் லைக் தட் ஒரு மீமில் வைரைலாக மாற்றும் வல்லவர்கள்.  கருணாநிதி - ஜெயலலிதா, வைகோ - விஜயகாந்த், ரஜினி - கமல், விஜய் - அஜித் என எவரையும் விட்டுவைக்காமல் மீம்ஸ் போட்டு மிரட்டுபவர் களுடன், ஒரு மினி காபி ஷாப் மீட்டிங் போட்டேன். மீம்ஸ் போலவே மீட்டிங்கும் செம ரகளை.

ஜென் Z - மீம்ஸ்டா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில் ஃபேஸ்புக்கில் தூள்கிளப்பும் மீம் பேஜ் `சென்னை மீம்ஸ்' ஸ்ரீகணேஷ் பேசினார்.

`` `சென்னை மீம்ஸ்' டீம்ல மொத்தம் பத்து பேர் இருக்கோம். கல்லூரி மாணவர்கள் தொடங்கி எல்லாருமே வேற வேற வேலைகள்ல இருப்பவங்க. இந்த பேஜ் 2014-ல ஆரம்பிச்சோம். முதல்ல போட்டோ மீம்ஸ் மூலமாத்தான் நாங்க பாப்புலர் ஆனோம். ஆனா, இப்போ வீடியோ மீம்ஸ்தான் ட்ரெண்ட்.

எலெக்‌ஷன் சமயத்துல விஜயகாந்த் பல இடங்கள்ல பேசினதைத் தொகுத்து, வீடியோ மீம்ஸ் செஞ்சு போட்டோம். லைக், ஷேர்னு `பொண்ண' ரெஸ்பான்ஸ். கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த கிரிக்கெட் மேட்ச்ல விராட் கோஹ்லி, ஆஸ்திரேலியா வீரர்கள் போடும் பந்தை எல்லா பக்கத்துக்கும் சிதறவிட்டு இந்தியாவை ஜெயிக்கவெச்சப்ப... வேகமா வரும் ரயில்ல கார் மோதி சிதறுவதுபோல போட்ட மீம் செம வைரல். `ஆடுகளம்' தனுஷ் `விட்டுராதடா தம்பி... விட்டுராத'னு சொல்வாரே அப்படி தோனிக்கு வெச்சுப் போட்ட மீம் பட்டையைக் கிளப்புச்சு. ரவிச்சந்திரன் அஷ்வின், சுரேஷ் ரெய்னானு எல்லா கிரிக்கெட்டர்களுமே இதை ரசிச்சு ஷேர் பண்ணாங்க.

ஜென் Z - மீம்ஸ்டா!

போன வாரம் ஒரு மான் படத்தைப் போட்டு, `சல்மான் கான் என்னைக் கொல்லவில்லை. நான்தான் தற்கொலை பண்ணிக்கிட்டேன்'னு போட்ட மீம்ஸ் செளக்கார்பேட்டை பக்கம் செம ஷேரிங். இப்படி அந்தந்த சீஸனுக்குத் தகுந்த மாதிரி மீம்ஸ் போட்டா ஷேர்ஸ் அள்ளலாம்’’ என்ற ஸ்ரீகணேஷிடம், ``மீம்ஸை எல்லாம் எப்படி ஒரு குரூப்பா யோசிச்சுப் போடுவீங்களா?’’ எனக் கேட்டால், ``ஒருத்தர்தான் மீம் க்ரியேட் பண்ணுவார். ஆனா, அதை எங்க வாட்ஸ்அப் குரூப்ல போட்டு எல்லாரும் அதுக்கு அப்ரூவல் கொடுத்தாத்தான் ஃபேஸ்புக்ல போஸ்ட் பண்ணுவோம்'' என்றவரிடம்  மீம் க்ரியேட்டர்களுக்கு கேர்ள்ஸ்கிட்ட இருந்து நிறைய ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வருமே என்றால், ``நிறைய கேர்ள்ஸ் எங்ககூட ஃப்ரெண்டா இருக்கணும்னு நம்பர் கேட்பாங்க. `நம்பர் கொடுக்கலாம்’னு மனசுக்குள்ள ஆசை இருந்தாலும், எங்க டீம் ரூல்ஸ்படி கொடுக்கக் கூடாதுங்கிறதால கனத்த மனசோடு அதை மறுத்துடுவோம்'' என்கிறார்  ஜெயகாந்தன்.

``ஒரு தடவை விஜயகாந்த் மீம்ஸ் போட்டப்போ தே.மு.தி.க மெம்பர்ஸ் எல்லாரும் ஒண்ணுசேர்ந்து `வாங்கடா... வாங்கடா...'னு இன்பாக்ஸ்ல செமயா மிரட்டினாங்க. எங்க பேஜை ஏப்ரல் 16-ம் தேதியில இருந்து மே-16-ம் தேதி வரைக்கும் பிளாக் பண்ணிட்டாங்க. எங்களுக்கு அந்த ஒரு மாசம் கை உடைஞ்ச மாதிரி ஆகிடுச்சு. இன்னொரு பேஜ் உடனே ஸ்டார்ட் பண்ணினோம். ஒரு மாசத்துலயே ஒரு லட்சம் லைக்ஸ் வந்தது. நாங்களே மிரண்டுட்டோம்” எனச் சிரிக்கிறார் ஜெயகாந்தன்.

ஜென் Z - மீம்ஸ்டா!

சென்னை மீம்ஸுக்கு அடுத்தபடியாக லயோலா மீம்ஸ் செம பாப்புலர்.

``லயோலாவுல ஸ்டூடன்ட் யூனியன் எலெக்‌ஷன் செம அட்ராசிட்டியா இருந்தது. அப்ப லயோலா காலேஜ் பேர்லயே ஒரு பேஜ் உருவாக்கி மீம்ஸ் போட்டேன். பத்தாயிரம் மாணவர்கள் லயோலா கேம்பஸ்ல இருக்கிறதால உடனே லைக் பண்ணி ஷேர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இப்ப எங்க காலேஜ் தாண்டி எல்லா காலேஜ் பத்தியும் மீம்ஸ் போட ஆரம்பிச்சுட்டோம். பல ஆயிரம் லைக்ஸ் தாண்டி பேஜ் எங்கயோ போயிட்டிருக்கு’’ என ஆட்ரியன் நிறுத்த, தொடர்கிறார் இன்னொரு அட்மின் தீபன் ராஜ்.

``நாங்க மீம் க்ரியேட் பண்றது எல்லாமே எங்க போன்லதான். ஐடியா எப்படி வரும்னே தெரியாது. சில நேரம் தூங்கும்போதுகூட ஐடியா வரும். தூக்கத்துல இருந்து எழுந்து உடனே மீம் போட்டுட்டுத் தூங்கிடுவேன். சும்மா இருக்குற நேரத்துல எல்லாம், பிரபலங்களோட வித்தியாசமான எக்ஸ்பிரஷன்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சேவ் பண்றதுதான் எங்க வேலையே. எங்களுக்கு பேஜ் வியூஸ் ரொம்ப முக்கியம். எங்க ஆடியன்ஸ் 18 வயசுல இருந்து 24 வயசு வரைக்கும்தான். டெய்லி ரெண்டு மூணு மீம்ஸாவது போடுவோம். காலேஜுக்கு லீவ் விட்டா போதும் மீம்ஸா பறக்கும். இதுவரைக்கும் இந்த பேஜ்க்கு அட்மின் யார்னு காலேஜ்ல யாருக்குமே தெரியாது. இப்ப விகடன் மூலமா தெரியப்போகுது’’ என்கிறார் லயோலா மீம்ஸின் பரத்.

ஜென் Z - மீம்ஸ்டா!

`` `கபாலி’ டீஸர் வந்த அடுத்த அஞ்சாவது நிமிஷம் ரஜினி சொல்லும் டயலாக்கை `லயோலா'வோடு கம்பேர் பண்ணி மீம்ஸ் போட்டோம். `இப்பதானடா டீஸரே வந்தது... அதுக்குள்ள போட்டுட்டீங்களா?'னு கலாய்ச்சாங்க. மீம்ஸ் போட்டுக்கிட்டே இருக்கிறதுனால படிப்புல மக்கு பசங்கனு நினைச்சுடாதீங்க ப்ரோ. எங்களுக்கு மீம் பண்றது ஹாபி. மத்தபடி நாங்க எல்லோரும் காலேஜ்ல குட் மார்க் வாங்கும் குட் பாய்ஸ்தான்’’ என பரத் சொல்லும்போதே, ``இப்பகூட விகடன் பேட்டிக்கு மீம் க்ரியேட் பண்ணிட்டிருக்கேன்'' என மீம்ஸைக் காட்டிச் சிரிக்கிறார் ஜோஜி.