Published:Updated:

ஜென் Z - ரீட்விட் Vs ஷேர்

ஜென் Z - ரீட்விட் Vs ஷேர்
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - ரீட்விட் Vs ஷேர்

கே

ஜென் Z - ரீட்விட் Vs ஷேர்

கே

Published:Updated:
ஜென் Z - ரீட்விட் Vs ஷேர்
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - ரீட்விட் Vs ஷேர்

ஜினி Vs கமலில் ஆரம்பித்து, இப்போது விஜய் Vs அஜித்தில் வந்து நிற்கிறது ரசிகர்களின் சண்டை. நடிகர்களைத் தாண்டி ராஜா - ரஹ்மான் ரசிகர்கள் சண்டையும் ஆன்லைனில் ஃபேமஸ். இந்த ரசிக ரெஸ்லிங்கில் முக்கிய சண்டை, ட்விட்டர் Vs ஃபேஸ்புக் பஞ்சாயத்து.

எப்பப் பாரு Fighting... Why? - சம்பவக்காரர்களிடம் விசாரித்தோம்.

`ட்விட்டர்'ங்கிறது ஃப்ரெண்ட்ஸ்கூட கோவா போற மாதிரி. `ஃபேஸ்புக்'ங்கிறது குடும்பத்தோடு கும்பமேளா போற மாதிரி.

ஜென் Z - ரீட்விட் Vs ஷேர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ட்விட்டர்ல இன்ட்ரோ ஆகாத ஆளுங்ககூட ஃப்ரெண்ட்ஸ் மாதிரிதான். ஆனா ஃபேஸ்புக்ல, குளோஸ் ஃப்ரெண்ட்ஸ்கூட Strangers-தான். பக்கத்து ஊர்ல பார்த்தாக்கூடத் தெறிச்சு ஓடுறாங்க. ‘பயம்... tag பண்ணிடுவானோனு பயம்!’

`யாரு... என்ன நினைப் பாங்களோ?'னு கவலைப்படாம ட்விட்டர்ல பேசலாம். ஆனா, ஃபேஸ்புக்ல முடியுமா... இல்ல முடியுமா? நாம போடுற ஒவ்வொரு லைக்கும் நம்மை ஜட்ஜ் பண்ணத்தான் கவனிப்பாங்க. ஃபன்னி கைஸ்.

போட்டோ போட்டா லைக்ஸா விழும். ஆனா, கருத்தா எழுதினா கண்டுக்க மாட்டாங்க FB fellas. ட்விட்டர்ல கிரியேட்டிவான எழுத்துக்குத்தான் RT கிடைக்கும். நல்லதுதான் ஜெயிக்கும். ஜெய் மகிழ்மதி!

`ட்விட்டர்'... கேர்ள் ஃப்ரெண்ட் மாதிரி பாஸ். `ஃபேஸ்புக்'...பொண்டாட்டி மாதிரி. வசதிக்கு கேர்ள் ஃப்ரெண்ட் ஓ.கே. ஆனா, வாழ்க்கைக்கு வொய்ஃப்தானே பெஸ்ட்!

ட்விட்டர்ல நாலு வார்த்தைகள் சேர்ந்தா மாதிரி பேசுறாங்களா? சென்னைக்காரன் இனிஷியல் போட்டுப் பேசற மாதிரி #Icantlive, I went to #pondy with #friends. #Whattay #rockcity. இப்படி எதை எழுதினாலும் அதைக் கொத்துக் கொத்தா எழுதுவாங்க. ஆனா ஃபேஸ்புக்ல, பொறுமையாக நிதானமா ரசிச்சு ருசிச்சு எவ்ளோ வேணா எழுதலாம். வாட்ஸ்அப்ல ஷேர் ஆகுதே, அதுல பாதி மேட்டர் ஃபேஸ்புக்ல எழுதினதுதான்.

ட்விட்டர்ல எல்லோருமே முகமூடியைப் போட்டுக்கிட்டே சுத்துறாங்க. அவங்க `டி' யா... `டா' வா, சென்னையா... சான் பிரான்சிஸ்கோவா ஒண்ணும் தெரியாது. ஆனா, எஃப்.பி-யில ஃபேமிலி ட்ரீயே போட்டு வெச்சிருக்கோம். இங்கே வாய்மைதான் வெல்லும்.

ட்விட்டர், மணிரத்னம் படம் மாதிரி இருக்கலாம். ஆனா, எஃப்.பி ஷங்கர் படம் மாதிரி. கூட்டணிதான் இங்கே குஷி தரும்!

யாரு ஜெயிச்சாங்கங்கிற தைத்தான் ட்விட்டர்ல எழுத முடியும். எப்படி ஜெயிச்சாங்கங் கிறதை எஃப்.பி-யிலதான் எழுத முடியும்!