Published:Updated:

ஜென் Z - நான் ஜெயவீணா ஆனது எப்படி?

ஜென் Z - நான் ஜெயவீணா ஆனது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நான் ஜெயவீணா ஆனது எப்படி?

சிபி

ஜென் Z - நான் ஜெயவீணா ஆனது எப்படி?

சிபி

Published:Updated:
ஜென் Z - நான் ஜெயவீணா ஆனது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நான் ஜெயவீணா ஆனது எப்படி?
ஜென் Z - நான் ஜெயவீணா ஆனது எப்படி?

ஜெயவீணா... இந்தியாவின் முக்கியமான நீச்சல் வீராங்கனை. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி களுக்கு இப்போதே ரெடி.

“என் அண்ணா ஜேவந்த், ஸ்விம்மிங் போட்டியில் கலந்துக்கப்போனார். அங்கே வேடிக்கை பார்க்க அம்மா என்னையும் கூட்டிட்டுப்போனாங்க. நீச்சல் குளத்தைப் பார்த்ததும் செம குஷியாகிட்டேன். `இறக்கிவிடுங்க'னு கத்தி ஆர்ப்பாட்டம் செஞ்சேன். உடனே ஸ்விம்மிங் கோச், எங்க அப்பாகிட்ட (நடிகர் `தலைவாசல்' விஜய்) ‘அவளைத் தூக்கித் தண்ணியில போடுங்க. தண்ணியைக் குடிச்சுட்டானா பயந்துடுவா’னு சொல்லியிருக்கார். சுத்தி சில‌ பேர் நிற்க, 6 அடி ஆழ நீச்சல் குளத்துல என்னைத் தூக்கிப் போட்டாங்க. ஆனா, நான் அழலை, கத்தலை. தண்ணியைப் பார்த்து என்ஜாய் பண்ண‌ ஆரம்பிச்சேன். தண்ணி என் பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆனது இப்படித்தான்.

ஜென் Z - நான் ஜெயவீணா ஆனது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலையில 4 மணிக்கு ட்ரெய்னிங் கிளப் போய்டுவேன். ‘வார்ம்அப்’ செஞ்சுட்டு 5 மணிக்கு அந்தக் குளிர்ந்த நீரில் குதிச்சேன்னா... ரெண்டு மணி நேரம் ட்ரெய்னிங். அப்புறம் ஸ்கூல். ஈவினிங் மறுபடியும் நீச்சல். ரெண்டையும் சமாளிக்கிறது ரொம்பக் கஷ்டமா இருந்தது. ‘அப்பா, நான் ஸ்கூலுக்குப் போகலை. ஸ்விம்மிங் மட்டும் பண்றேன்’னு சொன்னப்போ, நான் நாலாம் கிளாஸ் படிச்சுட்டிருந்தேன். அப்பா கோபப்படலை. `ஸ்விம்மிங் கத்துக்கோ, வீட்டில் இருந்தே பாடத்தையும் படி’னு சொல்லி அதற்கான ஏற்பாடுகளைச் செஞ்சார்.

12 வயசுல `சீக்கிரமே தேசியப் போட்டிகளில் கலந்துக்கிட்டு ஜெயிக்கணும்’னு எனக்கு நானே தினமும் சொல்லிப் பேன். 2012-ம் ஆண்டு பிப்ரவரியில் ராஞ்சியில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. ஆறு பிரிவுகளில் கலந்துக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், யாருக்குமே என் மேல் நம்பிக்கை இல்லை. அப்பாகூட நான் ஆசைப்படுறேன்னுதான் அனுப்பிவைச்சார். அங்கே ஒலிம்பிக்ல விளையாடத் தேர்ந் தெடுக்கப்பட்ட வீரர்கள்கூட வந்திருந்தாங்க. முதல்ல ‘50m Breast stroke’ போட்டி. ‘டேக் யுவர் மார்க். ரெடி... செட்... கோ!’னு காதுல விழுந்ததும் துள்ளி எழுந்து, நீச்சல் குளத்துல மீன்போல குதிச்சது மட்டும்தான் தெரியும். அக்கரையைத் தொட்டு எழுந்து, என் கோச்சை முதல்ல‌ பார்த்தேன். அடுத்து ஸ்கோர்போர்டைப் பார்த்தேன். 35.42 விநாடி களில் கடந்து தேசிய அளவில் முதல் தங்கப் பதக்கத்தை வாங்கினேன். அங்கே ஆறு பிரிவுகளில் நாலு போட்டிகள்ல முதலாவது இடம். ஒரு போட்டியில் இரண்டாவது இடமும், வேற ஒரு போட்டியில் மூன்றாவது இடமும் பிடித்தேன். கலந்துகொண்ட ஆறு பிரிவுகள்லயும் பரிசை அடிச்சாச்சு!

ஜென் Z - நான் ஜெயவீணா ஆனது எப்படி?

`என்னை வெற்றியோ, தோல்வியோ எதுவுமே பெரிசா பாதிக்கலை. தோல்வி வந்தாலும், வெற்றி பெற்றாலும் லேசா சிரிப்பேன். அவ்வளவுதான். விளையாட்டுல யாரோ ஒருத்தர் ஜெயிக்கணும், ஒருவர் தோற்கணும். அதுதான் விதி.

அப்பா-அம்மா, நான் ஆசைப்படேன்கிற ஒரே காரணத்துக்காக ஸ்கூலுக்கு அனுப்பாம ஸ்விம்மிங் அனுப்பியிருக்காங்க. அவங்களுக்கும், நம்ம இந்திய‌ நாட்டுக்கும் ஏதாவது செய்யணும்தான் என் கவனம் இருக்கு. அவங்களுக்கு நன்றினு ஒரு வார்த்தையைச் சொல்வதைவிட, சர்வதேச அளவில் பதக்கங்கள் ஜெயிச்சு ‘தேங்க்ஸ்’ சொல்லணும்னு ஆசை.

இப்ப எனக்கு வயசு 17. அடுத்த ஒலிம்பிக் 2020-ல் நடக்கும். அப்ப நிச்சயமா இந்தியா சார்பில் கலந்துக்கிட்டு வின் பண்ணுவேன்” என, நீச்சல் குளத்தில் ஏவுகணையைப்போல் பாய்கிறார்!

பொழுதுபோக்கு...
யூடியூபில் ஸ்போர்ட்ஸ் வீடியோக்கள் பார்ப்பது. ஒலிம்பிக்ல ஜெயிச்சவங்க பற்றிய தகவல்களைச் சேகரிப்பது.

ரோல்மாடல்...
மைக்கேல் ஃபெல்ப்ஸ், உசேன் போல்ட்.

மந்த்ரா...
இலக்கை நிர்ணயித்து அதில் முழுமையாகக் கவனம் செலுத்தி உழைப்பது.

ஸ்டைல்...
பிரெஸ்ட் ஸ்ட்ரோக்.

பிடித்த நீச்சல் குளம்...
புனேவில் உள்ள பலைவாடி.

டிப்ஸ்...
“ஸ்விம்மிங் பண்ணும்போது மட்டும்தான் உடம்பில் உள்ள எல்லா உறுப்புகளும் வேலைசெய்யும். இது எந்த கேமிலும் இல்லாத ப்ளஸ். டைம் கிடைச்சா நிச்சயம் ஸ்விம் பண்ணுங்க.”

பிடித்தது...
நீரும், நீச்சல் குளமும்.