Published:Updated:

ஜென் Z - நல்ல கீரை

ஜென் Z - நல்ல கீரை
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நல்ல கீரை

சிபி

ஜென் Z - நல்ல கீரை

சிபி

Published:Updated:
ஜென் Z - நல்ல கீரை
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நல்ல கீரை
ஜென் Z - நல்ல கீரை

டோர் டெலிவரியில் பீட்சாவில் இருந்து ஃப்ரிட்ஜ் வரைக்கும் வாங்கியிருப்பீர்கள். கீரை வாங்கியிருக் கிறீர்களா?

இயற்கை விவசாய முறையில் விளைவித்த கீரைகளை, சென்னையில் வீட்டுக்கே வந்து தருகிறார்கள், ‘நல்ல கீரை’ அமைப்பினர்.

ஓர் ஆண்டுக்கு 4,460 ரூபாய் கட்டி ‘சப்ஸ்க்ரைப்’ செய்துகொண்டால் போதும். வாரம் ஒருமுறை ஐந்து வகையான கீரைகளை டோர் டெலிவரி செய்கிறார்கள். அன்றாடம் விளையும் பொருளுக்கு சந்தா முறை சாத்தியமா, எங்கு பிறந்தது இந்த ஐடியா? இது குறித்து `நல்ல கீரை’ அமைப்பின் நிறுவனர் ஜெகன்நாதனிடம் பேசினோம்.

“திருநின்றவூர் பக்கத்துல மேலப்பேடு கிராமம்தான் எனக்குச் சொந்த ஊர். நான் பெருசா படிக்கலை. எங்க கிராமத்துல குழந்தைகளுக்கு சர்வதேசத் தரத்துல ஒரு பள்ளி தொடங்க ஆசைப்பட்டோம். அப்படித் தொடங்கின பள்ளியை, 13 வருஷமா நடத்திட்டு வர்றோம். ஒருநாள் எங்க மாணவி ஒருத்தரோட அப்பாவைச் சந்திச்சப்ப கிடைச்ச அதிர்ச்சியான அனுபவம், என்னைத் தூங்கவிடலை. அவர் ஒரு விவசாயி. ஆனால் ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட வழி இல்லாமல் வயிற்றில் ஈரத்துணியுடன் படுத்திருந்தார். அந்த நள்ளிரவில் எனக்குள் விழுந்த விதைதான் ‘நல்ல கீரை’ அமைப்பு!'' என்கிறார் ஜெகன்நாதன்.

ஜென் Z - நல்ல கீரை

“ரசாயன உரத்தைத் தவிர்த்து இயற்கை முறைக்கு மாற, முதல்ல மண்ணில் நுண்ணுயிர்கள் நிறைத்து ஆரோக்கியமானதா மாத்தணும். அதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம். ரசாயன உரம் பயன்படுத்துவது, புலி வாலைப் பிடிச்ச கதைதான். இந்த மூன்று வருடங்களுக்கு, அவர்களுக்கு ஏதாவது பண உதவி செய்ய முடியுமானு யோசிச்சப்ப பிடித்த ஸ்மார்ட் ஐடியாதான் இந்த ‘நல்ல கீரை’. 

ஆரம்பத்துல எல்லாமே தோல்விகள்தான். தொடர் முயற்சியால் 25 சென்ட் நிலத்தில் 40 வகையான கீரைகளை வளர்த்தா, மாதம் லாபம் 20,000 ரூபாயைப் பெற முடியும்னு கண்டுபிடிச்சோம். 25 சென்ட் நிலத்தில் எந்த 40 வகைக் கீரைகளை, எப்படி வளர்ப்பதுனு சுலபமாத் தெரிஞ்சுக்க, எங்க சாஃப்ட்வேர் உதவும். 25 சென்ட்ல கீரை வளர்க்கணும்னு எந்த விவசாயியாவது ஆசைப்பட்டா, அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி, விளையவைத்து, மார்க்கெட்டிங் வரை உதவிசெய்றோம்.

மக்கள் இயற்கைப் பொருட்கள் அங்காடிக்குள்  போறதுக்கே இப்போ பயப்படுறாங்க. காரணம், கூடுதல் விலை. இந்தச் சூழலையும் நாங்க உடைக் கணும்னு நினைச்சோம். அப்போதான் கீரையை சந்தா முறையில் மக்களிடம் கொண்டுசேர்க்கலாம்னு தோணுச்சு. உணவுப் பொருளுக்கு, முன்கூட்டியே யாரும் முன்பணம் வாங்குவதும் இல்லை... கொடுப்பதும் இல்லை. ஆனால், ‘நல்ல கீரை’ மூலம் இதைச் சாதிச்சுட்டோம்” என்னும் ஜெகன்நாதனின் முகத்தில் மகிழ்ச்சி ஸ்மைலிகள்.

நல்ல கனவுகள் நனவாகட்டும்!