Published:Updated:

ஜென் Z - பாட்டாவே பாடிட்டியா!

ஜென் Z - பாட்டாவே பாடிட்டியா!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - பாட்டாவே பாடிட்டியா!

கே

ஜென் Z - பாட்டாவே பாடிட்டியா!

கே

Published:Updated:
ஜென் Z - பாட்டாவே பாடிட்டியா!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - பாட்டாவே பாடிட்டியா!
ஜென் Z - பாட்டாவே பாடிட்டியா!

ப்போது எல்லாம், ரீசார்ஜ் செய்த நெட் பேக் தீர்வதற்குள் ட்ரெண்டே மாறிவிடுகிறது. `வாட்ஸ்அப்பா... கம் டு ஹைக் மேன்' என்கிறார்கள் காலேஜ் கவர்னர்ஸ். தங்கம் விலையைவிட வேகமாக மாறும் இவர்களின் மொபைல் உலகில், இப்போதைய ஹாட்டான விஷயம் ஸ்மூல் (Smule App) செயலி.

 தெருக்கு நான்கு சூப்பர் சிங்கர்கள் உலவும் தமிழ்நாடு இது. போன் பண்ணா, காலர் ட்யூன் வருதா... இல்லை அவங்களே பாடுறாங்களானே தெரியாம முழிக்கிறோம். அந்தச் சிங்கார சிங்கர்களை மனசுலவெச்சு உருவாக்கப்பட்ட கரோக்கி மியூஸிக் ஆப்தான் `ஸ்மூல்'.

இங்கே பாப், ராப், பாலிவுட், கோலிவுட் என பல வகை, பல மொழிப் பாடல்களின் கரோக்கே வெர்ஷன்கள் கிடைக்கின்றன. டவுண்லோடு செய்து, சைன் இன் செய்ததும் அந்தப் பாடல்களைக் கேட்கலாம். பாடல் வரிகள் ஸ்கிரீனில் ஓட, பின்னணியில் இசை மட்டும் நம் ஹெட்போனில் கேட்கும். நாமே கார்த்திக்காகவோ, அனிருத்தாகவோ மாறி பாடி, ரிக்கார்ட் செய்துவிடலாம். இந்த காப்பி - பேஸ்ட் வேலை முடிந்ததும்தான் விஷயமே இருக்கிறது.

ஜென் Z - பாட்டாவே பாடிட்டியா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபேஸ்புக் போலவேதான் இந்த நெட்வொர்க்கும். நமக்குனு சில ஃப்ரெண்ட்ஸ். நாம ஃபாலோ பண்ண கொஞ்ச பேர். நம்மளை ஃபாலோ பண்ண கொஞ்சம் பேர். கரோக்கேல நாம பாடுற பாடல் டைம்லைனில் அப்டேட் ஆகும். நம் லிஸ்ட்டில் இருக்கும் நண்பர்கள் அந்தப் பாடலைக் கேட்கலாம்; கமென்ட் பண்ணலாம்; லைக் பண்ணலாம். நம் நண்பர்களைத் தாண்டியும் பலர் அந்தப் பாடலை ரேட் பண்ணுவாங்க.

`பாஸ்.. உங்களுக்கு அந்த டி மைனர் சரியா வரலை. நீங்க ஏன் `வாள மீனுக்கும் விளாங்கு மீனுக்கும்...’ பாடலை ட்ரை பண்ணக் கூடாது. அதுல மேக்ஸிமம் சி நோட்தான் வரும்' என கமென்ட் வரும். அந்தப் பாடலைப் பாடி அப்லோடு செய்தால், லைக்ஸ் எகிறும். டி.வி நிகழ்ச்சிகளில்கூட ஒரு வாய்ஸ் எக்ஸ்பெர்ட்தான் பாடகர்களை உருவாக்குவார்கள். ஸ்மூலில் உங்களுக்காக பல நூறு அனந்த் வைத்தியநாதன்கள் காத்திருக்கிறார்கள்!

Lets sing folks.